ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு: சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப் பதற்கான கடைசி தேதி ஜனவரி 6-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

ஐ.ஐ.டி. எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உயர்கல்வி நிறுவனத்தில் பி.டெக். படிப்பில் சேர ஜெ.இ.இ. என்ற கூட்டு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு ஜெ.இ.இ. மெயின், ஜெ.இ.இ. அட்வான்ஸ்டு ஆகிய 2 நிலைகளைக் கொண்டது ஆகும்.

மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படு கிறார்கள். ஐ.ஐ.டி.யில் சேருவதற்கு அட்வான்ஸ்டு தேர்வு மதிப்பெண்தான் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் என்.ஐ.டி. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர மெயின் தேர்வு மதிப்பெண் போதுமானது.

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கு www.jeemain.nic.inஎன்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்தவர்களும், தற்போது பிளஸ்-2 படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் தேர்வு க்கு விண்ணப்பிக்கலாம்.

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி கடந்த 26-ம் தேதியுடன் முடிவ டைந்தது.

இந்த நிலையில், மாணவர்களின் வேண்டு கோளை ஏற்று ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 6-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் இதற்குமேல் எவ்வித காலநீட்டிப்பும் செய்யப்பட மாட்டாது என்றும் சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE