புதுத் தொழில் பழகு 11: காகிதத் தொழில் சாதனையாளர்

By ஆர்.ஜெய்குமார்

‘எ

ட்டுத் திசைகளிலும் சென்றிவை விற்றே எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்’ என மகாகவி சுப்ரமண்ய பாரதி பாடினார். வெளிநாட்டில் சென்று அறிவை விற்பதற்குப் பதிலாக அங்கிருந்தே ஒரு அறிவை, யோசனையைப் பெற்று இந்தியா திரும்பியுள்ளார் ஒரு இளைஞர். அவர் திருச்சியைச் சேர்ந்த பிரவீன் குமார். அவர் கொண்டு வந்த அறிவு, சொந்தத் தொழில் செய்யும் யோசனை.

பிரவீன் குமார், 12-ம் வகுப்புவரை திருச்சியில் படித்தார். அப்போதே அவருக்குச் சொந்தமாகத் தொழில் தொடங்குவதுதான் விருப்பமாக இருந்தது. ஆனால், அவரது தந்தைக்கு மகன் லண்டனில் சட்டம் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பம். அதனால் தந்தை சொல்தட்டாமல் லண்டன் சென்றார். ஆனால், அங்கு அவரால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. சொந்தமாகத் தொழில் தொடங்குவது குறித்து அங்கிருந்தபடியே எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருந்திருக்கிறார்.

நினைத்தது நடந்தது

அப்படியான ஒரு நேரத்தில்தான் என்ன தொழில் தொடங்கலாம் என்ற கேள்விக்கான விடை கிடைத்துள்ளது. அது, ‘டிஷ்யூ’ காகிதம் தயாரிக்கும் தொழில். உணவகங்களில் கை துடைக்கத்தான் நாம் அதிகமாக டிஷ்யூ காகிதத்தைப் பயன்படுத்துகிறோம். ஆனால், லண்டனில் கழிவறைப் பயன்பாட்டுக்கும், முகம் துடைப்பதற்கும், உணவுப் பண்டங்களை கொண்டுவருவதற்கும் டிஷ்யூ காகிதம்தான் பயன்படுகிறது. அதனால் மாதாமாதம் மளிகைப் பொருள் வாங்குவதுபோல அங்கு டிஷ்யூ காகிதத்தை எல்லோரும் வாங்குகிறார்கள். இந்தியாவில் டிஷ்யூ பயன்பாடு இப்போதுதான் பெருகிவருகிறது. அதனால் இதையே தொழிலாகக்கொள்ளலாம் எனத் தீர்மானித்திருக்கிறார்.

praveenright

இந்தியா திரும்பியதும் டிஷ்யூ தயாரிப்புக்கான முக்கியமான மூலப் பொருளான காகிதத்தைக் குறித்து தேடிக் கண்டடைந்திருக்கிறார். யூகித்தபடியே டிஷ்யூ காகிதத்தின் பயன்பாடு இந்தியாவில் பெருகத் தொடங்கியது. இனியும் காலம் கடத்தத் தேவையில்லை என உடனடியாகக் களத்தில் இறங்கினார்.

இந்தத் தொழில் வசப்பட ஒரு மாதக் காலம் ஆகி இருக்கிறது. இவரையும் சேர்த்து மொத்தம் பணியாளர்கள் நால்வர்தான் தொடக்கத்தில் இருந்துள்ளனர். அதன்பிறகு தொழில் பெருகப் பெருக அதற்குத் தகுந்தாற்போல் இயந்திரங்களையும் அதிகப்படுத்தி இருக்கிறார் பிரவீன்.

விரிந்துவரும் வியாபாரம்

“காகிதத்தைப் பொறுத்தவரை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் காகிதம், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம் ஆகிய இரு வகையான காகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாங்கள் இரு வகையையும் பயன்படுத்துகிறோம். இவற்றில் மறுசுழற்சி காகிதத்தைப் பயன்படுத்துவதால் மரங்கள் காகிதங்களுக்காக வெட்டப்படுவது குறையும். இந்த வகை காகிதத்தின் பயன்பாடு இப்போது அதிகரித்துவருகிறது” எனும் பிரவீன் இப்போது மாதம் 13 டன்வரை டிஷ்யூ காகிதம் உற்பத்திசெய்துவருகிறார்.

தொடக்கத்தில் 3 டன் மட்டுமே அவரால் உற்பத்திசெய்ய முடிந்தது. டன் ஒன்றுக்கு தோரயமாக ரூ. 10,000 வரை வருமானம் கிடைக்கும் என பிரவீன் சொல்கிறார். இப்போது 14 பேர் இவரால் வேலை பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, புதுச்சேரி ஆகிய பிற மாநிலங்களுக்கும் ‘டிஷ்யூ’ காகிதத்தை மொத்த விற்பனைசெய்து வருகிறார். அவரது நிறுவனத்துக்கென ‘வீ ஃப்ரெஷ் ‘(Wee Fresh) என்ற பெயரில் ட்ரேட் மார்க்கையும் பெற்றுள்ளார். இப்போது டிஷ்யூ காகிதங்களை இலங்கை, மாலத்தீவு போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யத் தொடங்கியுள்ளார்.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்