பத்ம விருதுகள் முதல் குடியரசு தின விழா வரை: சேதி தெரியுமா? @ஜன. 21-27

By தொகுப்பு: மிது

ஜன.21: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மேற்கு வங்கள அரசு மேல்முறையீடு செய்தது.

ஜன.21: பாரிஸ் காலநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதேபோல டாலருக்குப் பதில் புதிய கரன்சியைக் கொண்டு வர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என்றும் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.

ஜன.21: உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானன் டெட்ராஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜன.21: சத்தீஸ்கர் வனப்பகுதியில் என்கவுன்ட்டரில் 27 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நக்சல் அமைப்பின் மூத்த தலைவர் சலபதியும் இதில் கொல்லப்பட்டார்.

ஜன.22: அமெரிக்காவுக்கு திறமையான வெளிநாட்டினர் தேவை என்பதால் எச்1பி விசா நடைமுறை தொடர்ந்து நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

ஜன.23: மதுரை அரிட்டாபட்டியில் தனியார் நிறுவனத்துக்கு வழங்கிய டங்ஸ்டன் சுரங்க அனுமதியை மத்திய அரசு ரத்து செய்தது.

ஜன.23: பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கினார்.

ஜன.23: 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகம் ஆகிவிட்டதாகவும் தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியது என்றும் அகழாய்வு முடிவுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

ஜன.24: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை முடித்து 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

ஜன.25: தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா, கிரிக்கெட்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்பட 113 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

ஜன.25: 2008 மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான பாகிஸ்தானி அமெரிக்கரான டேவிட் ஹெட்லியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த கனடா வாழ் பாகிஸ்தானியரான தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஜன.25: 2024ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்தது.

ஜன.26: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், இத்தாலிய வீரருமான ஜன்னிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜன.26. டெல்லியில் நடைபெற்ற நாட்டின் 76ஆவது குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ பங்கேற்றார்.

ஜன.26: இந்தியாவின் முதல் பைபாஸ், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கே.எம். செரியன் (82) காலமானார்.

ஜன.27: உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் உத்தராகண்ட் ஆகும்.

ஜன.27: வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒப்புதல் அளித்தது. 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஜன.27: சனாதனம் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் எதையும் மீறவில்லை என்று கூறி, அவருக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜன.27: 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்தது.

தொகுப்பு: மிது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்