வெற்றி மொழி: இரவீந்திரநாத் தாகூர்

By செய்திப்பிரிவு

1861-ம் ஆண்டு முதல் 1941-ம் ஆண்டு வரை வாழ்ந்த ரவீந்திரநாத் தாகூர் வங்காள கவிஞர். நாடக ஆசிரியர், மெய்யியலாளர், இசைக்கலைஞர் மற்றும் ஓவியர் என பல்துறையறிஞராக விளங்கியவர். வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தவர். தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத்தொடங்கி சிறுகதை, நாடகம், ஓவியம், கேலிச்சித்திரம், கட்டுரை மற்றும் பாடல்கள் என பல படைப்புகளை கொடுத்துள்ளார். கீதாஞ்சலி என்னும் தனது புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பிற்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றுள்ளார். இந்தியா மற்றும் வங்கதேசத்தின் தேசியகீதங்களை இயற்றிய பெருமை இவருக்கு உண்டு.

# வெறுமனே நின்று தண்ணீரைப் பார்த்துக்கொண்டு இருப்பதன் மூலமாக உங்களால் கடலை கடக்க முடியாது.

# உங்கள் அழைப்பிற்கு யாரும் பதிலளிக்கவில்லை என்றால், பிறகு உங்களது சொந்த வழியில் தனியாக செல்லுங்கள்.

# அன்பு என்பது வெறுமனே ஒரு உணர்வு அல்ல, அது உண்மை.

# நட்பின் ஆழம் அறிமுகத்தின் நீளத்தைச் சார்ந்தது அல்ல.

# நாம் இந்த உலகத்தை தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம்.

# பூவின் இதழ்களை பறிப்பதன் மூலமாக, உங்களால் அதன் அழகை சேகரிக்க முடியாது.

# ஒரு இலையின் முனையில் உள்ள பனியைப்போல, நேரத்தின் விளிம்புகளில் உங்கள் வாழ்க்கை எளிமையாக நடனம் புரியட்டும்.

# பட்டாம்பூச்சி மாதங்களை கணக்கிடுவதில்லை தருணங்களை கணக்கிடுகிறது, அதுவே அதற்கு போதுமான நேரமாக உள்ளது.

# அன்பு ஒரு முடிவில்லா மர்மம், ஏனென்றால் அதை விளக்குவதற்கு வேறு எதுவுமில்லை.

# யார் அதிகமாக வைத்திருக்கிறார்களோ அவர்களே அதிகமாகப் பயப்படுகிறார்கள்.

# கலையில், மனிதன் தன்னை வெளிப்படுத்துகிறான் பொருட்களை அல்ல.

# மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது, ஆனால் எளிமையாக இருப்பது மிகவும் கடினம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE