கேட்டாரே ஒரு கேள்வி
“நம் உடலிலுள்ள Funny bone-ல்
அடிபட்டுக் கொண்டால் fun அதிகமாகுமா குறையுமா?”
Fun என்றால் வேடிக்கை, உற்சாகம். முழங்கை மூட்டெலும்பில் உள்ள பகுதி funny bone. இதில் வேடிக்கைக்கோ உற்சாகத்துக்கோ எதுவுமில்லை. அங்கு அடிபட்டுக்கொண்டால் சுரீர் என வலிக்கும். ஆனால், funny bone என்பது ஓர் எலும்பு அல்ல, நரம்பு!
ஆந்தைகள் குழுவாக இருப்பதை a parliament என்று குறிப்பிடுவார்கள். பூநாரைகள் (Flamingos) கூட்டமாக இருக்கும்போது அதை flamboyance என்று குறிப்பிடுவார்கள்!
“சிலர் தங்கள் செல்போனில் ICE என்று ஏதோ தொலைபேசி எண்ணைப் பதிந்து வைத்திருக்கி றார்களே. அதற்கு என்ன பொருள்?”
வாசகரே அது In case of emergency என்பதன் சுருக்கம். செல்போன் உரிமையாளர் ஏதாவது விபத்தில் மாட்டிக்கொண்டால் அருகில் இருப்பவர்கள் அந்த எண்ணை முதலில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
“Lakshmi, Prem and _________ attended the college.
மேற்படி வாக்கியத்தில் கோடிட்ட இடத்தில் I, me, myself ஆகிய மூன்று வார்த்தைகளில் எதைப் பயன்படுத்துவது என்பதில் எனக்குக் குழப்பம் ஏற்படுகிறது” என்கிறார் ஒரு வாசகர்.
நண்பரே, இதுபோன்ற குழப்பம் நேரும்போது தொடக்கத்தில் உள்ள பெயர்களை எடுத்துவிட்டு ஒவ்வொரு விதமான pronoun-ஐயும் அடுத்தடுத்து அங்குப் பயன்படுத்தி எது பொருத்தமாக இருக்கிறது என்பதை யோசியுங்கள்.
மேலே உள்ள வாக்கியத்தை இதுபோல மூன்று விதங்களாக எழுத முடியும்.
I attended the college
Me attended the college
Myself attended the college
இந்த மூன்றில் “I attended the College” என்பதுதான் சரி என்பது உங்களுக்கே தெரியும்.
எனவே Lakshmi, Prem and I attended the College என்பது சரியான தீர்வு.
Tomorrow morning Ganesh, Kumaresh and (he, him) will go to Nagpur. இந்த உதாரணத்திலும் நீங்கள் அதே உத்தியைப் பயன்படுத்தலாம். He will go to Nagpur. Him will go to Nagpur ஆகிய இரண்டில் எது சரி என்பது உங்களுக்கே தெரியும். எனவே, Tommorrow morning Ganesh, Kumaresh and he will go to Nagpur என்பதே சரியானது.
“Large என்பது பெரிய என்பதைக் குறிக்கிறது. Largesse என்பதும் பெரிய அல்லது பிரம்மாண்டம் என்பதான அர்த்தத்தைக் கொடுக்கிறதா?”
இல்லை நண்பரே. Largesse என்பது ஒரு noun. (Largess என்றும் இதைக் குறிப்பிடுகிறார்கள்). இது பிறருக்குப் பணத்தையும், பரிசையும் வாரி வழங்கும்
தாராள மனதைக் குறிக்கிறது.
சிப்ஸ்
# White lie சொல்லலாமா?
சொல்லலாம். யாருக்கும் பாதிப்பு வராத அற்பமான பொய்தானே அது.
# Paper knife என்பது?
கூர்மையற்ற கத்தி. மடிக்கப்பட்ட தாளைக் கிழிக்கப் பயன்படுவது.
# கொஞ்சுதல் என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறலாம்?
இதமாக, மென்மையாகப் பேசுவதை ஆங்கிலத்தில் coo என்பார்கள்.
தொடர்புக்கு:
aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago