கழுகு வேட்டை முருகன் | கதை

By செய்திப்பிரிவு

அடர்ந்த காட்டில் வழிதவறி வந்துவிட்ட முயல் குட்டி ஒன்று, பயத்துடன் வாழ்ந்துகொண்டிருந்தது. உணவுக்காகப் புதரைவிட்டு வெளியே வந்த முயல், சுற்றும் முற்றும் பார்த்தது. அப்போது அதன் தலைமீது பொத்தென்று ஏதோ ஒன்று விழுந்தது. பயத்தில் மீண்டும் புதருக்குள் நுழைந்துவிட்டது.

சிறிது நேரம் கழித்துப் புதரிலிருந்து வெளிவந்த முயல், ‘ஐயோ... இந்த அடிபட்ட கிளிதான் என் மேல் விழுந்ததா? இதை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே’ என்று நினைத்தது. உடனே தன் நண்பன் குரங்கைத் தேடிச் சென்றது முயல். “என்னப்பா, எதுக்கு இப்படி ஓடி வர்றே? ஏதாவது ஆபத்தா?” “அதெல்லாம் இல்ல. ஒரு கிளி அடிபட்டு, மயக்கமா இருக்கு. அதை எப்படியாவது காப்பாத்தணும். உன்னால் முடியுமா?” என்று கேட்டது முயல்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னால, ஒரு கழுகு இந்தப் பக்கம் பறந்ததைப் பார்த்தேன். அதுதான் கிளியைத் துரத்தியிருக்கணும். நல்லவேளை கிளி தப்பிச்சிருச்சு. வா, போய்ப் பார்க்கலாம்” என்று முயலுடன் சேர்ந்து நடந்தது குரங்கு. வழியில் உள்ள மரத்தில் ஏறி, சில பழங்களைப் பறித்துக்கொண்டது குரங்கு. கிளி இன்னும் மயக்கத்தில்தான் இருந்தது. குரங்கு கொடுத்த பழம் ஒன்றை எடுத்து, கிளியின் வாயில் வைத்தது முயல். கண்களைத் திறக்காமல் பழத்தை வேகமாகத் தின்றது கிளி.

சில நிமிடங்களுக்குப் பிறகு கண் விழித்த கிளி, “ஆ... ஐயோ... நான் எங்கே இருக்கேன்?” என்று கேட்டது. “நீ எங்கிருந்து வந்தாய் என்று எங்களுக்குத் தெரியாது. இங்கு வந்து விழுந்து, மயக்கமாகியிருக்கிறாய். முயல் பயத்துடன் என்னிடம் ஓடிவந்து உதவி செய்யச் சொன்னது. அதான் வந்தேன்” என்றது குரங்கு. “எனக்குக் காயம் எல்லாம் இல்லை. கழுகு துரத்தியதால் பயத்தில் வந்த மயக்கம். பழம் ரொம்ப சுவையா இருக்கு. உங்க ரெண்டு பேருக்கும் நன்றி” என்றது கிளி. “உன்னால் உடனே நீண்ட தூரம் பறந்து செல்ல முடியாது. இந்தப் பகுதியிலேயே தங்கிவிடு. இனி நாம் மூவரும் நண்பர்கள்” என்றது முயல்.

கிளியும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தது. “இனி நாம் எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்ல வேண்டும்” என்றது முயல். “அது தவறு. நாம் மூவரும் வெவ்வேறு இனங்கள். வெவ்வேறு பழக்கவழக்கங்கள். ஒன்றாகச் சென்றால் ஆபத்தில் மாட்டிக்கொள்வோம். அவரவர் இரையைத் தேடுவோம். ஓய்வு நேரத்தில் ஒன்றாக இருப்போம்” என்றது குரங்கு. மாதங்கள் சென்றன.

ஒருநாள் முயல் வெள்ளரிக்காயைச் சுவைத்துக் கொண்டிருந்தபோது, ஒரு கழுகு அதைப் பார்த்துவிட்டது. கழுகு தன்னை நோக்கி வருவதை அறிந்த முயல், வேகமாகக் குரங்கு இருக்கும் மரத்தை அடைந்தது. குரங்கிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, புதருக்குள் சென்றுவிட்டது. மரத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்த கிளியிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்லிவிட்டு, குரங்கு மறைவான இடத்துக்குச் சென்று விட்டது.
முயல் இருக்கும் இடத்தைச் சுற்றியே கழுகு வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதைக் கண்ட குரங்கு, முயலைக் காப்பாற்றும் எண்ணத்தில் மரத்திலிருந்து குதித்தது.

குரங்கைக் கண்ட கழுகு அதைப் பிடிப்பதற்காகப் பறந்து வந்தது. கழுகு நெருங்கி வந்தபோது, அந்தக் குரங்கைப் பிடிக்க ஒரு சிறுத்தைக் குட்டி ஓடிவந்தது. உடனே குரங்கை விட்டுவிட்டு, சிறுத்தைக் குட்டியைத் தூக்கிக்கொண்டு பறந்தது கழுகு. தப்பித்தோம் பிழைத்தோம் என்று குரங்கு தன் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தது. முயலும் கிளியும் அங்கு வந்தன. “நல்லவேளை இன்று, நாம் மூவரும் உயிர் தப்பினோம்” என்றது முயல். “ஒரு ஆபத்து என்றவுடன் நாம் மூன்று பேரும் ஒருவருக்கு இன்னொருவர் உதவி செய்துகொண்டதால்தான் உயிர் பிழைக்க முடிந்தது. நம் ஒற்றுமைதான் நம்மைக் காப்பாற்றியது.”

“ஆமாம்.” “அட, அங்கே பாரு... சிறுத்தைக் குட்டியும் தப்பிவிட்டது போல” என்று ஆச்சரியப்பட்டது முயல். “பசி கொண்ட கழுகு மறுபடியும் வரலாம், அவரவர் இடத்துக்குச் சென்று ஓய்வெடுக்கலாம்” என்று முயலையும் கிளியையும் அனுப்பி வைத்தது குரங்கு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்