நேர்மையான ஹேக்கர் ஆக வேண்டுமா?

By ராமேஸ்வரம் ராஃபி

ஹேக்கிங் என்றால், தகவல்திருட்டு என்று நமக்குத் தெரியும். அப்படியிருக்கும்போது நேர்மையாக தகவல் திருட்டைச் செய்ய முடியுமா? முடியும் அதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் ஒரு படிப்பையும் வழங்கி வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறையில் ஹேக்கிங் சார்ந்த இரண்டாண்டு முதுநிலை மற்றும் ஓராண்டு பட்டயப் படிப்பு நடத்தப்படுகிறது.

நேர்மையான தகவல்திருட்டு (Ethical hacking) எனப்படுவது கணினி சார்ந்த தகவல்களைப் பாதுகாக்கும் பணியாகும். ஒரு நிறுவனத்தின் அல்லது தனிநபரின் அல்லது அரசாங்கத்தின் தகவல்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கைப்பற்றி தகவல்களைத் திருடும் ஹேக்கர்களைப் போலவே, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளே புகுந்து தகவல் திருடப்படும் வாய்ப்புகளை ஆராய்ந்து, அதற்கேற்ப முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து, தகவல் தரவு களஞ்சியத்திலுள்ள ஓட்டைகளை அடைத்து தகவல்கள் திருடப்படாமல் பாதுகாப்பது குறித்த கல்வியே Ethical hacking courses ஆகும்.

இந்தக் கல்வி முறை மேலை நாடுகளில் விரை வாகப் பிரபலம் ஆகிவரும் ஒன்றாகும். மேலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக சம்பளம் பெறும் துறையாக இது விளங்குகிறது. வங்கியின் கடன் அட்டை, பண பற்று அட்டை போன்றவற்றின் கடவுச் சொற்கள் போன்றவற்றைப் பாதுகாப்பது சார்ந்த பணிகளைச் செய்யும் நேர்மையான ஹேக்கர் களை நியமிப்பதில் வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

சமீபத்தில் தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சி மற்றும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் ஹேக்கர் கள் நுழைந்து விஷமத்தனம் செய்து வைத்தனர். பின்னர் தமிழக காவல்துறையில் உள்ள சைபர் கிரைம் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட ஹேக்கர்களைக் கைது செய்தனர்.

சென்னை பல்கலைக்கழகத் தின் கிரிமினலாஜி துறை M.Sc. Cyber Forensics and Information Security என்ற இரண்டாண்டு முதுநிலை படிப்பை வழங்கு கிறது. இப்படிப்புக்கு இள நிலை கணினி சார்ந்த பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறும். மேலும் Diploma in Cyber Crime and Information Security என்ற ஓராண்டு பட்டய கல்வியையும் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதில் சேர பன்னி ரண்டாம் வகுப்பில் கணினி, கணி தம் பயின்றிருந்தால் போதும்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் கடந்தாண்டு ஹேக்கிங் பட்ட முதுநிலை மாணவர்கள் 100 சதவீதம் கேம்பஸ் இன்டர் வியூ மூலம் தேர்வானது குறிப்பிடத்தக்கது. நீங்களும் நேர்மையான ஹேக்கர் ஆகவேண்டியதுதானே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்