கேட்டாரே ஒரு கேள்வி
“I very easily jump to conclusions. ஆனாலும், கூட என் எடை குறைய மாட்டேன் என்கிறது. என்ன செய்யலாம்?”
Jogging and jumping இரண்டுமே உடலை இளைக்க வைக்கும்தான். ஆனால், நீங்கள் (வேண்டுமென்றே) குறிப்பிடும் jumping to conclusions எடையைக் குறைக்காது. ஒருவேளை உங்கள் மதிப்பைக் குறைக்கலாம்.
சில மாதங்களுக்கு முன் நான் படித்த ஒரு தகவல் நினைவுக்கு வருகிறது.
“We had all wrong exercises. We jump to conclusions, climb to walls, make mountains out of molehills, run around in circles, and beat around the bush.”
இவற்றில் குறிப்பிட்ட எதுவுமே அதன் நேரடி அர்த்தத்தைக் குறிக்கவில்லை. Jump to conclusions என்றால் ஆற, அமர விசாரிக்காமல் அவசர அவசரமாக ஒரு முடிவுக்கு வந்துவிடுவது. Climb the walls என்றால் மனதில் உற்சாகமும், உடலில் சக்தி இருந்தும்கூட நினைத்த காரியத்தைச் செய்ய முடியாததால் ஏற்படும் எரிச்சலான நிலை.
Being stuck at home for four weeks, due to a minor fracture, had me climbing the walls. Make the mountains out of molehills என்றால் அற்ப விஷயத்தை ஊதி ஊதிப் பெரிதாக்குதல் என்ற அர்த்தம் (Mole என்பது ஒருவகை மூஞ்சுறு. இது மண் தரையைத் தோண்டித் தோண்டி சுற்றிலும் ஏற்படுத்தி இருக்கும் மண் சேர்க்கையை மலை என்று கூறுவது. அதாவது மிகைப்படுத்துதல்).
Run around in circles என்றால் எதையும் சாதிக்காமல் திரும்பத் திரும்ப ஏதோ ஒன்றைச் செய்துகொண்டிருப்பது அல்லது பேசிக்கொண்டிருப்பது. Beat around the bush என்றால் ஒன்றைச் சுற்றி வளைத்துப் பேசுவது அல்லது பிறரால் ஏற்க முடியாத சங்கடமான விஷயத்தை நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவதை இப்படி விவரிப்பதுண்டு.
“Turtle என்பதற்கும் tortoise என்பதற்கும் என்ன வேறுபாடு?”
Turtle நீச்சலடிக்க ஏற்றாற்போல் அதன் கால் விரல்கள் ஒரு துடுப்பைப்போல இணைந்திருக்கும். Tortoise என்பது முக்கியமாக ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் காணப்படும் உயிரினம். Turtle என்பதைக் கடல் ஆமை என்றும், Tortoise என்பதை நிலத்து ஆமை என்றும் கூறலாம்.
Staring என்பதும் leering என்பதும் ஒன்றா?
உற்றுப் பார்ப்பதுதான் இரண்டுக்கும் அடிப்படை. ஆனால், அநாகரிகமான முறையில் உற்றுப்பார்ப்பதை leering என்பார்கள். இப்படி வைத்துக் கொள்ளலாம். Staring என்றால் உற்றுப் பார்த்தல். Leering என்றால் வெறித்துப் பார்த்தல்.
“நான் தினமும் ஜிம்முக்குச் செல்பவன். அங்கு ஒரு கருவி பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அதைச் சில நாட்களாகச் சரி செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, “The treadmill is in the middle of repair” என்று எழுதி வைத்திருக்கிறார்கள். சிரிப்பாக இருக்கிறது. ஆனால், வேறு எப்படி எழுதி வைத்திருக்க வேண்டும்?”
“The treadmill is under repair அல்லது The treadmill is being repaired”.
சிப்ஸ்
# தொப்பையை spare tyre என்று ஏன் குறிப்பிடுகிறார்கள்?
‘எதற்கும் உதவும்’ என்றபடி வாகனங்களில் கூடுதலாக எடுத்துச் செல்லப்படும் டயரை spare tyre என்பார்கள். கூடுதலாகக் கொழுப்பு சேர்ந்த இடத்திற்கும் அதையே பயன்படுத்துகிறார்கள்.
# இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறலாம்?
I am out of the picture
தொடர்புக்கு: aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago