நிர்வாகம், மேலாண்மை: என்ன வித்தியாசம்?

By ஜி.எஸ்.சுப்ரமணியன்

ஒரு வாசகர் “Tables that do not have drawers” என்பது சரியா? அல்லது “Tables which do not have drawers” என்பது சரியா?

இப்படியொரு சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார். மிக இயல்பான, பலருக்கும் எழ வாய்ப்புள்ள சந்தேகம்தான். ஆனால் இதற்குத் தெளிவு கிடைக்க வேண்டுமென்றால் அந்த வாக்கியம் முழுமையாக இருக்க வேண்டும்.

எது முழுமை?

வாசகர் அளித்த இரண்டு உதாரணங்களுமே முழுமையான வாக்கியங்கள் அல்ல. எனவே நாமாக அவற்றை முழுமையான வாக்கியங்களாக மாற்றிக்கொள்வோம்.

(1) Tables that do not have drawers are not comfortable to work with.

(2) Tables, which do not have drawers, are not comfortable to work with.

எது சரி?

இந்த இரண்டில் எது சரி?

ஆங்கிலத்தில் restrictive clause, non-restrictive clause என்று இரண்டு வகைகள் உண்டு.

Non-restrictive clause என்றால் வாக்கியத்தின் அந்தப் பகுதியை நீக்கிவிட்டால், வாக்கியத்தின் அர்த்தம் மாறிவிடாது. Restrictive clause-ஐ நீக்கினால் வாக்கியத்தின் அர்த்தமே மாறிவிடும்.

“that do not have drawers”, “which do not have drawers” – இந்த இரண்டில் எது restrictive clause?

பார்ப்போம்.

‘that / which do not have drawers’ என்பதை நீக்கிவிட்டால் வாக்கியத்தின் அர்த்தம் மாறுபடுகிறதா, இல்லையா? நிச்சயம் மாறுகிறது. Tables are not comfortable to work with என்பது சொல்ல வந்த கருத்து அல்ல. (எல்லா மேஜைகளுமே வசதி இல்லாதவை அல்ல. அதாவது drawers உள்ள tables என்றால் நிச்சயம் comfortableதான்).

ஆகவே “that/which do not have drawers” என்பது restrictive clause.

Restrictive clause உள்ள பகுதிக்கு முன்னால் that என்பதைப் பயன்படுத்த வேண்டும். Non-restrictive clause உள்ள பகுதிக்கு முன்னால் which பயன்படுத்த வேண்டும். எனவே table that do not have drawers என்று இங்குப் பயன்படுத்துவதே சரி.

(1) I placed my laptop on a table, which was in my office.

(2) I placed my laptop on a table that was in my office.

இவற்றில் எது சரி? இரண்டு வாக்கியங்களிலுமே உள்ள பிற்பகுதியை (அதாவது that அல்லது which என்று தொடங்கும் பகுதியை) நீக்கிவிடலாம். I placed my laptop on my table என்று மட்டும் எழுதினால் வாக்கியத்தின் அர்த்தம் மாறிவிடவில்லை. அது அலுவலகத்திலுள்ள மேஜை என்பது ஒரு கூடுதல் தகவல் அவ்வளவுதான். எனவே வாக்கியத்தின் பிற்பகுதி ஒரு non-restrictive clause. எனவே which என்பதைப் பயன்படுத்துவதுதான் சரி.

பொதுவாக non-restrictive clauses அடைப்புக் குறிகளுக்குள் பயன்படுத்தப்படும் அல்லது அதற்கு முன்பும் பின்பும் comma இருக்கும்.

இந்த இரண்டு வார்த்தைகளையும் (that, which) ஆகியவற்றை மாற்றிப் போட்டால் வாக்கியத்தின் அர்த்தம் மாறிவிடலாம்.

My cell phone that is sleek is very attractive.

My cell phone, which is sleek, is very attractive.

இவற்றில் முதல் வாக்கியம் என்னிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள் உள்ளன என்று அர்த்தப்படுத்துகிறது. அது மட்டுமல்ல, sleekக்காக உள்ள செல் போனைத் தவிர மற்றவை very attractive அல்ல என்றும் பொருள் தருகிறது.

இரண்டாவது வாக்கியம் sleek ஆன என்னுடைய செல்போன் மிகக் கவர்ச்சிகரமானது என்று பொருள் தருகிறது.

SPELL

“Spell என்றால் ‘உச்சரி’ என்றுதானே அர்த்தம்? “The plans would spell disaster for the economy’’ என்று ஒரு நாளிதழில் படித்தேனே!’’

இப்படிக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். Spell என்ற வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் உண்டு. அவற்றில் ‘விளைவாக’ என்பதும் ஒன்று. நாளிதழில் படித்த வாக்கியத்தின் பொருள்: “இந்தத் திட்டங்களின் விளைவாகப் பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பு உண்டாகும்”.

Spell என்பது மேலே உள்ள இரண்டு அர்த்தங்களிலும் verb ஆகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையை noun ஆகப் பயன்படுத்தினால் அதற்கு வேறு சில அர்த்தங்கள் உண்டு.

‘வசியம்’ என்பது ஒரு அர்த்தம்.

He cast a spell on the woman. He woke up from the magician’s spell.

ஒரு சிறிய காலகட்டத்துக்கும் spell என்று கூறுவதுண்டு. I want to take a break for a spell.

Administration – Management

Administration என்பதை நிர்வாகம் என்றும் Management என்பதை மேலாண்மை என்றும் குறிப்பிடுகிறார்கள். ஒன்றுக்குப் பதிலாக இன்னொன்றை அவ்வப்போது மாற்றி மாற்றிக் குறிப்பிடுகிறார்கள். இரண்டுக்குமிடையே சில அடிப்படை வேறுபாடுகள் உண்டு.

Administration எனும்போது நிறுவனத்தின் உரிமையாளர்கள் அல்லது பங்குதாரர்களைக் குறிக்கிறோம். அதாவது நிறுவனத்தில் முதலீடு செய்து லாபங்களை எடுத்துக் கொள்வது நிர்வாகம். திட்டமிடுதல், கட்டுப்படுத்துதல் பட்ஜெட்டை நிர்ணயித்தல், ஊழியர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்தல் ஆகியவை நிர்வாகத்தைச் சேர்ந்தவை – அதாவது Administration.

Management எனப்படும் மேலாண்மைப் பிரிவில் உள்ள ஊழியர்கள் தங்கள் திறமைகளை நிறுவன முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துபவர்கள். அதற்காக ஊதியம் பெறுவார்கள். பிற ஊழியர்களை ஊக்கப்படுத்துதல், நிர்வாகம் எதிர்பார்க்கும் விளைவுகளைக் கொண்டு வருவதற்கும் இவர்கள் முயல வேண்டும். சுருக்கமாக மேலாண்மை என்பது நிர்வாகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் எளிய முறையில் கூறுவதானால் ஒரு நிறுவனத்தின் குறிக்கோள்களையும், கொள்கைகளையும் வரையறுப்பது Administration. அவற்றை நடைமுறைப்படுத்துவது Management.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்