அந்த நாள் 18: போர்களைத் துறந்த பேரரசன்

By ஆதி வள்ளியப்பன்

காலம்: பொ.ஆ.மு. 270-230, பாடலிபுத்திரம்

“சங்க காலத்தைச் சேர்ந்த முக்கியத் தமிழ் நகரங்கள்ல ஒரு சுத்து வந்துட்டோம் செழியன்.”

“அடுத்து நாம எங்க போகப் போறோம் குழலி?”

“சிந்து சமவெளி, தென்னிந்தியான்னு நிறைய இடங்களைப் பார்த்துட்டோம். அடுத்து நாம போகப் போற இடம் பாடலிபுத்திரம்.”

“பாடலிபுத்திரமா, அது எங்க இருக்கு?”

“ஏதோ தெரியாத இடம்னு குழம்ப வேண்டாம். அது இன்றைய பிஹார் தலைநகர் பாட்னாதான்.”

“சரி, பாடலிபுத்திரத்துல யாரைப் பார்க்கப் போறோம்?”

“பண்டைய இந்தியாவின் முதல் பேரரசரான சாம்ராட் அசோகரை.”

“அப்ப அவர் அசோக வம்சத்தைச் சேர்ந்தவரா?”

“இல்ல, மௌரிய வம்சத்தைச் சேர்ந்தவர். அசோகரோட தாத்தா, சந்திரகுப்த மௌரியர் பொ.ஆ.மு. 324-ல் மகத மன்னர்களை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றினார். அவரோட மகன் பிந்துசாரரைத் தொடர்ந்து, அசோகர் ஆட்சிக்கு வந்தார். அவர்கள் உருவாக்கிய பேரரசு பிஹார் முதல் இன்றைய ஆப்கானிஸ்தான்வரை பெரும் பரப்புக்குப் பரவிக் கிடந்தது. இந்தியாவில் தோன்றிய முதல் பேரரசு மௌரியப் பேரரசுதான்.”

“ஓ! ரொம்ப ஆச்சரியமான தகவலா இருக்கே.”

andha-naal-2jpgright

“இன்னொன்றும் சொல்றேன். பொதுவா ராஜாக்கள்னா ரொம்ப அழகா இருப்பாங்க, அல்லது அழகா இருக்கிறதுபோல அவங்களைப் போற்றிக் கவிதைகள், ஓவியங்களாவது படைக்கப்பட்டிருக்கும். ஆனா, அசோகர் அழகான முகத்தோட இல்ல. தன்னோட கொள்கைகள், செயல்பாடுகள் மூலமாத்தான் வரலாற்றில் அவர் புகழ்பெற்றார்.”

“ஆமா, வரலாறுன்னு சொன்ன உடனேயே ஒண்ணு அக்பர், இல்லேன்னா அசோகர் பத்தின பேச்சுதான் முதல்ல வரும். அப்படி எந்த வகைல மத்த ராஜாக்கள்ல இருந்து அசோகர் மாறுபட்டு இருந்தார்?”

“அசோகர் இன்றுவரை நினைவுகூரப்படுவதற்கு முதன்மைக் காரணம், அவர் பௌத்த மதத்தைப் பின்பற்றினதுதான். இன்றைய ஒடிஷா இருக்கும் பகுதில நடைபெற்ற கலிங்கப் போர்ல அவர் வெற்றி பெற்றார். ஆனா, அதில் ஏற்பட்ட உயிர்ப் பலிகளைப் பார்த்ததும், போர் புரியறதையே கைவிட்டு, அசோகர் அகிம்சையைப் பின்பற்றத் தொடங்கினார். அவருடைய காலத்துல போர் வெற்றி ஒன்றையே ராஜாக்கள் அனைவரும் ஒரே நோக்கமாகக் கொண்டிருந்தாங்க. அவர்களிடமிருந்து அசோகர் மாறுபட்டு இருந்தது, வரலாற்றில் மிக முக்கியமானவரா அவரை மாத்துச்சு. இது எல்லாத்துக்கும் காரணம் புத்தரும் பௌத்த மதமும்தான்.”

“அசோகர் இருந்த காலத்தில் புத்தர் உயிருடன் இருந்தாரா?”

“இல்ல, புத்தர் இறந்து 182 ஆண்டுகளுக்குப் பின்னாடிதான் அசோகர் பிறந்தார். அதிலிருந்து 34 வருஷம் கழிச்சுத்தான் அவர் மன்னரா மகுடம் சூட்டப்பட்டார். ஆனா, அந்தக் காலத்துல பௌத்த மதம் பேரளவில் பரவியிருந்துச்சு.”

“ஒரு ராஜா போரைக் கைவிடும் அளவுக்கு அந்தச் சமயத்தோட கொள்கைகள் வலுவாக இருந்திருக்கிறதை நினைச்சுப் பார்த்தா, ஆச்சரியமாத்தான் இருக்கு.”

“அதுக்கப்புறம் இலங்கை, திபெத், சீனா போன்ற அண்டை நாடுகளுக்கும் பௌத்த மதம் பரவுச்சு. அந்த நாடுகளைச் சேர்ந்த பௌத்தப் பயணிகள் இந்திய மடாலயங்களுக்கும் பௌத்தப் பல்கலைக்கழகங்களான நாளந்தா, தட்சசீலம் ஆகியவற்றுக்கு உயர்கல்வி பயிலவும் வந்து போனாங்க. பாஹியான், சுவான் சாங் (யுவான் சுவாங்) போன்ற பல சீனப் பயணிகள் இப்படி இந்தியாவுக்கு வந்தவங்கதான்.”

“முன்னாடி காஞ்சிபுரத்துல நாம பார்த்தோமே, அவர் தானே சுவான் சாங், குழலி?”

“ஆமா, அவங்க தங்களோட அனுபவங் களை எழுதி வெச்சிருக்காங்க. அதிலிருந்துதான் இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கிறது போன்ற வரலாற்றுத் தகவல்கள் நமக்குத் தெரிய வருது செழியன்”.

 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்

 

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்