எங்கே ‘I’ என்பதைப் பயன்படுத்துவது? எங்கே ‘Me’ என்பதைப் பயன்படுத்துவது? எனப் பலருக்கும் சந்தேகம். இதுவரை ஆறு வாசகர்கள் இது பற்றிக் கேட்டுவிட்டார்கள்.
இதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக Subject, Predicate ஆகிய இரண்டைப் பற்றியும் எளிமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். (பள்ளியில் Subjects என்று அறிவியல், ஆங்கிலம், தமிழ், கணிதம் போன்றவற்றைக் குறிப்பிடுவோம். அதோடு இந்த Subject - ஐ குழப்பிக் கொள்ள வேண்டாம்)
சப்ஜெக்ட் - ப்ரெடிகட்
ஒவ்வொரு வாக்கியத்தையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடியும். அந்த வாக்கியம் யாரைப் பற்றியது அல்லது எதைப் பற்றியது என்பது சப்ஜெக்ட்.
அந்தச் சப்ஜெக்ட் பற்றி எதையோ சொல்லும் பகுதி ப்ரெடிகட்.
I Drink Coffee என்பதில் ‘I’ சப்ஜெக்ட். “ Drink Coffee’’ என்பது ப்ரெடிகட்.
Fresh Air Entered The Room என்பதில் “Fresh Air’’ சப்ஜெக்ட். “Entered The Room’’ என்பது ப்ரெடிகட்.
Kumar And Karan Quarrelled With Each Other என்பதில் Kumar And Karan சப்ஜெக்ட். “Quarlled With Each Other’’ என்பது ப்ரெடிகட்.
Come என்ற ஒரே வார்த்தை கூட வாக்கியமாக இருக்கலாம். அப்போது சப்ஜெக்ட் மறைமுகமானது. அதாவது You. ப்ரெடிகட் Come.
இப்போது சப்ஜெக்ட், ப்ரெடிகட் புரிந்து விட்டதல்லவா? அடுத்ததாக எப்போது ‘I’, எப்போது “Me’’ என்கிற பஞ்சாயத்துக்குள் நுழைவோம்.
ஐ – மீ பஞ்சாயத்து
I, Me ஆகிய இரண்டுமே Personal Pronouns. பிற Noun அல்லது Pronounகளோடு இவற்றைப் பயன்படுத்தும்போதுதான் பெரும்பாலும் குழப்பம் வருகிறது. இதை எளிய விதத்தில் தீர்த்துக் கொள்ள முடியும்.
வாக்கியத்தில் சப்ஜெக்ட்டில் உள்ள We, He, She, They, You ஆகியவற்றுடன் பயன்படுத்த வேண்டியது ‘I’ தான், Me அல்ல.
You and I Are Going To A Movie. இதில் You And I என்பது சப்ஜெக்ட். எனவே ‘I’ பயன்படுத்த வேண்டும், Me அல்ல. அதாவது You And Me என்று வரக் கூடாது.
இதேபோல் Raja And ________Are Walking. இந்த வாக்கியத்தில் கோடிட்ட இடத்தில் இடம்பெற வேண்டியது எது? I அல்லது Me? ‘I’ தான். ஏனென்றால் “Raja And _________” என்பது சப்ஜெக்ட்.
வாக்கியத்தில் ப்ரெடிகட் பகுதியில் Him, Her, Us, Them போன்றவற்றோடு வர வேண்டியது Me.
The Child Followed Him And Me. இதுதான் சரி. The Child Followed Him And I என்று வரக் கூடாது. இதைப் பலரும் சரியாக எழுதிவிடுவார்கள். ஏனென்றால் Him என்பதன் சமச்சொல் Meதான் I அல்ல என்பது நமக்குத் தெரியும்.
சரி, கூட Him, Her, Them போன்ற எதுவும் வராவிட்டால் என்ன செய்வது?
அப்போதும் நான் ஏற்கனவே சொன்ன சப்ஜெக்ட், ப்ரெடிகட் பகுதிகள் உதவும்.
I Saw The Movie.
Ramu And I Saw The Movie
Ramu Spent The Day With Me.
Ramu Spent The Day With Krishna And Me.
எது சரி?
சந்தேகம் எப்போது அதிகம் எழுகிறது என்றால் இந்த I அல்லது Me என்பது வேறொரு Noun (அல்லது Pronoun) உடன் இணையும்போதுதான்.
கீழே உள்ள இரண்டு வாக்கியங்களில் எது சரி?
(A) If Deepa And I Go To Coimbatore, We Will Be Happy.
(B) If Deepa And Me Go To Coimbatore, We Will Be Happy.
இரண்டு விதங்களில் முதல் வாக்கியம்தான் சரியானது என்று கூறலாம்.
Deepa And I என்பது Subjectல் இடம் பெறுபவை. எனவே I - தான் வரவேண்டும். Me அல்ல.
கீழே உள்ள இரண்டு வாக்கியங்களில் எது சரி?
(A) He Instructed Lakshman And I To Be Prepared.
(B) He Instructed Lakshman And Me To Be Prepared.
Predicate-ல் இடம் பெற வேண்டியது Me–தான் I - அல்ல.
இன்னொரு விதத்திலும் நம் விடை சரியானதா என்பதைச் சரிபார்க்க முடியும்.
I அல்லது Me இடம் பெற வேண்டிய பகுதியோடு இணைந்துள்ள Noun (அல்லது Pronoun)ஐ நீக்கிவிடுங்கள். இப்போது I அல்லது Me போட்டுத் தனித்தனியாகப் படித்துப் பாருங்கள்.
If Deepa And (I அல்லது Me) Go To Coimbatore என்பதில் தீபாவை நீக்கிவிட்டு இருவிதமாக எழுதிப் பார்ப்போம்.
(A) If I Go To Coimbatore
(B) If Me Go To Coimbatore
இப்போது உங்களுக்கே தெரிகிறது முதல் பயன்பாடுதான் சரியானது என்று. இல்லையா?
இதேபோல்
He Told Murali And (I அல்லது Me) To Start.
முரளியை நீக்கிவிடலாம்.
He Told I To Start.
He Told Me To Start.
இவற்றில் He Told Me To Start என்று படுகிறதல்லவா? அப்படியானால் He Told Murali And Me To Start என்பதுதான் சரி.
Ultimate
Ultimate என்பது ஒருவிதத்தில் வித்தியாசமான வார்த்தை. “அவதான் Ultimate’’ என்று தன் கனவு தேவதையைப் பற்றி ஒருவர் கூறும்போது “மிகச் சிறந்த’’ என்ற அர்த்தத்தில்தான் அதைப் பயன்படுத்துகிறார். ஆனால் Ultimate என்பதன் தொன்மையான அர்த்தம் கடைசி என்பதுதான். “This Is The Ultimate Entry’’ என்றால் அதுதான் கடைசியாக வந்த விண்ணப்பம் என்று அர்த்தம். Penultimate என்றால் கடைசிக்குச் சற்று முன்னதாக என்று அர்த்தம்.
ஆனால் மிகச் சிறப்பான என்ற அர்த்தமும் இந்த வார்த்தைக்குப் பொருத்தமானதுதான் என்பதைச் சமீபகால அகராதிகள் ஏற்றுக் கொண்டு விட்டன.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago