கேட்டாரே ஒரு கேள்வி
விளையாட்டில் Round Robin என்கிறார்களே. Robin என்பவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
**********
“A great many” என்பது பல இடங்களில் பயன்படுத்தப்பட்டாலும் அபத்தமாகப் படுகிறதே என்று அங்கலாய்க்கிறார் ஒரு நண்பர்.
இது ஒரு idiom. மிக அதிகம்பேர் என்று தமிழில் குறிப்பிடுவதைப்போல (‘மிக அதிகம் பேர்கள்’ என்பதில்லை என்பதை கவனித்தீர்களா?). A great many என்றால் மிக அதிக எண்ணிக்கையில் என்று அர்த்தம். A என்று வந்தாலும் ‘A great many people’ என்பதை plural ஆகத்தான் பயன்படுத்துகிறார்கள். - A great many people have participated in the protest.
**********
“Stenography என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். Steganography என்று ஒரு வார்த்தையைப் படித்தேன். அதற்கு என்ன அர்த்தம்?”
Stenography என்றால் சுருக்கெழுத்து முறை. ஒன்றை வேகமாகக் குறிப்பெடுக்க உதவும் முறை அது.
Steganography என்பது சங்கேதக் குறிப்புகளோடு ரகசியத் தகவல்களுக்காக எழுதுவது. Stego என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது இது. அந்த மொழியில் stego என்றால் மறைவான அல்லது மறைக்கப்பட்ட என்று பொருள்.
english-2jpg100
Round robin என்று எழுதும்போது robin என்பதன் முதல் எழுத்தை கேபிடலாக எழுதுவதில்லை. எனவே robin என்பது இங்கு எந்த நபரின் பெயரையும் குறிக்கவில்லை.
முதலில் Round robin என்பது விளையாட்டுத் துறையில் எப்படி பயன்படுகிறது என்பதைப் பார்ப்போம். ஒரு போட்டியில் ஆறுபேர் கலந்துகொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொருவரும் மீதி ஐந்து பேருடனும் போட்டியிட்டால் அது Round robin (அதாவது டாஸ் போட்டு இன்னார், இன்னாருடன் மோத வேண்டும் என்றில்லாமல் அனைவரிடமும் மோதுவது).
உயரதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் செய்யப்படும் விண்ணப்பத்தில் அதில் கையெழுத்திடுபவர்கள் ஒருவரின் கீழ் ஒருவர் என்று கையெழுத்திடாமல் வட்டவடிவில் கையெழுத்திடுவதையும் Round robin என்பார்கள். ஒரு விண்ணப்பம் கொடுக்கும்போது முதல் கையெழுத்து யாருடையதோ அவர்தான் இந்தப் ‘பிரச்சினையைக்’ கிளப்பி மீதிப்பேரையும் கையெழுத்திட வைத்திருக்கிறார் என்று தோன்றும். Round robin-ல் அதற்கான வாய்ப்பு இல்லை.
வட்டமேஜை மாநாடு என்பதன் பிண்ணனி அதில் கலந்து கொள்பவர்களுக்கிடையே உயர்வு தாழ்வு கிடையாது என்பதை வலியுறுத்துகிறது இதுபோன்ற கோணமும் round robin விண்ணப்பத்தில் உள்ளது.
**********
என் பேரன் ஒருநாள் என் மூக்குக் கண்ணாடியை ஜன்னல் வழியாக வெளியே வீசிவிட்டான். மூக்குக் கண்ணாடியைத் தேடியபோது ஜன்னலுக்கு வெளியே இருப்பதைப் பார்த்துவிட்டு, I finally found my specs looking out of window என்று எழுதினேன். அதை படித்து அவன் சிரிக்கிறான். என்ன தவறென்று புரியவில்லை.
I finally found my specs looking out of window என்றால் மூக்குக் கண்ணாடியே ஜன்னலுக்குப் பின்னால் பார்த்துக் கொண்டிருப்பது போலவும் அப்படி அது பார்ப்பதை நீங்கள் கண்டுபிடித்தது போலவும் அர்த்தம் வருகிறது. பார்த்தது நீங்கள்தான். எனவே வாக்கியத்தை கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டும்.
Looking out of window, I finally found my specs. இது சரியாக இருக்கும்.
இதை கார்ட்டூனும் விளக்குகிறது. Showing bright feathers, Mohan photographed the peacock. இதைப் படிக்கும்போது “மோகன் பளிச்சென்ற தன் இறகுகளைக் காட்டியபடி மயிலைப் படம் எடுத்தான்” என்று ஆகிறது. பளிச்சென்ற feathers கொண்டது மயில்தான். மோகன் அல்ல. எனவே Mohan photographed a peacock showing its bright feathers என்று மாற்றியமைக்கலாம்.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago