தொழில் தொடங்கலாம் வாங்க 55: வெற்றிடத்தைக் கண்டுபிடியுங்கள்!

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

முன்பெல்லாம் ஓட்டல்கள் பல காலம் கொடிகட்டி பறந்தன. இன்று அப்படிஅல்ல. பஸ் ஸ்டாண்ட் எதிரில் இடம் கிடைத்துள்ளது. அங்கு ஓட்டல் தொழில் ஆரம்பிக்கலாமா?

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.

ஓட்டல் தொழில் என்பது ஒரு பெருங்கடல். என்ன வகை ஓட்டல், யாருக்காக, எந்த அளவில், எங்கு, எப்படி நடத்துகிறீர்கள் என்று முதலில் தெளிவு அவசியம். இன்றும் சாலையோர கையேந்திபவன்கள்கூடத் தொடர்ந்து லாபகரமாகச் செயல்படுகின்றன. ஆனால், ‘ஃபைன் டைனிங்’ என்று ஆரம்பித்த பெரிய பிராண்ட் ஓட்டல்கள் பல சில மாதங்களில் இடத்தைக் காலிசெய்துகொண்டு போவதைப் பார்க்கிறோம். காரணம் என்ன? உங்கள் வாடிக்கையாளரின் எந்தத் தேவையைத் தொடர்ந்து பூர்த்திசெய்கிறீர்கள் என்பதைப் புரிந்து செயல்படுங்கள். நிறைய முதலீடோ நல்ல இடமோ மட்டும் உங்கள் தொழிலைக் காப்பாற்றாது.

நீங்கள் இயங்கும் சந்தையில் எங்கு வெற்றிடம் உள்ளது என்பதைக் கண்டுபிடியுங்கள். அதை நீங்கள் நிரப்ப முடியுமா என்று பாருங்கள். டிஃபன் சென்டரா, பிரியாணி கடையா, பேக்கரியா, மெஸ்ஸா, நவ நாகரிக முழுமையான ஓட்டலா என்பதை உங்கள் ஊரின் தேவையை வைத்து முடிவுசெய்யுங்கள்.

மேல் மட்டத்தில் வித்தியாசமான ருசிக்காகத் தொடங்கப்படும் ஓட்டல்கள் அனைத்தும் சீக்கிரம் தோல்வி பெறக் காரணம், மக்களின் ருசியும் ரசனையும் மிக வேகமாக மாறிவருகின்றன. மக்களின் சலிப்பும் புதிய முயற்சிகளின் தொடர்ந்த போட்டியும் சந்தையின் போக்கைத் தொடர்ந்து மாற்றிவருகின்றன. ஆனால், பல பழைய ஓட்டல்கள் தொடர்ந்து லாபகரமாகவும் அதே தரத்துடனும் இயங்கி வருவதைப் பார்க்கிறோம். அதிலிருந்து பாடம் படிப்பதுதான் நல்லது. ஓட்டல் தொழில் வெளியே மிகக் கவர்ச்சிகரமாகத் தெரிந்தாலும் தொடர்ந்து லாபகரமாக நடத்துவது மிகுந்த சவால்தான்.

இடம் கிடைத்ததால் தொழிலை முடிவுசெய்யாதீர்கள். தொழிலைத் தேர்ந்தெடுத்துவிட்டு இடத்தை முடிவுசெய்யுங்கள்.

“தொழில் திட்டம் எழுத்து மூலமாக இல்லாமல் தொழில் தொடங்காதீர்கள்” என்று எழுதியிருந்தீர்கள். யாரிடம் கொடுத்து எழுதுவது இதை?

பரத், திருவெண்காடு.

இன்று சினிமாவில்கூட ‘ஹார்ட் பவுண்ட்’ ஸ்கிரிப்ட் கேட்கிறார்கள். வெறும் வாயில் கதை சொல்லும் காலம் முடிந்துவிட்டது. அது போலதான் பட்ஜெட் பிளானிங்கும். உங்கள் தொழில் திட்டத்தை எழுதுங்கள். நிர்வாகம் படித்த எவரும் எழுத முடியும். ஒரு வங்கிக்குக் கடன் கேட்டால்கூட, அதற்கான படிவம் கொடுப்பார்கள். அதேபோல இன்று வலைத்தளத்திலும் இதற்கான படிவங்களைக் காணலாம். முக்கியமானது எழுதுவதுதான்.

மனை வாங்கி விற்பதும் வியாபாரம் தானே? ஏன் ரியல் எஸ்டேட் பற்றி நீங்கள் எழுதவில்லை? நான் மனை வாங்கி விற்க நினைக்கிறேன். உங்கள் அறிவுரை என்ன?

ராதாமணி, தாம்பரம்.

குறைந்த விலையில் நிறைய நிலம் வாங்கி, பிளாட் போட்டுத் தவணை முறையில் விற்று வளர்ந்த நிறுவனங்கள் பல உண்டு. நல்ல முதலீடும் காத்திருக்கும் திடமும் விற்பனை வியூகங்களும் முக்கியம். ஒரு பகுதி எந்த அளவு வளர்ச்சி அடையும் என்று கூறுவது கடினம். 90-களின் கடைசியில் ஆரம்பித்த அசுர வளர்ச்சியைப் பார்த்துப் பிறகு சூடு போட்டுக்கொண்டவர்கள்தான் அதிகம். பெர்சனல் லோன் வாங்கி மனை வாங்கியவர்கள் உண்டு. இதைத் தொழிலாகச் செய்யாமல் ஆசையில் முதலீடு செய்பவர்கள்தாம் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

என்னிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு வடக்கத்திய வியாபாரி சொன்னார். “நாங்கள் இருபது ஆண்டுகளாக சென்னையைச் சுற்றி இடங்கள் வாங்கி விற்கும் தொழிலைச்செய்கிறோம். இதற்காகத் தொடர்ந்து ஆய்வுகள் செய்துகொண்டே இருப்போம். அதிகம் ஆசைப்பட்டுச் சொத்துகளை முடக்காமல், ஒரு நல்ல சதவீத லாபத்தில் தொடர்ந்து விற்கிறோம். எங்களிடம் வாங்கியவர்கள் தொடர்ந்து வாங்குவார்கள்” என்றவர் இன்னமும் வாடகை வீட்டில்தான் இருக்கிறார். சவுகார்பேட்டையில் இன்னமும் சின்னச் சந்தில்தான் பல கோடிகள் சம்பாதித்த பின்னும் நிறைவாகக் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்துவருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலுக்குப் பெரிய முதலீடும் நிறைய நிதானமும் வேண்டும்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்