குழந்தைகளுக்காகக் குரல் கொடுப்போம்!

By வா.ரவிக்குமார்

சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் வன்முறைகளுக்கு எதிராக குரல் எழுப்புவோம் எனும் பிரச்சாரத்தை கல்லூரிகள் தோறும் யுனிசெஃப் நிறுவனம் நடத்திவருகிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை குழந்தைகளிடம், பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் நாடகங்கள், பேச்சரங்கம் போன்ற கலைகளின் மூலமாகவும் கொண்டு போவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்திலும் இந்தப் பிரச்சாரத்தை யுனிசெப் அண்மையில் முன்னெடுத்தது. 

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஏழு மாணவிகளைக் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

கடந்த ஆறு மாதங்களாக தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவி களுக்கு பயிற்சிகளை யுனிசெப் வழங்கி இருக்கின்றனர். பயிற்சி பெற்ற இந்த மாணவர் குழுவினரின் நோக்கம், குழந்தைகளுக்காக குரல் கொடுப்பதே!

இணையும் குரல்கள்

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து ஓவியக் கண்காட்சிகளை அமைப்பது, கல்வி சார்ந்த விழிப்புணர்வை அளிப்பது, விழிப்புணர்வு முகாம்களை பள்ளி, கல்லூரிகளில் நடத்துவது, வீதி நாடகங்களின் வழியாக கருத்துகளைப் பரப்புவது போன்ற வழிகளில் இந்தப் பிரச்சாரத்தை நடத்திவருகின்றனர். தியாகராயநகர் பாலமந்திர் தொடக்கப் பள்ளி, சாராதா வித்யாலயா, சாலிகிராமம் காவேரி தொடக்கப் பள்ளி போன்றவற்றில் இந்த நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கின்றனர்.

இந்தக் குழுவில் ஒருவரான ஹவிலாவிடம் எத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை குழந்தைகளிடம் நடத்துவீர்கள் என்று கேட்டபோது, “இளம் தலைமுறையினரைக் கொண்டே குழந்தைகளுக்கான விழிப்புணர்வை அளிக்கும் பயிற்சிகளை அளிக்க யுனிசெஃப், தோழமை அமைப்பு சேர்ந்து முடிவெடுத்தன. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் சமூகவியல் படிக்கும் மாணவிகளைக் கொண்ட குழுவை உருவாக்கினர்.

யுனிசெஃப்பின் சுகதா ராய் தமிழகம், கேரளாவில் இருக்கும் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சியாளராக இருப்பவர். இவர்தான் எங்களுக்கு மூன்று நாள் பயிற்சிகளை கொடுத்தார். முதலில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் குறித்த எங்களுடைய புரிதல்களை கேட்டு அறிந்த பின், தொழில்நுட்ப ரீதியாக எதுமாதிரியான சைபர் கிரைம் சம்பவங்கள் நாட்டில் நடக்கின்றன என்பதைக் குறித்த விழிப்புணர்வை எங்களுக்கு அளித்தார்.

அதோடு, குழந்தைகள், பெண்கள் கடத்தல், குழந்தைத் தொழிலாளர்களுக்கான ஈடுபடுத்தும் பிரச்சினைகளைப் பற்றியும் எங்களிடம் பேசினார். ஒரு குழந்தைக்கோ பதின்பருவத்தில் இருப்பவர் களுக்கோ தெரிந்த நபர்களாலேயே அதிகம் வன்முறைகள் நடக்கின்றன என்பதைப் புரியவைத்தார்.

குழந்தைகளுக்கு 'நல்ல தொடுதல் / தீய தொடுதல்', போன்றவற்றைப் புரியவைப்பதுடன், உனக்கு பிடிக்காத விஷயம் நடந்தால் உடனே சத்தமிடுவது, நம்பிக்கையானவர்களுடன் பகிர்ந்துகொள்வது, வளர்ந்த சிறுமிகளுக்கு உதவி எண் 1098 குறித்த புரிதலை ஏற்படுத்துகிறோம். இந்த அவசர உதவி எண்ணைக் குறித்த புரிதல் பல கல்லூரி மாணவிகளுக்கேகூட இல்லாமல் இருக்கிறது.

கலையின் எல்லா வடிவங்களின் மூலமாகவும் குழந்தைகளுக்கான எங்களின் குரலை சமூகத்தில் பலமாக எழுப்பி வருகிறோம். அதில் உங்களின் குரலும் இணைய வேண்டும் என்பதை எங்களின் நிகழ்ச்சியில் இறுதியாக வலியுறுத்துவோம். பார்வையாளர்களிடமிருந்து கிடைக் கும் பலமான வரவேற்பு எங்களின் நோக்கத்தை வலுப்படுத்தும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்