ஒளிப்படத்தை எளிதில் மெருகேற்றலாம்

By முகமது ஹுசைன்

கேமராவின் கண்களால் படம் பிடித்த காட்சியை மெருகேற்றுதல் என்பது உருவத்தையோ வடிவத்தையோ மாற்றியமைப்பதில் இல்லை. அது ஒளிப்படத்தில் இருக்கும் நபரை இன்னும் அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்வதில் உள்ளது.

ஆப்களைத் தவிர்க்கலாமே 

வட்ட வடிவமான முகத்தைச் சற்று நீளமானதாக மாற்ற, சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்க, பற்களின் வெண்மையை அதிகரிக்க, புருவத்தின் வளைவைச் சற்றுக் கூட்ட, குவிக்க, மூக்கின் கூர்மையை அதிகரிக்க… இப்படி நம்மையே நாம் மாற்றிக்கொள்ளக்கூடிய அம்சங்களை கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஏகப்பட்ட ‘ஆப்’கள் வழங்குகின்றன. ஆனால், இதை மெருகேற்றல் என்பதைவிட மாறுவேடப் போட்டிக்கு நாம் போடும் ஒப்பனை என்று சொல்வதே பொருத்தம்.

முப்பரிமாணப் படம் 

நன்கு மெருகேற்றிய ஒளிப்படம் முப்பரிமாணம் கொண்டதாக இருக்கும். ஒளிப்படத்தில் இருக்கும் ஒளியையும் நிழலையும் கண்டறியும் கண்கள் அதற்குத் தேவை. ஒளிப்படம் எடுக்கும்போதே அவற்றைக் கருத்தில் கொண்டு படம் எடுத்தால், மெய் சிலிர்க்க வைக்கும் ஒளிப்படம் கிடைக்கும்.

ஒளிப்படத்தில் இருக்கும் ஒளியைக் கூட்டிக் குறைத்து, ஒளி பாயும் திசையை மாற்றியமைத்து, அதனால் பரவும் நிழலின் நீளத்தையும் அடர்த்தியையும் சீரமைப்பதன் மூலம், ஒளிப்படத்தில் இருக்கும் உருவம், ஒளிப்படத்திலிருந்து துறுத்திக்கொண்டு தெரியுமாறு செய்யலாம்.

பாலுமகேந்திராவின் ஒளிப்படங்களை முப்பரிமாண ஒளிப்படத்துக்கு உதாரணமாகச் சொல்லலாம். அவருக்கு இயற்கையாகவே ஒரு காட்சியை முப்பரிமாணத்துடன் காணும் கண்கள் இருந்தன. இளம் வயதில் இலங்கையில் அவர் பார்த்த பொறியியல் வரைவாளர் வேலையும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

படங்களின் வகைகள்

மெருகேற்றுவதற்கு முதலில் தரமான ஒளிப்படத்தை எடுத்திருக்க வேண்டும். DSLR கேமராவைப் பொறுத்தவரை எடுக்கும் படத்தை RAW, JPEG என இரண்டு வகையாகப் பதிவுசெய்யலாம்.

RAW வடிவில் இருக்கும் படத்தில், உங்கள் கண்களில் விழுந்த காட்சியின் அனைத்து விஷயங்களும் இருக்கும். RAW வடிவைக் காட்சியின் அசல் பிரதி எனலாம். அது உங்களின் கண்கள் வழியாக மூளைக்குச் செல்வதற்கு முன்பே பிரதி எடுக்கப்பட்ட ஒன்று.

JPEG வடிவில் இருக்கும் படம் கேமராவால் தானே உருவாக்கப்பட்ட ஒளிப்படம். அதாவது மூளையில் பதிந்த அந்தக் காட்சியின் நினைவைப் போன்றது; ஓர் ஓவியத்தைப் போன்றது. JPEG வடிவில் இருக்கும் படத்தை ஓரளவுக்குத்தான் மெருகேற்ற முடியும்.

RAW வடிவில் இருக்கும் படத்தை மெருகேற்றுவதற்கு உங்கள் திறனின் அளவுதான் எல்லை. RAW வடிவில் படம் எடுத்துக்கொள்வது புத்திசாலித்தனம். ஒளிப்படம் எடுக்கும்போது செய்த தவறுகளை, கணினியில் நாம் திருத்திக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு exposure, shutter speed, aperture, ISO, colour tone போன்றவற்றைப் பின்னர் மாற்றிக்கொள்வது.

மெருகேற்ற உதவும் மென்பொருட்கள் 

மெருகேற்றத் தேவையான மென்பொருட்கள் கேமராவுடன் சேர்த்தே தரப்படுகின்றன. Canon Digital Photo Professional, Nikon ViewNX-i & Capture NX-D போன்றவை அவற்றில் முக்கியமானவை. ஆனால், மென்பொருட்களைப் பொறுத்தவரை Adobe PhotoShop, Adobe Lightroom ஆகிய இரண்டுமே சிறந்தவை.

Adobe-ஐப் பொறுத்தவரை நிறைய preset-கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி, பயிற்சி ஏதுமின்றி சில நொடிகளில் உங்கள் ஒளிப்படத்தை நீங்கள் மெருகேற்றிக்கொள்ளலாம். பொழுதுபோக்குக்காக ஒளிப்படம் எடுப்பவர்களுக்கு இவை போதும்.

தொழில்முறையாக ஒளிப்படம் எடுக்க நினைப்பவர்கள் Adobe மென்பொருட்களில் நிபுணத்துவம் பெற வேண்டியது அவசியம். அதற்கு இணையத்தில் ஏராளமான பயிற்சி வகுப்புகள் உள்ளன.

ரசனையை வளருங்கள்

கேமராவை எப்படிப் பயன்படுத்துவது, மென்பொருட்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத்தான் இந்தப் பயிற்சி வகுப்புகள் சொல்லித் தரும். உங்கள் ரசனையையும் அழகியல் உணர்வையும் நீங்கள்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். மனிதர்களின் முகங்கள், குழந்தையின் புன்னகை, மழைத்துளியின் லயம், வானில் சூரியன் நிகழ்த்தும் வர்ணஜாலம் போன்றவற்றைப் பார்க்கத் தொடங்குவது அதற்கு உதவக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 mins ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்