அறிவியல் ஆராய்ச்சியில் சாதிக்க...

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

நம் நாட்டில் உயர்தர அறிவியல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Science Education and Research) என்ற உயர்கல்வி நிறுவனத்தை போபால், கொல்கத்தா, மொஹாலி, பூனா, திருவனந்தபுரம் ஆகிய 5 இடங்களில் தொடங்கியது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்தக் கல்வி நிறுவனங்களில் பி.எஸ்.-எம்.எஸ்., (பேச்சிலர் ஆஃப் சயின்ஸ், மாஸ்டர் ஆஃப் சயின்ஸ்) என்ற ஒருங்கிணைந்த அறிவியல் ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பு வழங்கப்படுகிறது. மொத்தம் 950 இடங்கள்.

ஐந்து ஆண்டு காலம் கொண்ட இந்தப் படிப்பில், பிளஸ் டூ மாணவர்கள் நேரடியாகச் சேரலாம். அறிவியல் ஆராய்ச்சித் துறையில் சாதிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு இது அருமையான படிப்பு. ஐந்தாண்டில் முதல் 2 ஆண்டு அடிப்படை அறிவியல் பாடங்களையும், அடுத்த 2 ஆண்டுகள் தேர்வுசெய்யும் குறிப்பிட்ட ஒரு பாடத்தையும் படிப்பதுடன் இறுதி ஆண்டில் முழுக்க முழுக்க ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடலாம். இந்த ஒருங்கிணைந்த படிப்புக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் கல்வி உதவித்தொகை கிடைக்கும். ‘இன்ஸ்பயர்’ என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்த உதவித்தொகையை வழங்குகிறது.

இந்தப் படிப்பில் சேர பிளஸ் டூ தேர்வில் (அறிவியல் பிரிவு) குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் என்றால் 55 சதவீதம் போதும். ஐ.ஐ.டி. ஜெ.இ.இ. அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு, இன்ஸ்பயர் திட்டம் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் இன்ஸ்பயர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஐ.ஐ.எஸ்.இ.ஆர். ஆப்டிடியூட் தேர்வு நடத்திச் சேர்த்துக் கொள்கிறது.

2014-2015ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை ஐ.ஐ.எஸ்.இ.ஆர். நிறுவனம், தற்போது வெளியிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பிளஸ் டூ முடித்த மாணவர்களும், இந்த ஆண்டு தேர்வு எழுதுவோரும் விண்ணப்பிக்கலாம். ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வு மூலம் விண்ணப்பிப்பவர்கள், ஏற்கெனவே அதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். அவர்கள் ஐ.ஐ.டி. ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வின் 2வது கட்டத் தேர்வான அட்வான்ஸ்டு தேர்வு ரேங்க் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள்.

ஜெ.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு மூலம் சேர விரும்பும் மாணவர்கள் ஜூன் 23 முதல் ஜூலை 7ஆம் தேதிக்கு, ஐ.ஐ.எஸ்.இ.ஆர். நிறுவனத்துக்கு ஆன்லைனில் (www.iiser-admissions.in) விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 10ஆம் தேதி நடத்தப்படும். அதேபோல், ஐ.ஐ.எஸ்.இ.ஆர். ஆப்டிடியூட் தேர்வு மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூன் 15 முதல் ஜூலை 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்ஸ்பயர் திட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஐ.ஐ.எஸ்.இ.ஆர். ஆப்டிடியூட் தேர்வு ஜூலை 20இல் நடைபெறும். அட்மிஷன் தொடர்பான அனைத்து விவரங்களையும் மாணவ-மாணவிகள் மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த ஒருங்கிணைந்த 5 ஆண்டு பி.எஸ்.-எம்.எஸ். படிப்பை முடிக்கும் மாணவர்கள் மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள், அறிவியல் தொடர்பான தொழில்நிறுவனங்கள், கல்வி நிலையங்களில் வேலைபெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்