வணிக வீதி

வெற்றிகரமான முதலீட்டுக்கான திறவுகோல்: சின்னதுரை கன்னியப்பன், சிஇஓ, கேசி பைனான்சியல் சர்வீசஸ்

செய்திப்பிரிவு

சந்தையில் ஏராளமான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஒருவர் தனது எதிர்கால போர்ட் போலியோவை உருவாக்க பங்குகள், கடன்பத்திரம், கமாடிட்டி, ரியல் எஸ்டேட் போன்ற வற்றில் முதலீடு செய்யலாம். ஆனால், வருவாய் உருவாக்கம், வெகுமதிக்கான அபாயம், வரி விதிப்பு, வெவ்வேறு விதமான சந்தை சுழற்சிகளை வெளிப்படுத்தல் ஆகிய ஆபத்துகளை அவை உள்ளடக்கியுள்ளன. இவை வெளிப்படும்போது அந்த முதலீடுகள் ஒவ்வொன்றும் தனித்துவமான இடர்பாடுகளை கொண்ட சொத்தாக வகைப்படுத்தப்படுகின்றன. இதற்கு பொருள், அந்த அனைத்து சொத்துகளும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக செயல்படாது என்பதே.

பங்குகள் ஒரு சில சமயங்களில் சிறப்பாக செயல்படும். மற்ற சொத்துகளின் செயல்திறன் குறைவாக இருக்கும். அல்லது நேர்மாறாகவும் அமையலாம். எனவே, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு தொகுப்புகளை தேவையற்ற இடர்களில் வைக்காமல் எந்த நேரத்திலும் அனைத்து சொத்து பிரிவுகளின் பலன்களை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த வியூகம் நீண்டகால வாழ்க்கை இலக்குகளை நிறைவேற்றுவதற்கு பயனுள்ளதாக அமையும்.

சொத்து ஒதுக்கீடு: சொத்து ஒதுக்கீடு உத்தி என்பது நீண்டகால வருவாயை மேம்படுத்தும். அதே வேளையில் அபாயங்களை பல்வகைப்படுத்தும் முதலீட்டு உத்தியாகும். இது, நிதி ஒதுக்கீடு செய்யும் செயல்முறை அடிப்படையை உள்ளடக்கியது. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது என்ற பழமொழியுடன் நெருங்கிய ஒப்புமையை கொண்டதாகவும் உள்ளது இந்த சொத்து ஒதுக்கீட்டு உத்தி.

எதிர்பாராத விதமாக கூடை கை தவறி விழுந்தால் அத்தனை முட்டைகளும் உடைந்து நொறுங்கும் அபாயம் உள்ளது. எனவே. ஒரு மோசமான சூழ்நிலையில் முட்டைகளை ஒட்டுமொத்தமாக இழக்காமல் இருப்பதை உறுதி செய்ய வெவ்வேறு இடங்களில் முட்டைகளை வைக்க வேண்டும் என்கிறது இந்த உத்தி. இதேபோன்று, முதலீட்டாளர்களும் தங்களது முதலீடுகளை, பங்குகள், கடன் பத்திரம், தங்கம், ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு வகுப்புகளில் வகைப்படுத்த வேண்டும்.

இதன் மூலம், முதலீட்டாளர்கள் தங்களது போர்ட்போலியோவை ஒரு குறிப்பிட்ட சொத்து வகுப்பில் மட்டும் குவிப்பதை தடுக்கிறது. ஆபத்து நிர்வாகம் சமநிலைப்படுத்தப்படுகிறது. இடர்பாடுகளிலிருந்து தப்பிக்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்த ஒன்றாகும். இது, சிறந்த மற்றும் நிறுவப்பட்ட வழிமுறையும் கூட. இந்த திட்டங்கள் பயனுள்ள சொத்து ஒதுக்கீடு தீர்வைத் தேடும் முதலீட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.

இதற்காக பல்வேறு திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இதில், மல்டி-அசட்பண்ட்ஸ், அசெட் அலோகேட்டர் பண்ட்ஸ், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்ட்ஸ் ஆகியவை கருத்தில் கொள்ளத்தக்க மதிப்புமிக்க திட்ட வகைகளாகும். அதில் ஒன்றுதான் ஐசிஐசிஐ புருடென்ஷியல் அசெட் அலோகேட்டர் பண்ட். இந்த திட்டமானது, பங்குகள், கடன்பத்திரம், தங்க மியூச்சுவல் பண்ட், இடிஎப் திட்டங்களில் முதலீட்டாளர்களின் நிதியை தேவைக்கு தகுந்தபடி மாற்றியமைத்து சிறந்த வருவாயை வழங்க வழிவகை செய்கிறது.

கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் / பரிந்துரைகள் இந்த பிராண்டின் முழு பொறுப்பாகும்.

SCROLL FOR NEXT