இன்றைய குழந்தைகள் இரண்டு, மூன்று வயதிலேயே அத்தனை அதிநவீனச் சாதனங்களையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு இயக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஐபாட், கிண்டில் போன்ற தொழில்நுட்பச் சாதனங்களில் படிப்பதற்குப் பிடிக்கும் என நினைக்கிறோம். இன்றைய பெற்றோர்களும் பள்ளிகளும்கூட இ-புத்தகங்களில் (e-book) படிக்கப் பிள்ளைகளை ஊக்குவிக்கின்றனர். ஆனால் சமீபத்திய ஆய்வு இது தவறு என நிரூபித்துள்ளது.
வாசிப்பைத் தகர்க்கும் இ-புத்தகம்
மொபைல் ஃபோன், ஐ-பாட், கிண்டில் உள்ளிட்ட சாதனங்களை சகஜமாகக் கையாளும் பழக்கம் உடைய நான்கிலிருந்து ஆறு வயதிலான குழந்தைகள் இடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. தினந்தோறும் பள்ளிப் பாடப் புத்தகங்களையும் கதைப் புத்தகங்களையும் வாசிக்கும் வழக்கம் கொண்ட குழந்தைகள் அவர்கள். ஆனால் அவர்கள் தொழில்நுட்பச் சாதனங்களை வாசிப்புக்காகப் பயன்படுத்தவில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது. சொல்லப்போனால், அதிகப்படியாகத் தொழில்நுட்பக் கருவிகளைக் கையாளும் குழந்தைகளிடம் வாசிப்பு அரிதாகிக்கொண்டேபோவதும், நேரடியாகப் புத்தகங்களை வாசிக்கவே சிறுவர்கள் விரும்புகிறார்கள் என்பதும் அதில் தெளிவானது. குறிப்பாக, மின்வாசிப்பு சாதனங்கள் (eReading devices) வாசிப்பு வழக்கத்தைத் தகர்க்கின்றன என்பதும் நிரூபணமானது.
இதை அடுத்து இந்த ஆய்வு பதின்பருவத்தினர் மீதும் நடத்தப்பட்டது. அதில், இளைஞர்களில் சிலருக்குக் கருவிகள் வாசிப்பது பிடித்திருந்தாலும் பெரும்பாலானோர் வாசிப்புக்காக இவற்றைப் பயன்படுத்துவதில்லை என்பது தெரிந்தது. குறிப்பாக நல்ல வாசிப்பு வழக்கம் உடையவர்கள் கணினி அல்லது மொபைல் ஃபோன் திரையில் வாசிக்க விரும்புவதில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யாருடையக் கருத்து?
ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மின்வாசிப்புதான் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடித்தமான முறை என நம்பப்பட்டுவருகிறது. இது எப்போது தொடங்கியது? அமெரிக்கக் கல்வியாளரான மார்க் பிரன்ஸ்கி `ஆன் தி ஹாரிஸான்’ (‘On The Horizon’ ) என்கிற கட்டுரையை 2001-ல் வெளியிட்டார். அதில் ‘டிஜிட்டல் இமிக்ரன்ட்ஸ், டிஜிட்டல் நேட்டீவ்ஸ்’ (Digital immigrants, Digital natives’) ஆகிய வார்த்தை பிரயோகங்களை அறிமுகப்படுத்தியிருந்தார்.
வெறும் கேளிக்கை விரும்பிகளா!
டிஜிட்டல்மயமான உலகில் இன்றைய மாணவர்களான குழந்தைகளும் இளைஞர் களும் சொந்த ஊர்க்காரர்கள் போல இயல்பாக வசிக்கிறார்கள்.அவர்களுடைய மூளையின் அமைப்பே முந்தைய தலைமுறையினரிடமிருந்து வித்தியாசமாக மாறியுள்ளது என நிறுவ முயன்றார். புதிய தலைமுறை யினரால் தகவல்களைத் துரிதமாகப் பரிமாறிக்கொள்ள முடிகிறது. பன்முகச் செயல் திறன் உடையவர்களாகத் திகழ்கிறார்கள் (multi-tasking).
சொற்கள் மூலமாகவும் உரைநடை வடிவிலும் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத் துவதைக் காட்டிலும் காட்சி வடிவில் வெளிப்படுத்தவே எத்தனிக்கிறார்கள். உடனடி மனநிறைவும், கை மேல் பலனும் அடைய ஆசைப்படுகிறார்கள். தீவிரமாக ஈடுபடுவதைக்காட்டிலும் கேளிக்கை மனோபாவத்திலேயே செயல்பட விரும்பு கிறார்கள். இப்படி டிஜிட்டல்மயமானவர்களாக இன்றைய தலைமுறையினர் திகழ்கிறார்கள் என்றார்.
டிஜிட்டலும் நிஜமும்
ஆனால் டிஜிட்டல் மயத்துக்கு வந்தேறிகளான (Digital immigrants) ஆசிரியர்கள் அந்நியர்களாகவே ஒதுங்கி நிற்கிறார்கள்். அமெரிக்கக் கல்வி அமைப்பில் முக்கியமான பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் கருதப்படும் மார்க் பிரன்ஸ்கி இவ்வாறு முன்வைத்த கருத்து, அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியக் கல்வி அமைப்புகள் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்குள்ள பள்ளிகளில் மட்டுமல்லாமல் பொது நூலகங்களிலும் இருந்த அச்சுப் புத்தகங்களை முழுவதுமாக அப்புறப்படுத்திவிட்டு மின்புத்தகங்கள் என்கிற டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றினார்கள்.
ஆனால் அவருடைய எழுத்துக்குப் பின்னால் எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை, இது மிகத் தவறான முடிவு என்பது தற்போது இந்த ஆய்வின் முடிவிலிருந்து தெரியவந்துள்ளது. அதுவும் கவனச் சிதறல் என்கிற மிகப் பெரிய சிக்கலைச் சந்திக்கும் பருவத்தில் இருக்கும் இளம்பிராயத்தினர், மின் ஊடகங்கள் வாயிலாகப் படிப்பதென்பது சவாலானது. மனதைக் குவித்து ஒன்றை ஆழ்ந்து படிப்பதற்குள்ளாக அடுத்த விஷயத்தை நோக்கி மனம் அலைபாயச் சாத்தியங்கள் இதில் அதிகம் அல்லவா. அதற்காக ஒட்டுமொத்தமாக டிஜிட்டல் கருவிகளைப் புறக்கணிப்பதும் புத்திசாலித்தனமில்லை. அவசியமான அளவுக்கு மட்டும் அவற்றை பயன்படுத்தக் குழந்தைகளை நாம் பழக்க வேண்டும். சிறந்த வலைத்தளங்களைப் பயன்படுத்தி நல்ல புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து படிக்க அவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அச்சுப் புத்தக வாசிப்புக்கான ரசனையை ஊட்ட வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago