மூளையின் உச்சிப் பக்க மடல் (parietal lobe) நமக்குக் கனவுகள் உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கலாம். ஏனென்றால், இந்தப் பகுதி சேதமடைந்தவர்களுக்குக் கனவு வருவதில்லை. நமது ஐம்புலன்கள் மூலம் கடத்தப்படும் உணர்வுகள், செய்திகளை இந்த உறுப்புதான் ஒருங்கிணைக்கிறது.
இந்தப் பகுதி சேதமடைந்தவர்களுக்குக் கனவு வருவதில்லை என்பதால், உச்சிப் பக்க மடலே கனவை உருவாக்குவதற்கு அடிப்படை என்கிறது ஒரு கோட்பாடு. அதாவது, இந்த உறுப்புக்குக் கண், காது, மூக்கு மூலம் கிடைக்கும் தகவல்கள் அவசியம் என்பதும் தெளிவாகிறது.
நினைவுப் பதிவா, அழிப்பா?
நாம் உறங்கும்போதும் இந்த உச்சிப் பக்க மடல் பகுதி மட்டும் உறக்க நிலைக்குச் செல்லாமல் தொடர்ந்து சமிக்ஞைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்தச் சமிக்ஞைகளில் இருந்து முன்மூளை ஒரு கதையை உருவாக்க முயற்சிப்பதுதான் கனவுக்குக் காரணம் என்கிறது மற்றொரு கோட்பாடு.
இன்னும் சில ஆராய்ச்சியாளர்களோ நம்முடைய குறுகிய கால நினைவுகள், நீண்ட கால நினைவுகளாக மாற்றப்படும் செயல்பாட்டின்போது கனவு வருவதாகக் கூறுகின்றனர். இந்தச் செயல்பாட்டில் தேவையற்ற நினைவுகள் அழிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
உயிர் பிழைக்க ஒத்திகை
பரிணாமவியல் உளவியலாளர்களோ (Evolutionary psychologists) உயிர் பிழைத்திருப்பதற்கான குறிப்பிட்ட செயல்பாடுகளின் விளைவாகவே கனவுகள் உருவாகின்றன என்கிறார்கள். அதன்படி, வாழ்க்கைக்கு உள்ள ஆபத்துகள் அல்லது நெருக்கடியான நிலைகளே கனவுகளுக்குக் காரணம். நமக்கு வரும் ஆபத்தை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான ஒத்திகையாகக் கனவுகள் அமையலாம் என்பது இவர்களுடைய வாதம்.
இப்படித் திட்டவட்டமாக வரையறுக்கப்படாத சில காரணங்களே, நம்முடைய கனவுகளுக்கு அடிப்படையாக விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர். எப்படியோ கனவுகளும் சரி, கனவுகள் உருவாவதற்கான காரணங்களும் சரி சுவாரசியமாகத்தான் இருக்கின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago