கேள்வி நேரம்: அறிவியல் சிந்தனையின் அடிப்படைகள்

By ஆதி வள்ளியப்பன்

1. எட்வின் ஹப்பிள், ஜார்ஜஸ் லெமாய்ட்ர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகியோரின் ஆராய்ச்சிபடி பிரபஞ்சம் என்பது 1,400 கோடி ஆண்டுகளுக்கு முன் பெரிய வெடிப்பு ஒன்றின் அடிப்படையில் உருவானது என்ற கொள்கையின் பெயர் என்ன?

2. இயற்கைத் தேர்வின் அடிப்படையில் நடைபெறும் பரிணாமவியல் வளர்ச்சியின் காரணமாகவே பூமியில் கணக்கற்ற உயிர்கள் பெருகியுள்ளன என்ற கருதுகோளின் அடிப்படையில் சார்லஸ் டார்வின் முன்வைத்த கொள்கை எது?

3. சில குறிப்பிட்ட குணாம்சங்களைப் பெற்றோரிடம் இருந்து வாரிசுகளுக்கு மரபணுக்கள் எப்படிக்  கடத்துகின்றன என்பதை விளக்கிய கொள்கையை முன்வைத்தவர்  பாதிரியார் கிரிகோர் மெண்டல். 'மரபியலின் தந்தை' எனப் போற்றப்படும் இவர் முன்வைத்த மேற்கண்ட கொள்கையின் பெயர் என்ன?

4. திரவத்தில் அமிழ்த்தப்பட்ட ஒரு பொருளின் மீது செயல்படும் மேலுதைப்பு விசை (Buoyancy) அப்பொருளால் இடம்பெயர்க்கப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம் என்ற தத்துவத்தின் பெயர் என்ன?

5. ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது என்பது முதல் விதி; ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாதபோது பொருளின் மீது ஏற்படும் விளைவை விளக்குவது இரண்டாவது விதி; ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும் என்பது மூன்றாவது விதி. இந்த விதிகளை முன்வைத்தவர் சர் ஐசக் நியூட்டன். இந்த விதிகளின் கூட்டுப் பெயர் என்ன?

6. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முன்வைத்த இந்தக் கோட்பாடு பிரபஞ்சத்தை நாம் புரிந்துகொள்ளும் முறையைத் தலைகீழாக மாற்றியது. அவருடைய இந்தக் கோட்பாடு ஈர்ப்பு விதிகளை மறுவரையறை செய்தது. ஈர்ப்புவிசைக்கும் நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு பொருளின் உள்ளே இருக்கும் நிலைத்தன்மையின் (inertia) விசைக்கும் இடையிலான வேறுபாட்டைக் கூறுவது கடினம் என்று கூறிய அந்தக் கோட்பாட்டின்  பெயர் என்ன?

7. பிரிட்டன் இயற்பியலாளரும் நாவலாசிரியருமான சி.பி. ஸ்நோ, வெப்ப ஆற்றல் தொடர்பான விதிகளை ஒரு சாதாரண மனிதர் தெரிந்துகொள்ளாமல் இருப்பது, ஒரு விஞ்ஞானி ஷேக்ஸ்பியரைப் படிக்காமல் இருப்பதற்குச் சமமானது என்றார். இருவருமே இரண்டு விஷயங்களையும் அவசியம் அறிந்திருக்க வேண்டும் என்பது அவருடைய வலியுறுத்தல். ஒரு இயந்திரமோ பூமியின் மையமோ - எந்த அமைப்பாக இருந்தாலும் அதில் ஆற்றல் எப்படிச் செயல்படுகிறது என்பதை விளக்கும் வகையில் அவர் வெளியிட்ட மூன்று விதிகளின் பொதுப்பெயர் என்ன?

8. சூரியக் குடும்பத்தில் இடம்பெற்றுள்ள கோள்கள் சூரியனைச் சுற்றி முட்டை வடிவச் சுற்றுப்பாதையில் சுற்றுகின்றன என்றும். அவை சூரியனுக்கு அருகே வரும்போது வேகமாகவும், சூரியனிலிருந்து விலகியிருக்கும்போது மெதுவாகவும் நகர்வதாக யோஹான்னஸ் கெப்ளர் முன்வைத்த விதிகளின் பெயர் என்ன?

9. 1920-களில் பொருளாதாரத் தேக்கநிலை மிகவும் மோசமாக நிலவியபோது, வானியலாளர் எட்வின் ஹப்பிள் வானியல் ஆராய்ச்சியில் மிகப் பெரிய கண்டுபிடிப்பைச் செய்தார். நமது பால்வீதியைத் தவிர வேறு பல நட்சத்திர மண்டலங்கள் (galaxies) இருக்கின்றன. இந்த நட்சத்திர மண்டலங்கள் நம்முடைய பால்வீதியிலிருந்து பின்னகர்ந்து சென்று கொண்டிருக்கின்றன என்ற விதியை முன்வைத்தார். அந்தக் கோட்பாட்டின் பெயர் என்ன?

10. எடை கொண்ட எல்லாப் பொருட்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையவை என்ற கருதுகோளை சர் ஐசக் நியூட்டன் 300 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்தார். அந்த விதியின் பெயர் என்ன?

விடைகள்:

1. பெரு வெடிப்புக் கோட்பாடு (Big Bang Theory)

2. பரிணாமவியல் கொள்கை (Theory of Evolution)

3. மரபியல் கொள்கை (Laws of Heredity)

4. ஆர்கிமிடீஸின் தத்துவம் அல்லது மேலுதைப்புத் தத்துவம் (Principle of Buoyancy)

5. நியூட்டனின் இயக்க விதிகள் (Newton's laws of motion)

6. சார்பியல் கோட்பாடு (Theory of Relativity)

7. வெப்ப இயக்கவியல் விதிகள் (Laws of Thermodynamics)

8. கெப்ளரின் கோள் இயக்க விதிகள் (Laws of Planetary Motion)

9. ஹப்பிளின் அண்ட விரிவு விதி (Hubble's Law of Cosmic Expansion)

10. நியூட்டனின் ஈர்ப்பு விதி (Law of Gravitation)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்