கேள்வி மூலை 20: விண்வெளி உடைகள் ஏன் மாறுவதில்லை?

By ஆதி

நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் பதித்த காலத்திலிருந்து விண்வெளி உடைகள் மிகப் பெரிய அளவில் மாறியது போலத் தெரியவில்லையே என்ற சந்தேகம் எழலாம். உண்மையில் விண்வெளி உடைகள் பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தில் இருந்தாலும், கடந்த 50 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் மாறியுள்ளன. ஆரம்பக் கால விண்வெளி உடைகள் என்பவை விமானிகள் உடையின் இறுக்கமான வடிவமாகவே இருந்தன.

விக்கித்துப்போன வீரர்

ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி லியநோவ், 1965-ல் வாஸ்கோட் 2 விண்கலத்தில் சென்று விண்வெளியில் முதலில் நடந்த பெருமையைப் பெற்றவர். முதல் விண்வெளி நடையின்போது, அவர் மிகவும் திணறிப்போனார். உடையின் உள்ளே ஏற்பட்ட கடுமையான அழுத்தத்தால் அவருடைய விண்வெளி உடை ஊதிப் பெருக்க ஆரம்பித்தபோது, அவரால் நகரக்கூட முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் விக்கித்துப் போனார் லியநோவ். விண்வெளியில் ஏற்பட்ட கடுமையான அழுத்தமே இந்தப் பிரச்சினைக்குக் காரணம்.

அதற்குப் பிறகு அப்பல்லோ விண்கலத் திட்டங்களுக்கு உருவாக்கப்பட்ட ஏ7எல் விண் உடைகள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அழுத்தச் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில் விரிவடைவதற்கான இணைப்புகளைக் கொண்டிருந்தன. அத்துடன் காற்றை மறுசுழற்சி செய்யும் அமைப்பும் உடையிலேயே பொருத்தப்பட்டிருந்தது. உடைக்குள் 100 மில்லி குளிர்ந்த நீரும் சுழன்றுகொண்டே இருக்கும்.

இனி உடலை மடக்கலாம்

ஒவ்வொரு விண்வெளி வீரருக்கும் விண்வெளி உடை பிரத்யேகமாகவே தயாரிக்கப்படும். ஏனென்றால், ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் மாறுபடும் இல்லையா? அத்துடன் ஒவ்வொருவருக்கும் பயிற்சிக்கு ஒன்று, விண்வெளி பயணத்தின்போது ஒன்று, மாற்று உடை என மூன்று விண்வெளி உடைகள் தயாரிக்கப்படும். விண்வெளி உடை ஒன்றின் சராசரி விலை, மூன்று கோடி ரூபாய். ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பயன்படுத்த உருவாக்கப்பட்ட உடைகள் என்பதால், புவியில் அவற்றின் எடை மிக அதிகமாகவே இருக்கும்.

செவ்வாய் கிரகத்துக்குச் செல்வதற்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தற்போது இசட் வரிசை உடைகளை உருவாக்கிவருகிறது. இந்த உடைகளின் இணைப்புகளில் டைட்டானியம் பால்பேரிங் உருளைகள் பொருத்தப்படுகின்றன.

இவை அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையைத் தரக்கூடியவை. இதற்கு முந்தைய விண்வெளி உடைகளை அணியும் ஒருவர், தன் உடலை மடக்கிக் கால் கட்டை விரலைத் தொட முடியாது. முதன்முறையாக இந்த உடைகள் அதைச் சாத்தியப்படுத்தும் அளவு நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கப் போகின்றன. அத்துடன் அழுத்தத்தைச் சமநிலைப்படுத்துவதற்குத் தேவையான காற்று வெளியேற்றும் திறப்பும் இந்த உடையில் இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்