துறைமுகம்: மீனைப் படித்து வேலை வாங்கலாம்

By டி. கார்த்திக்

உலக அளவில் மீன் பிடித் தொழிலில் முன்னணி வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 910 கி.மீ. நீளத்திற்கு கடலோரப் பகுதியைக் கொண்ட தமிழ்நாடு மீன் பிடித் தொழிலின் முக்கியத் தளம்.

மீன் உற்பத்தியைப் பெருக்கிப் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை மேற் கொள்ளவும், வேலையற்ற இளைஞர்கள், மீனவ மகளிர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும், மீன்வளம் சார்ந்த பல்வேறு பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்தவும் இன்று மீன் வளப் படிப்பு முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதற்காகவே நாகப்பட்டினத்தைத் தலைமை யிடமாகக் கொண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகமும் இயங்கி வருகிறது. இதன் கீழ் இயங்கி வரும் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் மீன் வளப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளங்கலை, முதுநிலை, பி.ஹெச்.டி. ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஆராய்ச்சிப் படிப்புகளாக மீன் வளர்ப்பு, மீன் வளர்ப்புப் பொருளாதாரம், மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம், மீன் வள மேலாண்மை ஆகிய படிப்புகள் கற்றுத்தரப் படுகின்றன.. எம்.எப்.எஸ்சி., பிரிவில், மீன்வளர்ப்பு, நீர்வாழ் சுற்றுச்சூழல் மேலாண்மை, மீன் உயிரித் தொழில்நுட்பம், மீன் வளர்ப்புப் பொருளாதாரம், மீன்வளப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம், மீன்வள மேலாண்மை ஆகிய படிப்புகளும் வழங்கப்படு கின்றன. இவை தவிர பி.எஃப்.எஸ்.சி. பிரிவில் நான்காண்டு இளங்கலைப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. பி.எஃப்.எஸ்.சி.யில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் இப்படிப்புக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இளங்கலை, முதுநிலை, ஆராய்ச்சி மாணவர் சேர்க்கைக்கான கல்வித் தகுதி, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியவற்றை http://www.tnfu.org.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்