ஆசிரியர் தகுதித் தேர்வு: இட ஒதுக்கீட்டு பிரிவினர் 82 மார்க் பெற்றால் தேர்ச்சி- அரசாணை வெளியீடு

By செய்திப்பிரிவு

ஆசிரியர் தகுதித் தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 150-க்கு 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஆசிரியர் தகுதித் தேர்வில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பி.சி. முஸ்லிம்கள், சீர்மரபினர், மாற்றுத்திறனாளிகள் ஆகிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, மேற்கண்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் (82.5) ஆகும். இந்த 82.5 மதிப்பெண் என்பது 82 என்று முழு மதிப்பெண்ணாக மாற்றப்படுகிறது. அதன்படி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் தகுதித் தேர்வில் 82 மார்க் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். பொதுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மதிப்பெண்) ஆகும்.

2013 தேர்வுக்கும் பொருந்தும்

இந்த 5 சதவீத மதிப்பெண் சலுகை கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 17, 18-ம் தேதிகளில் நடத்தப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளுக்கும் பொருந்தும். வரும் காலத்தில் நடத்தப்படும் தகுதித் தேர்வுகளுக்கும் இந்த தேர்ச்சி மதிப்பெண் பின்பற்றப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்