ஜனவரி 15: தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் வசதிகள் அதிகரித்தி ருப்பதாக ‘2018 – வருடாந்திர கல்வி நிலை அறிக்கை’யில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேசிய சராசரி அளவைவிட தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் கடந்த பத்து ஆண்டுகளில் மேம்பட்டிருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆய்வுக்காக, தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களைச் சேர்ந்த 750 அரசுப் பள்ளிகள் பார்வையிடப்பட்டன. கழிவறை வசதியில்லாத அரசுப் பள்ளிகளின் சதவீதம் 7 சதவீதத்திலிருந்து (2010) 0.8 சதவீதமாகக் (2018) குறைந்திருப்பதாக இந்த ஆய்வுத் தெரிவிக்கிறது.
மனித உரிமைகளுக்கான சேனல்
ஜனவரி 15: மனித உரிமைகளுக்கான உலகின் முதல் தொலைக்காட்சி அலைவரிசையை லண்டனில் சர்வதேச மனித உரிமைகள் ஆய்வகம் தொடங்கியது. மையநீரோட்ட ஊடகம் தவிர்க்கும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை இந்த அலைவரிசை தொடர்ந்து கவனப்படுத்தும் என்று தெரிவிக்கிறது. ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 நாடுகளில் இணைய அடிப்படையில் இந்த சேனல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் 10% இடங்கள் அதிகரிக்கப்படும்
ஜனவரி 17: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக நாட்டிலுள்ள 900 பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் 40,000 கல்லூரிகளில் 10 சதவீதம் இடங்கள் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் 25 சதவீத புதிய இடங்கள் உருவாக்கப்படும் என்று ஜனவரி 15 அன்று தெரிவித்தார்.
இஸ்ரோ: இளம் விஞ்ஞானிகள் திட்டம்
ஜனவரி 18: இஸ்ரோ சார்பில் ஒரு மாத கால இளம் விஞ்ஞானிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார். இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் 8-ம் வகுப்பைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு சிறிய செயற்கைக்கோளை வடிவமைப்பதற்கான பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களைச் சந்திப்பது இந்த ஆண்டு இஸ்ரோவின் முன்னுரிமைத் திட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். திரிபுராவில் தொடங்கப்பட்ட இஸ்ரோ வளர்ச்சி (Incubation) மையத்தைப் போல திருச்சி, நாக்பூர், ரூர்கேலா, இந்தூர் ஆகிய நகரங்களிலும் இஸ்ரோ வளர்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம்: 2 நீதிபதிகள் பதவியேற்பு
ஜனவரி 18: உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக தினேஷ் மகேஸ்வரியும், சஞ்ஜீவ் கன்னாவும் பதவியேற்றுகொண்டனர். தினேஷ் மகேஸ்வரி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், சஞ்ஜீவ் கன்னா டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் இதற்குமுன் பதவிவகித்தனர். இவர்கள் இருவரின் பதவியேற்புக்குப் பின், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 31.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago