சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்குகிறது

By செய்திப்பிரிவு

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வுகள் சனிக்கிழமை (மார்ச் 1) தொடங்குகின்றன. தமிழ்நாடு உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் இரு தேர்வுகளையும் 1.70 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

இன்று ஆரம்பம்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17 வரை நடைபெறுகிறது. இதேபோல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 1-ல் ஆரம்பித்து 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன்-டையூ ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 12-ம்

வகுப்பு தேர்வை 47,051 மாணவ-மாணவிகளும், 10-ம் வகுப்பு தேர்வை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 152 பேரும் எழுதுவதாக மண்டல அதிகாரி டி.சுதர்சன் ராவ் தெரிவித்தார்.

பிளஸ்-2 தேர்வு

இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி

25-ம் தேதி வரையும், அதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26-ல் தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரையும் நடைபெற இருக்கிறது. பிளஸ்-2

தேர்வை ஏறத்தாழ 9 லட்சம் மாணவ-மாணவிகளும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 11 லட்சம் பேரும் எழுத உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE