முதலில் ஆசிரியர்களை மீட்டெடுக்க வேண்டும்!

By குள.சண்முகசுந்தரம்

பாடத்திட்டத்தை மாற்றினால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்றுவிட முடியும் என்ற குரல்கள் கேட்கின்றன. அதைவிட பாடம் கற்பிக்கும் முறையை மாற்றினால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். மாணவர்களை தயார்படுத்துவதற்கு முன்னதாகக் கற்பித்தல் முறைகளில் ஆசிரியர்கள் மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் கல்வியாளர்கள்.

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (என்.சி.இ.ஆர்.டி) வழிகாட்டலில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம் வடிவமைக்கப்படுகிறது. மெட்ரிக் பாடத்திட்டம் உள்ளிட்ட மாநில பாடத்திட்டங்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி மையத்தின் (எஸ்.சி.இ.ஆர்.டி) வழிகாட்டலில் வடிவமைக்கப்படுகின்றன.

நீட் உள்ளிட்ட பெரும்பாலான நுழைவுத் தேர்வுகள் தேசிய அளவில் திட்டமிடப்படுவதால் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திலிருந்தே கேள்விகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் 30 முதல் 40 சதவீதக் கேள்விகளுக்கு மட்டுமே மெட்ரிக் மாணவர்களால் பதில் அளிக்க முடியும்.

ஒதுக்கப்படும் பாடங்கள்

இதுவரை தமிழகக் கல்வித் துறையானது மதிப்பெண் சார்ந்த கல்விக் கட்டமைப்பையே உருவாக்கியிருக்கிறது. பொதுத் தேர்வுகளுக்கான கேள்வித் தாள்களைத் தயாரிக்கக்கூட ‘புளூ பிரிண்ட்’ வைத்திருக்கிறார்கள். அதற்குள் வரும் பாடங்களிலிருந்துதான் கேள்விகளை எடுக்கிறார்கள் என்பதால் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 வகுப்புகளில் 40 சதவீதப் பாடங்களைப் படிக்காமலேயே ஒதுக்கிவிடுகிறார்கள்.

அதிலும், பதினோராம் வகுப்புப் பாடங்களைப் படிப்பதே இல்லை. (சமீபத்தில் ‘நீட்’ தேர்வில் 50-55 சதவீதக் கேள்விகள் பதினோராம் வகுப்புப் பாடத்திலிருந்தே கேட்கப்பட்டன.) இதேபோல், ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கென ‘கொஸ்டின் பேங்க்’கை உருவாக்கி, அதிலுள்ள கேள்விகளை மட்டுமே மனப்பாடம் செய்யவைக்கிறார்கள்.

இப்படிக் கண்ணை மூடிக்கொண்டு மனப்பாடம் செய்வதால், ஒரு மார்க் கேள்விகளில் நம்பரை மாற்றிக் கொடுத்தால்கூட மாணவர்கள் தடுமாறிவிடுகிறார்கள். பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் முறையாக நடப்பதில்லை. சில பள்ளிகளில் ‘பிராக்டிகல் ரெக்கார்டு’களைக்கூட வெளி ஆட்களைக் கொண்டு எழுதச் சொல்கிறார்கள். ரெக்கார்டு எழுதும் நேரத்திலும் மாணவர்களைப் படிக்கவைக்கிறார்கள். இப்படித்தான் மாணவர்கள் மதிப்பெண்ணை நோக்கித் துரத்தப்படுகிறார்கள்.

பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வுக்கு வரும் கல்வி அதிகாரிகளே, ‘எத்தனை சதவீதம் ரிசல்ட் குடுப்பீங்க?’ என்றுதான் கேட்கிறார்கள். இதனால், ஆசிரியர்கள் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மாணவர்களைக் குறுக்கு வழியில் தயார்படுத்துகிறார்கள்.

நம்பிக்கையூட்டும் அறிவிப்புகள்

இப்போது, புதிய மாற்றங்களுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டுவருகிறது தமிழக கல்வித் துறை. அதில் பதினோராம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு என்பது முக்கியமான அறிவிப்பு. இதேபோல பாடத்திட்டங்களையும் சி.பி.எஸ்.சி. தரத்துக்கு மாற்றப்போவதாக நம்பிக்கை தருகிறது அரசு.

ஆனால், இந்த மாற்றங்களை எல்லாம் முன்னெடுப்பதற்கு முன்னதாக மதிப்பெண்ணைத் துரத்தும் மனப்பாங்கிலிருந்து மீட்பதற்கான பயிற்சிகளை நமது ஆசியரியர்களுக்கு அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், புரிதலோடு படிக்க வேண்டிய புதிய பாடத்திட்டத்திலும் மனப்பாட முறையை புகுத்திவிடுவார்கள்.

இப்போதே தயாராக வேண்டும்

“நீட் தேர்வுக் குழப்பங்களைத் தாண்டி, தமிழக அரசின் அண்மைகால அறிவிப்புகள் நம்பிக்கை தருகின்றன. 2020-21-க்குள் அனைத்துப் பாடத்திட்டங்களும் முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. அப்படி முழுமையாக மாற்றி அமைக்கப்பட்ட பிறகு தமிழக மாணவர்களிடையே மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அப்போது ‘நீட்’டைக் கண்டு நம் பிள்ளைகள் நிச்சயம் பயப்படமாட்டார்கள்.

ஆனால், அதற்கு முன்னதாக ஆறாம் வகுப்பிலிருந்தே புதிய பாடத்திட்டத்தின்படி புரிதலுடன் கூடிய கல்வியை பயிற்றுவிக்க நமது ஆசிரியர்கள் இப்போதே தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார் தேனியில் கிராமப்புற மாணவர்களைத் தேர்வுக்குத் தயார்படுத்தும் இலவச அமைப்பான ‘திண்ணை’யின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியரான கோ.செந்தில்குமார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்