மனநலப் பாதிப்புக்கான சிகிச்சையின்போது பல மாதங்கள் தொடர்ந்து மருத்துவரைச் சந்திக்க வேண்டும், மருந்து மாத்திரைகள் உள்கொள்ள வேண்டும். முழுமையாகக் குண மடைய தொடர் சிகிச்சை அவசியம். இதற்காக அதிகப் பணம் செல வழிக்க வேண்டும் என்பதே பெரும் பாலானோரின் தவறான புரிதலாக உள்ளது. இது உண்மை நிலவரம் அல்ல.
அரசு மருத்துவமனைகளில் மனநலச் சேவை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகள், வட்டார சுகாதார நிலையங்களில் மாவட்ட மனநலத் திட்டத்தின் மூலமாக ‘Advance Tour Program’ வழியாக மாதந்தோறும் குறிப்பிட்ட சில நாள்களில் மனநல மருத்துவச் சேவை வழங்கப்படுகிறது. இதில் மனநல மருத்துவர் தலைமையிலான உளவியலாளர், சமூகப் பணியாளர், செவிலியர் ஆகியோர் அடங்கிய குழு மனநல மருத்துவச் சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டில் சுமார் 600க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ மையங்களில் இச்சேவை வழங்கப் படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் மனநலச்சிகிச்சைகள், உளவியல் ஆலோ சனைகள், மறுவாழ்வுக்கான வழிகாட்டுதல், போதை மீட்பு சிகிச்சை, ஆதரவற்றோருக்கான மனநலச் சேவைகள், தொலைபேசி வழி மனநல ஆலோசனை சேவைகள் வழங்கப்படுகின்றன. மனநலப் பிரச்சினைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மனநலம் தொடர்பான கட்டுக்கதைகள், தவறான கற்பி தங்கள் ஆகியவற்றை நீக்கி அறிவியல்ரீதியான கருத்துகளைக் கொண்டுசேர்ப்பது ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள். பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் நீண்டகால மனநல மருத்துவச் சேவையின் மூலம் பலர் பயன் பெறுகின்றனர்.
36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற நோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவுகள் செயல்படுகின்றன. 28 மருத்துவ மனைகளில் போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு சேவைகளை வழங்கும் மையங்கள் செயல்படுகின்றன. சுமார் 750 படுக்கைகள் கொண்ட அரசு மனநல மருத்துவமனை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோருக் கான பராமரிப்பு சேவைகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மனநலமருத்துவச் சேவைகள் கட்டண மின்றி வழங்கப்படுகின்றன.
மனநலப் படிப்புகள்: மனநலப் பாதிப்புக்கான சிகிச்சை என்பது அனைவருக்குமானது. பொருளாதார அடிப்படையில் ஒருவர் பாதிக்கப்படலாம், பாதிக்கப்பட மாட்டார் எனப் பிரித்துப் பார்க்க முடியாது. பெரும்பாலும் தவறான கற்பிதங்களால் சூழப்பட்டிருக்கும் மனநலத் துறையின் மீதான பார்வையில் இருந்து மனநலப் படிப்புகளும் தப்பிக்கவில்லை.
எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களில் யாராவது மேற்படிப்புக்காக மனநலத் துறையைத் தேர்ந்தெடுத் தால் ‘அப்படியா’ என்கிற அதிர்ச்சியும், ‘இதர மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்கலாமே?’ என்கிற அறிவுறுத்தல்களையும் உறவினர்கள், நண்பர்கள் ஆகி யோர் தெரிவிப்பார்கள்.
ஆனால், தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்வரை எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்தத்துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் மனநலப் பாதிப்பு சிகிச்சைக்கான தேவை முன்பு இருந்ததை விட அதிகரித்துள்ளது. மன நலத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. எனவே விருப்ப முள்ளவர்கள் மனநலத் துறை சார்ந்த படிப்புகளைப் படித்து மனநல மருத்துவர், மனநலச் செவிலி, உளவியலாளர், மனநலத்தை ஆற்றுப்படுத்தும் ‘கவுன்சலர்’, சமூகப் பணியாளர் போன்ற பொறுப்புகளில் இத் துறையில் பணியாற்றலாம்.
(தொடர்ந்து பேசுவோம்)
- addlifetoyearz@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago