சேதி தெரியுமா: தகவல்கள் கண்காணிப்பு

By கனி

ஸ்டெர்லைட்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக அரசு மூடியிருந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் டிசம்பர் 15 அன்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ஜனவரி 21 அன்று அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை ஆலையைத் திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. அத்துடன், தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யவிருக்கிறதா என்று தெரிவிக்குமாறும் உத்தரவிட்டிருக்கிறது.

தகவல்கள் கண்காணிப்பு

மக்கள், தங்கள் கணினிகளிலும் கைப்பேசிகளிலும் சேகரித்துவைத்திருக்கும் தகவல்களை இடைமறிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் அழிப்பதற்கும் மத்திய அரசு பத்து நிறுவனங்களுக்கு டிசம்பர் 20 அன்று சட்ட அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சம் இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் ஆணை, தனிமனித உரிமைக்கு எதிரானது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
 

s2jpg

எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் டிசம்பர் 21 அன்று காலமானார். அவருக்கு வயது 73. 1995-ம் ஆண்டில் அவரது ‘வானம் வசப்படும்’ நாவல் சாகிtத்ய அகாடமி விருதைப் பெற்றது. புதுச்சேரியைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரான இவர், ‘மானுடம் வெல்லும்’, ‘கண்ணீரால் காப்போம்’, ‘மகாநதி’ உள்ளிட்ட நாவல்களையும் ‘நேற்று மனிதர்கள்’, ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும்  எழுதியிருக்கிறார்.
 

ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் வெற்றி

ராணுவத் தொலைத்தொடர்பு ஜிசாட் - 7ஏ செயற்கைக்கோளை இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து டிசம்பர் 19 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த ஜிசாட் – 7ஏ செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி-எஃப்11 ஏவுகணையின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோவின் 39-வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான இது ராணுவச் செயல்பாடுகளுக்கு உதவும்.

கல்விக்குக் கூடுதல் நிதி வேண்டும்

‘புதிய இந்தியாவுக்கான திட்டம் @75’ என்ற அறிக்கையை நிதி ஆயோக் டிசம்பர் 19 அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில், இந்தியா கல்விக்குக் குறைவாக நிதி ஒதுக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, 2022-ம் ஆண்டுக்குள் தனது உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தைக் கல்விக்கான நிதியாக ஒதுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் அறிவுறுத்திருக்கிறது.

சொராபுதீன் வழக்கு: 22 பேர் விடுதலை

2005-ம் ஆண்டு, சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 22 பேரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 21 அன்று விடுதலை செய்தது. இந்த வழக்கில் குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 21 காவல்துறை அதிகாரிகள் மீதும், சொராபுதீன் பண்ணை வீட்டு உரிமையாளர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவர்களுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்களை சிபிஐ தரப்பு வழங்காததால், இவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாக சிபிஐ நீதிபதி எஸ்.ஜே. ஷர்மா உத்தரவிட்டார்.

கோவா: 57-வது விடுதலை நாள் கொண்டாட்டம்

கோவா, தன் 57-வது விடுதலை நாளை டிசம்பர் 19 அன்று கொண்டாடியது. 450 ஆண்டுகால போர்த்துகீசிய ஆட்சியிலிருந்து இந்திய ராணுவப் படையெடுப்பின் மூலம் கோவா மீட்கப்பட்டு, 1961, டிசம்பர் 19 அன்று விடுதலை பெற்றது. 1963-ம் ஆண்டு இந்தியாவின் யூனியன் பிரதேசமாக இணைக்கப்பட்டது. 1987 மே 30 அன்று கோவா இந்தியாவின் தனி மாநிலமாக உருவானது.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர்

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ருங்கலா டிசம்பர் 20 அன்று நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது வங்க தேசத்துக்கான உயர் ஆணையராக இருக்கும் அவர், விரைவில் இந்தப் புதிய பொறுப்பை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகத் தற்போது இருக்கும் நவ்தேஜ் சர்னா, ஹர்ஷ் வர்தனிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார்.
 

s5jpgright

பெல்ஜியம் பிரதமர் ராஜினாமா

பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மிச்செல் டிசம்பர் 18 அன்று ராஜினாமா செய்தார். ஐ.நா. வின் உலகளாவிய புலம்பெயர்தல் ஒப்பந்தத்துக்கு அவரது தலைமையிலான அரசு ஆதரவு அளித்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து சார்லஸ் மிச்செல் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. இதைத் தொடர்ந்து சார்லஸ் மிச்செல் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
 

கடல் மட்டம் அதிகரிக்கும்

இந்திய கடற்கரையின் கடல் மட்டம் 3.5 –லிருந்து 34.6 அங்குலமாக 2100-ம் ஆண்டுக்குள் அதிகரிக்கும் என்ற தகவலை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா மக்களவையில் டிசம்பர் 21 அன்று தெரிவித்தார். இந்தியாவின் மேற்கு, கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் இந்த கடல் மட்ட மாற்றத்தால் அதிகமாக பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் பருவநிலை மாற்றங்களுக்கான திட்டங்களைக் கட்டமைக்கும் மாநாட்டுக்கு இந்தத் தகவலை இந்தியா தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்