வணிக வீதி

நிலையான செல்வத்தை உருவாக்க பதற்றம் இல்லாத சிறந்த பாதை

செய்திப்பிரிவு

நமது அடுத்த தலைமுறைக்கு தேவையான செல்வத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் கனவு. அந்த வகையில், ஒரு வெற்றிகரமான முதலீட்டு பயணம் என்பது அதிக வருமானத்தை ஈட்டுவது மட்டுமல்ல. மாறாக அதில் எந்த அளவுக்கு மகிழ்ச்சியான மற்றும் மன அழுத்தம் இல்லாத அனுபவம் அடங்கியுள்ளது என்பதும் மிக முக்கியமானது.

அதிக வருமானத்தை மட்டும் ஈட்ட வேண்டும் என்று கவனம் செலுத்துவது பெரும்பாலும் சமரசமான முதலீட்டு செயல்முறைக்கே வழிவகுக்கும். எனவே முதலீட்டு பயணம் முழுவதும் சில அடிப்படையான கொள்கைகளை கடைபிடித்து நிலையான செல்வத்தை உருவாக்குகிறோமா என்பது ஒவ்வொருவரின் அவசியமான கேள்வியாகும்.

அதற்கு பதில் சொத்து ஒதுக்கீடு (அசட் அலோகேஷன்). இது பல்வேறு சந்தை சுழற்சிகளில் உங்களது ஒட்டுமொத்தமான முதலீட்டு அனுபவத்தை கணிசமாக இன்பமானதாக மாற்றும். சொத்து ஒதுக்கீடு என்பது, நமது முதலீடுகளை மைக்ரோ, மேக்ரோ பொருளாதார நிலைமைக்கேற்ப பொருத்தமான விகிதத்தில் பல்வேறு சொத்துகளில் எவ்வாறு மாற்றியமைக்கிறோம் என்பதாகும். பொதுவாக, இந்த திட்டம் நிறுவன பங்குகள், கடன் பத்திரம், தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் சந்தை நிலைக்கேற்ப முதலீடு செய்வதை உறுதி செய்கிறது.

மிகவும் அபாயகரமான சொத்து வகைகளில் ஒன்றுதான் பங்குகள். அதிக வருமானத்துக்கு பெயர் பெற்றது. மறுபுறம் கடன் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு ஸ்திரத்தன்மையுடன் கூடிய நிலையான வருமானத்தை அளிக்கிறது. ரியல் எஸ்டேட் முதலீடு வருமானத்தை அள்ளித் தரும். அதேவேளையில் தங்கம் பணவீக்கத்தை சரி செய்வதற்கான வலுவான முதலீடாக கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த சொத்து வகுப்புகள் அனைத்தும் வெவ்வேறு சந்தை சுழற்சிகளை உள்ளடக்கி உள்ளது. சில சமயங்களில் தங்கம் முன்னிலை வகிக்கும் போது மற்றவை பின்தங்கும். சில நேரம் பங்குகள் முன்னிலை வகிக்கும். எனவே, ஒற்றை சொத்து வகுப்பில் மட்டுமே நமது முதலீடுகளை குவிப்பது அபாயங்களை அதிகரிப்பதுடன் குறிப்பிடத்தக்க சேதத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இங்குதான் சொத்து ஒதுக்கீடு திட்டம் என்பது மதிப்புமிக்கதாக மாறுகிறது.

இவ்வகுப்பில் முதலீட்டை பராமரிப்பதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நீண்டகால அடிப்படையில் வெகுமதி கிடைக்கிறது. இந்த வகுப்பு சொத்துகள் ஆபத்துகளை முழுவதுமாக பன்முகப்படுத்துகிறது. தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தாமல், நல்ல வருவாய் மற்றும் ஒவ்வொரு வகுப்புக்கான நன்மைகளை உறுதி செய்கிறது.

அசட் அலோகேட்டர் பண்ட்ஸ், டைனமிக் அசட் அலோகேஷன் பண்ட்ஸ், மல்டி அசட் பண்ட்ஸ் போன்ற திட்டங்கள் பயனுள்ள சொத்து ஒதுக்கீடு உத்தியை செயல்படுத்துவதற்கும் நீண்டகால செல்வத்தை முதலீட்டாளர்களுக்கு உருவாக்குவதற்கும் உகந்த திட்டங்களாக அமைந்துள்ளன. டைனமிக் சொத்து ஒதுக்கீட்டை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஐசிஐசிஐ புருடென்ஷியல் அசட் அலோகேஷன் பண்ட் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

இந்த திட்டமானது, பங்குகள், கடன் பத்திரங்கள், தங்க பரஸ்பர நிதி ஆகியவற்றில் அதன் ஒதுக்கீடுகளை தீவிரமாக நிர்வகிக்கிறது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை வழங்குகிறது.

கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் / பரிந்துரைகள் இந்த பிராண்டின் முழு பொறுப்பாகும்.

- ஐ.ஜினென், இயக்குநர், மை SIIP பாக்ஸ் (ஐ.ஜே. அசோசியேட்ஸ் ஐஎம்எப் பிரைவேட் லிமிடெடின் ஒரு யூனிட்)

SCROLL FOR NEXT