உயிர் மூச்சு

உத்வேகம் ஊட்டும் பசுமை ஆளுமையின் கதை

செய்திப்பிரிவு

மாணவராகப் படித்த காலத்தில் அவரால் அடுத்தடுத்த வகுப்புகளுக்குத் தேர்ச்சிபெற முடியாது என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். கல்லூரிப் படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் வேதியியல் படிக்குமாறு அவரிடம் சிலர் வலியுறுத்தியுள்ளனர். மருத்துவப் படிப்பு பற்றியும்கூடக் கூறியிருக்கிறார்கள்.

ஆனால், அவர் விரும்பித் தேர்ந் தெடுத்ததோ விலங்கியல். அதிலும் இளங்கலை, முதுகலைப் பாடங்களில் இரண்டாம் நிலையிலேயே அவர் தேறியிருந்தார்.

இருந்தபோதும் தன் அறிவையும் ஆன்மாவையும் அதற்காக அர்ப்பணித்தார். விலங்கியலை, விலங்கியலாக மட்டு்மே அவர் எடுத்துக் கொள்ளவில்லை. மிக ஆழமாகச் சென்றார். இயற்கை வேளாண்மையின் ஆதாரங்களில் ஒன்றான மண்புழுக் களைப் பற்றி ஆராய்ந்தார். இயற்கை வேளாண் மையை, மண்புழு உரத்தைப் பற்றிச் செல்லும் இடமெல்லாம் பரப்பினார்.

இன்றைக்கு 80 ஆய்வுக் கட்டுரைகளையும், 20 முனைவர் பட்ட ஆய்வாளர்களையும் உருவாக்கியுள்ளார். தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு, தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கைக் குழு எனப் பல்வேறு குழுக்களில் செயல்படுபவராக உயர்ந்துள்ளார்.

எனவே மதிப்பெண்கள் அல்ல, ஒருவரது ஆர்வமும் மனஉறுதியும்தான் ஒருவரை வரையறுக்கின்றன என்பதைத் திட்டவட்டமாக அழுத்திக் கூறுகிறார் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில். அவருடைய வாழ்க்கைப் பயணத்தை இந்த நூல் நமக்குக் கூறுகிறது. - அன்பு

மண்புழு தாத்தாவின் மண் நலப் புரட்சிப் பாதை,
சுல்தான் இஸ்மாயில்,
எழிலினி பதிப்பகம்,
தொடர்புக்கு: 98406 96574

SCROLL FOR NEXT