அடுத்ததாக ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான கர்னல் டயருக்கும் (Dyer) தலைக்கு ‘dye’ செய்யப் பயன்படும் சாதனத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்று யாராவது கேட்டுவிடுவார்களோ என்ற பதற்றத்துடன்தான் மேற்படி கேள்விக்கு பதிலளிக்க வேண்டியிருக்கிறது.
தொடர்பு இல்லை.
மேலும் கீழுமாக உள்ள இரட்டை அடுக்கு வீடு அல்லது அடுக்ககத்தை duplex என்பார்கள். பெரும்பாலும் அண்டை இருப்பிடத்துடன் பொதுவான சுவர் கொண்டு காட்சி தரும்.
Duplex என்ற வார்த்தையில் X என்பது மவுன எழுத்தல்ல. எனவே டூப்ளே என்று குறிப்பிடக் கூடாது. டூப்ளெக்ஸ்தான்.
Du என்றாலும், di என்றாலும் அதன் அர்த்தம் இரண்டு என்பதுதான். (Bi என்பதும் இரண்டைக் குறிக்கிறது). Du என்பதை do என்பதுபோலவே உச்சரிக்க வேண்டும். இரண்டு என்பதைக் குறிக்கப் பயன்படும் மற்றொரு தொடக்கமான di என்பதை ‘Die’ என்பதுபோல உச்சரிக்க வேண்டும்.
வெறும் இரண்டு பேர் கொண்ட ஒரு குழு என்றால் அதை Duo (டுவோ) என்போம். ஒன்றை duplicate செய்வது என்றால் அதற்குப் பிரதி எடுப்பது (அதாவது இரண்டாவதாக ஒன்றை உருவாக்குவது). கரியமில வாயுவை கார்பன் டை ஆக்சைடு என்போம். Dioxide என்றால் அதில் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்கள் உள்ளன என்று பொருள்.
Duet என்றால் உங்களுக்குத் தெரியும். இருவரின் பாடல் (அந்த இருவர் காதலர்களாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. வஞ்சிக்கோட்டை வாலிபனிலும், பஞ்சதந்திரத்திலும் இடம்பெற்ற போட்டி நடனப் பாடல்கள்கூட duetsதான்). சொல்லப்போனால் இருகுரலிசை என்பது மட்டுமேகூட அல்ல. இருவரின் நடனம், இரு இசைக்கலைஞர்கள் ஒரே சமயத்தில் பங்களிப்பது ஆகியவைகூட duetsதான்.
ஒரு சாலை diverge ஆகிறது என்றால் அது இரண்டாகப் பிரிகிறது என்று அர்த்தம். Dialogue என்றால் இருவருக்கு நடுவே ஏற்படும் உரையாடல்.
விடைபெறும்போது Bye என்று ஏன் சொல்கிறோம்?
வாசகரே, அது bye bye. Good bye என்பதின் வேறொரு வடிவம். தொடக்கத்தில் குழந்தைகள்தான் இப்படிக் கூறுவது வழக்கம். இப்போது பெரியவர்களும். Bye bye என்பதையும் bye என்று சுருக்கமாகச் சொல்லத் தொடங்கிவிட்டோம்.
இப்போது விளையாட்டுத் துறையுடன் நெருங்கிய தொடர்புகொண்ட bye என்ற வார்த்தைக்கு வருவோம். ஒரு சுற்றில் யாரையும் எதிர்த்து ஆட வேண்டிய தேவையின்றி அடுத்த சுற்றுக்கு அவரைச் செல்லவிட்டால் முந்தைய சுற்றில் அவருக்கு bye கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.
கிரிக்கெட்டில் பந்தை மட்டையால் அடிக்காமலேயே எடுக்கப்படும் ரன்னை bye என்பார்கள். இந்த ரன் அந்த பேட்ஸ்மேன் கணக்கில் சேராது. எக்ஸ்ட்ராவாகத்தான் கணக்கு வைத்துக்கொள்ளப்படும் என்பது கூடுதல் தகவல்.
கோல்ஃப் விளையாட்டில் ஒரு பந்தயத்தில் முடிவெடுக்கப்பட்ட பின் ஒன்று, அதற்கு மேற்பட்ட குழிகள் ஆடப்படாமல் இருந்தால் அதை bye என்பார்கள். இந்த இடத்தில் ரத்து செய்யப்பட்ட இடைத் தேர்தல் குறித்து பகிரப்பட்ட ஒரு வாட்ஸ்-அப் நகைச்சுவையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
By election
Buy election
Bye election
Leave aside - Leave behind
Leave aside என்றால் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி இப்போது பேச வேண்டாம் அல்லது பொருட்படுத்த வேண்டாம் என்று பொருள்.
“Let us leave aside the question of appearance which air-conditioner would be the best one for us?”, இதன் பொருள் “தோற்றத்தைப் பற்றிய மதிப்பீடை விட்டுவிடுங்கள். மற்றபடி எந்த ஏ.சி. சிறந்தது?”
Leave behind என்பதற்கு ஒருவரையோ, ஒன்றையோ உங்களோடு அழைத்துச் செல்லாமல் அல்லது எடுத்துச்செல்லாமல் விட்டுவிடுவது என்ற அர்த்தம். Please ensure that you do not leave behind anything in your hotel room.
The hurricane left behind a trail of destruction என்றால் அந்தக் கடும்புயல் கடந்த பிறகும் (தனக்குப் பின்னால்) பேரழிவுக்கான தடயங்களை விட்டுச் சென்றது.
Emoticons என்றால் என்ன அர்த்தம்?
Emotion, Icon ஆகிய இரு வார்த்தைகளின் இணைப்புதான் Emoticon.
இவை சமீபகாலத்தில் உருவானவை அல்ல. 19-ம் நூற்றாண்டிலிருந்தே உள்ளன. அடைப்புக் குறிகள், புள்ளிகள், கோடுகள், எண்கள், எழுத்துகள் போன்றவற்றைக் கொண்டே உருவாக்கப்படும் முக பாவ உருவங்கள் இவை.
போட்டியில் கேட்டுவிட்டால்?
Gokulnath --- his breakfast now.
a) finished
b) has finished
c) have finished
d) had finished
e) is finishing
Gokulnath தனது காலைச் சிற்றுண்டியை இப்போது சாப்பிட்டு முடித்தார் என்ற பொருளை அளிக்கும் வாக்கியம் இது.
Finished என்பது இறந்த காலம் past tense. Had finished என்பதும் கடந்த காலத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் முடிந்துவிட்ட செயலைக் குறிக்கிறது. இது past perfect tense. வாக்கியத்தில் ‘now’ என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதால் இவை பொருந்தாது. எனவே finished, had finished ஆகிய இரண்டு விடைகளையும் நாம் நீக்கிவிடலாம்.
Gokulnath is finishing his breakfast now என்பது உகந்த வாக்கியம் அல்ல. தவிர is finishing என்று வந்தால் now என்ற வார்த்தை இடம்பெற வேண்டியது அநாவசியம்.
மீதமுள்ள இரண்டு விடைகளையும் இப்போது பார்ப்போம்.
I, we, you, they ஆகியவற்றுக்குப் பின்னால் have finished என்பது வரக் கூடாது. ஆனால் he (அதாவது Gokulnath) என்பதற்குப் பின் has finished என்றுதான் வர முடியும்.
எனவே Gokulnath has finished his breakfast now என்பதே சரியான விடை.
கேட்டாரே ஒரு கேள்வி
வரலாற்று நூல்களைப் படித்தபோது ராபர்ட் கிளைவுக்குப் பெரும் தலைவலியாக இருந்தவர் ‘ஜோசப் டூப்ளே’ என்று அறிந்திருக்கிறேன். நீங்கள் eponyms பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அடுக்குமாடிக் கட்டிட விற்பனை விளம்பரங்களில் ‘டூப்ளே வகை வீடு’ என்று குறிப்பிகிறார்கள். பிரெஞ்சு கவர்னர் ஜெனரல் டூப்ளேவுக்கும், டூப்ளே ஃப்ளாட்களுக்கும் தொடர்பு உண்டா?
அப்பாவின் ரத்தக் கொதிப்பு எனக்கும் அம்மாவின் சர்க்கரை வியாதி தம்பிக்கும் கிடைச்சிருக்கு. மத்தபடி தாத்தா காலத்து வீட்டை இனிமேல்தான் பிரிச்சு எடுத்துக்கணும்.
- தொடர்புக்கு - aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago