கேட்டாரே ஒரு கேள்வி
கிச்சுகிச்சு என்பதை titillate என்று கூறலாமா?
நண்பரே, குழந்தையின் பாதம், கழுத்து போன்ற இடங்களில் லேசாகக் கையை வருடிக் குழந்தையைச் சிரிக்கவைப்பதைக் கிச்சுகிச்சு மூட்டுவது என்பார்கள். நீங்கள் இதைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். இதற்கான ஆங்கிலச் சொல் tickle. I tickled her feet and she laughed.
கிசுகிசு என்பது வீண் வம்பு, ரகசியமாகப் பரவும் வதந்தி ஆகியவற்றைக் குறிக்கிறது. அதாவது gossip.
Titillate என்றால் ஒருவரது ஆர்வத்தைத் தூண்டும் விஷயம். அது பாலுணர்வு தொடர்பானதாக இருக்க வாய்ப்பு அதிகம்.
******************************
“You said a mouthful” என்ற வசனத்தை ஆங்கிலத் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் கேட்டேன். இதற்கு என்ன பொருள்?”
இதைச் சிலர் You really said a mouthful என்றும் கூறுகிறார்கள்.
உங்களைப் பார்த்து யாராவது இப்படிக் கூறினால் நீங்கள் சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்லிவிட்டதற்காக அவர் பாராட்டுவதாகப் பொருள். அதாவது உங்கள் பேச்சு பொருள் பொதிந்ததாகவும், சரியான தீர்வுகளை அளிப்பதாகவும் இருக்குமென்று பொருள்.
“You said it’’ என்றால் ஒருவர் பேசியதை முழுமையாக அவர் ஒத்துக்கொண்டதாகப் பொருள். “You said it’’ என்பதைக் கூறும்போது கொஞ்சம் அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டும்.
******************************
‘ஆங்கிலோ இந்தியப் பெண் ஒருவர் தன் அம்மாவை ‘Mama’ என்று கூப்பிடுவதைப் பார்த்தேன்!’’ என வியப்படைகிறார் வாசக நண்பர் ஒருவர்.
உண்மைதான். நாம் தாயின் சகோதரரை அப்படித் தமிழில் கூப்பிடுவோம். அவர்கள் தாயை அப்படி ஆங்கிலத்தில் கூப்பிடுவார்கள்! அப்பாவை Papa. இது வட அமெரிக்காவிலிருந்து பரவிய வழக்கம்.
Mama இருக்கட்டும், ‘Muumuu’ என்றால் என்ன தெரியுமா?
ஹவாய் பகுதிகளில் உள்ள சில பெண்கள் மிக நீளமான, தளர்வான, பளிச்சென்ற ஒருவகை ஆடையை அணிவார்கள். அதற்குப் பெயர்தான் Muumuu. ஹவாயில் உள்ள துணிக் கடைக்குப் போகும்போது நீங்கள் வியப்படையக் கூடாது அல்லவா அதற்குதான் இந்த விளக்கம்.
******************************
“Even-steven என்று ஓர் இடத்தில் படித்தேன். இதற்கு என்ன பொருள்?”
சமமான, நியாயமான முறையில் பகிர்ந்துகொள்ளப்படுவதை Even-steven என்பார்கள். He says things are even-steven, but his wife thinks that he does not share the house work. இதற்குப் பொருள் வீட்டுப் பொறுப்புகளில் தானும் சமபங்கு வகிப்பதாகக் கணவர் கூறினாலும், மனைவி அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்.
“எதற்காக இதற்கு Steven என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டும். வேறு பெயரைப் பயன்படுத்தியிருக்கக் கூடாதா?” என்பவர்கள் “கிழிந்தது கிருஷ்ணகிரி’’ என்பதில் கிருஷ்ணகிரியை எதற்குப் பயன்படுத்த வேண்டும், வேறு ஊரின் பெயரைப் பயன்படுத்தி இருக்கக் கூடாதா என்பதற்கு பதில் கூறுங்கள். (எதுகைமோனைகள் இருந்தால் ஓர் எடுப்பு என்பதற்காகத்தான் Even steven, கிழிந்தது கிருஷ்ணகிரி எனப்படுகிறது.)
******************************
தடகள வீராங்கனை ஹிமா தாஸ் குறித்த கட்டுரையில் “She rose from scratch” என்பதைப் படிக்க நேர்ந்தது. இதற்கு என்ன பொருள்?
He built up her company from scratch and it is running profitably. இந்த வாக்கியத்துக்குப் பொருள் கிட்டத்தட்ட முதலீடு என்று பெரிதாக எதுவும் இல்லாமலேயே அவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் இன்று மிகுந்த லாபத்தை ஈட்டுகிறது என்று பொருள்.
From scratch என்றால் தொடக்கத்திலிருந்து அல்லது முன்னனுபவம் போன்ற எதுவுமே இல்லாமல்.
வாழ்க்கையில் அனைத்தையும் இழந்துவிட்டதாக இடிந்துபோய் இருப்பவரிடம் வாழ்க்கையில் அதேமாதிரி உயர்ந்த நிலைக்கு வந்தவர்களின் கதைகளை விரிவாகக் கூறி (அப்போதும் அவர் அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்றிருக்கவில்லை என்றால்) “You should make a new life from scratch” என்று கூறலாம்.
ஹிமா தாஸை அப்படிக் குறிப்பிட்டதுக்குக் காரணம், மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததும், குறுகிய காலப் பயிற்சியுடன் உலக அளவில் அவர் சாதனை படைத்ததும்தான்.
english 2jpg100
“நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களை ‘kiwi’ என்கிறார்களே. இந்தச் செல்லப் பெயருக்கு ஏதாவது பின்னணி உண்டா?”
நண்பரே kiwi என்பது பறக்க முடியாத ஒரு பறவை. இதன் உடல் முழுவதும் இறக்கைகளால் போர்த்தப்பட்டதுபோல இருக்கும். நீளமான, கூர்மையான அலகு கொண்டது. இது அதிகம் நியூசிலாந்தில் காணப்படுகிறது. எனவே, நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களை kiwis என்று செல்லமாகக் குறிப்பிடுகிறார்கள்.
கிவி என்று ஒரு பழமும் உண்டு. வெளியில் பார்க்கக் கொஞ்சம் சப்போட்டா மாதிரி இருக்கும். குறுக்கு வாட்டில் வெட்டினால் அதன் சதைப் பகுதி பச்சை வண்ணத்தில் இருப்பது தெரியவரும். நிறைய விதைகளும் இருக்கும்.
******************************
Jail என்றாலும், Prison என்றாலும் ஒன்றுதானா?
ஒன்று போலத்தான் இப்போது பயன்படுத்தப்படுகின்றன.
எனினும், நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு முன் குற்றவாளி என்று கருதப்படுபவரை அடைத்துவைப்பது Jail. சட்டப்படி சிறைத்தண்டனை அளிக்கப்பட்டவர்களை அடைத்துவைப்பது Prison. இப்படித்தான் நெடுங்காலமாகக் கருதப்பட்டுவந்தது.
சிப்ஸ்
# Celerity என்றால்?
வேகம். With great celerity he ran away.
# l Neutral என்றால்?
லத்தீன் மொழியில் ‘ne’ என்றால் இல்லை என்று பொருள். ‘Uter’ என்றால் இரண்டில் ஒன்று என்று பொருள். இதுவுமல்ல அதுவுமல்ல என்றால் neutral.
# l Lantern என்றால்?
கண்ணாடித் தகடுகளுக்கு நடுவே உள்ள விளக்கு. பெட்ரோமாக்ஸ் விளக்கு ஓர் உதாரணம்.
போட்டியில் கேட்டுவிட்டால்?
Which word is the nearest in meaning to ‘earliest’?
a) old
b) historical
c) primitive
d) pioneer
Old, historical என்றால் பழைய அல்லது தொன்மையான என்று பொருள். ஆனால், earliest என்பது ‘ஏதோ பழமையான’ அல்ல. ‘மிகமிக பழமையான’ அல்லது “மிகமிக முன்னதான’.
Primitive என்றால் பரிணாம வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் வாழ்ந்தவை தொடர்பானது என்று அர்த்தம். எ.கா.: Primitive mammals கல்வி அறிவு கிடைக்கப் பெறாத, நவீன நாகரிகம் அற்றவர்களை ‘Primitive people’ என்று அழைப்பதுண்டு. ஆக primitive என்பதை earliest என்று கூற முடியாது.
Pioneer என்றால் ஒன்றில் முதன்மையானது அல்லது முதன்மையானவர். ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு It pioneered this technology என்றால் அந்தத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டுபிடித்துச் செயல்படுத்தியது அந்த நிறுவனம்தான் என்று பொருள். She is a pioneer in the field of eco-tourism. ஆக earliest என்பது pioneer என்ற சொல்லுக்கு மிகவும் பொருந்துகிறது.
தொடர்புக்கு - aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago