ஜம்மு, காஷ்மீரைக் கைப்பற்றுவதன் மூலம் இந்தியாவைப் பாகிஸ்தானால் கைப்பற்ற முடியுமா, டிங்கு? - ம. சங்கேஷ்ராஜ், 8-ம் வகுப்பு, வி.எம்.ஜெ. மேல்நிலைப் பள்ளி, மதுரை.
ஜம்மு, காஷ்மீரில் பிரச்சினை என்று அடிக்கடி செய்திகளில் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அந்த நாட்டைக் கைப்பற்றியது போல், இப்போது அவ்வளவு எளிதாகக் கைப்பற்றிவிட முடியாது.
ஏனென்றால் அப்படிக் கைப்பற்றப்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களின் மனங்களை, ஆக்கிரமிப்பு செய்த நாடுகளால் வெல்ல முடிந்ததில்லை. அதனால்தான் சுதந்திரத்துக்காக மக்கள் நீண்ட காலம் போராடினார்கள்.
இறுதியில் சுதந்திரத்தை வென்றெடுத்தார்கள். எனவே இன்று நாட்டின் ஒரு பகுதியை அவ்வளவு எளிதாகக் கைப்பற்றிவிடவும் முடியாது. அப்படியே கைப்பற்றினாலும் மொத்த நாட்டையும் கைப்பற்றியதாகவும் ஆகாது. அதோடு சர்வதேச சட்டங்களும் ஐ.நா. போன்ற அமைப்புகளும் நாடுகளின் சுயாட்சி உரிமையைப் பாதுகாக்கின்றன.
ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆக்கிரமிப்பது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. நவீன உலகில் நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வர்த்தகம், தொழில்நுட்பம், கலாச்சாரம் எனப் பல தளங்களில் பிணைந்துள்ளன. இதனால் படையெடுப்புகள் மூலம் நாடுகளைக் கைப்பற்றுவது பெரும்பாலும் சாத்தியமற்றது, சங்கேஷ்ராஜ்.
சர்க்கரை நோயாளிகளுக்குப் புண் சீக்கிரம் ஆறுவதில்லையே, ஏன் டிங்கு? - அ. அருண் பாண்டியன், 6-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
இன்சுலின் என்பது ஒரு வகை ஹார்மோன். ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உயிரணுக்களுக்கு அனுப்பி, அவை செயல்படுவதற்கான ஆற்றலை வழங்குகிறது. இன்சுலின் பற்றாக்குறை ஏற்படும்போது, ரத்த குளுக்கோஸின் அளவு அதிகரித்து, நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.
ரத்த குளுக்கோஸ் நிரந்தரமாக அதிகரிக்கும்போது, அது வெள்ளை ரத்த அணுக்களைப் பாதிக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தில் வெள்ளை அணுக்களின் பங்கு முக்கியமானது. வெள்ளை ரத்த அணுக்கள் சரியாகச் செயல்படாதபோது, உடல் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட முடியாமல் போகிறது. ரத்த ஓட்டமும் குறைகிறது. காயங்களுக்கு ஊட்டச்சத்து வழங்கப்படுவதைக் கடினமாக்குகிறது. இதன் விளைவாகக் காயம் ஆறுவது தாமதமாகிறது, அருண் பாண்டியன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago