இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன், விண்வெளித் தொழில்நுட்பம் குறித்துக் கற்பிக்க இண்டியன் இன்ஸ்டியூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்னும் கல்வி நிறுவனத்தைத் இந்திய விண்வெளித் துறை கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கியது. இது திருவனந்தபுரத்துக்கு மிக அருகில் வலியமலா என்னும் இடத்தில் அமைந்துள்ளது
இக்கல்வி நிறுவனத்தில் சேர பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் படங்கள் எடுத்துப் படித்திருக்க வேண்டும். நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிடுவார்கள். பத்திரிகை விளம்பரங்கள் மூலம் சேர்க்கை விவரங்களை அறியலாம். இதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடக்கிறது. நுழைவுத் தேர்வுக்குப் பின்னர் வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தாலே சேர்க்கை உறுதி எனலாம்.
ஜூலையில் இதற்கான கவுன்சிலிங் நடக்கிறது. இக்கல்வி நிறுவனத்தில் பி.டெக். ஏவியானிக்ஸ், பி.டெக். ஏரோ ஸ்பேஸ் இஞினீயரிங், பி.டெக். பிஸிகல் சயின்ஸ் என மூன்று வகையான படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் நான்கு வருடப் படிப்புகள். இதுதவிர முதுநிலைப் படிப்புகளும் உண்டு. இங்கு படிப்பவர்களுக்கான கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணம் உணவுக் கட்டணம் போன்றவற்றைக் கல்வி நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது என்பது கூடுதல் சிறப்பு. இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு செமஸ்டருக்கும் புத்தகங்கள் வாங்குவதற்கும் நிதியும் வழங்கப்படுகிறது. படிப்பு முடிந்ததும் அங்கேயே பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது.
இங்கு படிப்பவர்களுக்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு. ஒன்று கல்வி நிறுவனத்திலேயேதான் தங்கிப் படிக்க வேண்டும். இரண்டு படிப்பு முடித்தவுடன் இஸ்ரோவில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். இஸ்ரோவில் நல்ல சம்பளம், வீடு என அனைத்து வசதிகளும் உண்டு. இன்றைக்கு விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு உலகம் முழுவதும் முக்கியத்துவம் இருப்பதால் வெளிநாட்டு வாய்ப்புகளும் வருங்காலத்தில் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.
நீங்களும் ஒருநாள் விண்வெளியில் கால் பதிக்கும் காலம் வரலாம். அதற்கான முதல் அடியை இப்போதே எடுக்கத் தொடங்குங்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago