ஜெயமுண்டு பயமில்லை- மூளையின் செயல்பாடு

By மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்

நண்பர் ஒருவர் பெரும்பாலான தமிழர்களைப் போல் தன்னைக் கவிஞராகக் கருதுபவர். அவர் “மூளையின் இடப்புறத்தைத்தான் இன்றைய கல்விமுறை தூண்டுகிறது. நானெல்லாம் வலது மூளையைத்தான் பயன்படுத்துகிறேன்” என்று அடிக்கடி கூறுவார். விட்டால் தலையில் வலப்புறம் மட்டும் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுவார் போலும்.

இவரைப் போன்ற பலரிடமும் வலது புற மூளைதான் சிறந்தது (Right Brain is the right brain) என்ற கருத்து நிலவுகிறது. இது சரியான கருத்துதானா என்று பார்க்கலாம். நம்முடைய மூளையில் வலது, இடது என்று இரு பெரும் பிரிவுகள் இருக்கின்றன. இடப்புற மூளையின் செயல்பாடுகள் பெரிதும் தர்க்கப்பூர்வமாக (logical) இருக்கும். ஒரு விஷயத்தை நன்கு ஆராய்ந்து சாதக பாதகங்களை அலசுவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. மொழி இலக்கணம், கணிதம், சூத்திரங்கள் போன்றவற்றைக் கற்பதில் இடப்புற மூளை பெரும் பங்கு வகிக்கிறது. தகவல்களை மனப்பாடம் செய்வதிலும் இதன் பங்கு அதிகம்.

அதே நேரம் வலப்புற மூளையின் செயல்பாடுகள் கற்பனை, படைப்புத் திறன் சார்ந்ததாக (creative) இருக்கின்றன. உணர்வுபூர்வமாக ஒரு விஷயத்தை அணுகுவது, இசை, கவிதை, உள்ளுணர்வு (intuition) போன்றவை வலப்புற மூளையின் செயல்பாடுகள். தகவல்களை அறிவதை விட கருத்துகளை அறிவதில் வலது பாகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆனால், இதை வைத்துக் கொண்டு வலது புற மூளையைத் தூண்டுவதே உண்மையான கல்வி என்பது சரியாகாது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு விஷயத்தைக் கற்கும்போதே அந்த விஷயத்தைப் பற்றிய தகவல்களும் முக்கியம். அந்த விஷயத்தைப் பற்றிய ஒரு முழுமையான பார்வையும் (holistic view) கருத்துகளும் அவசியம்.

உதாரணமாக ஒளியின் வேகத்தைப் பற்றிப் படிக்கிறோம் என்றால் ஒளியின் அதிவேகம், பிரபஞ்சத்தின் தூரத்தை ஒளி வேகத்தால் அளக்கலாம் போன்ற கருத்தாக்கங்களைக் கற்பனை செய்வதில் மூளையின் வலது பாகம் பங்கு வகிக்கிறது. இதே ஒளியின் வேகம் எவ்வளவு, அதை எப்படிக் கண்டுபிடிப்பது, படிப்படியான சூத்திரங்களால் எப்படி விளக்குவது போன்ற நடைமுறை விஷயங்களைக் கற்பதற்கு இடது பாகம் தேவை.

சுருக்கமாகச் சொன்னால் ஒரு கருத்தைப் புரிந்து கொள்வதற்கு வலது பக்க மூளையும் அதைப் பற்றிய தகவல்களை அறியவும், விஞ்ஞானப் பூர்வமாக அதை நிறுவுவதற்கும் இடது பக்க மூளை இன்றியமையாதவை. கற்பனையைத் தூண்டவும் வேண்டும் அதைச் செயல்படுத்தத் தர்க்க ரீதியாக யோசிக்கத் தெரியவும் வேண்டும். அதுவே கற்றலில் சிறந்த வழிமுறை.சச்சின் டெண்டுல்கர் இடது கையால் எழுதுவார். பந்து வீசுவது வலது கையால். இது போன்று 2 பக்க மூளையையும் சரிசமமாகப் பயன்படுத்துபவர்களே (ambidextrous) தேர்வுகளில் சதமடிக்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்