எலத்தூர் குளத்தில் அரிய வகை ஆற்று ஆலா பறவைகள்

By செய்திப்பிரிவு

உலகளவில் அழியும் நிலையிலுள்ள பறவைகளில் ஆற்று ஆலா பறவையும் (River tern) ஒன்று. கடந்த வாரம் ஈரோடு நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் குளத்திற்கு 30க்கும் மேற்பட்ட ஆற்று ஆலா பறவைகள் வந்துள்ளதை பறவைகள் ஆர்வளர்கள் ஆவணப்படுத்தி உள்ளனர்.

அழியும் நிலையில் உள்ள உயிரினங்களை வரையறை செய்யும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) சிவப்பு பட்டியலில் (Red list) அழியும் வாய்ப்புள்ள இனமாக (Vulnerable) ஆற்று ஆலா பறவைகளும் வரையறை செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைகளை சார்ந்து வாழும் ஆலா (Tern) பறவைகள் தமிழ்நாட்டில் 15 இனங்களும் இந்திய அளவில் 20 இனங்களும் வாழ்கின்றன. நீர் சார்ந்த சூழல் அமைப்பின் உணவுச் சங்கிலியில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

பெரும்பாலும் நன்னீர் பகுதிகளை சார்ந்து வாழும் ஆற்று ஆலா அங்குள்ள மீன்கள், நண்டுகள், பூச்சிகளை உண்டு வாழ்கின்றன. நீர் நிலையின் மேல் பரப்பில் பறந்தவாறே நீரினுள் உள்ள இரையினை கண்காணித்து இரையை கண்டதும் நீரின் மேற்பரப்பை நோக்கி பாய்ந்து இரையை பிடித்து மேல் எழும்பும்.

கருப்பு உச்சந்தலை

அடர் சாம்பல் நிற மேல் பகுதி, அடர் மஞ்சள் நிற அலகு, சிவப்பு நிற கால்கள், இரண்டாகப் பிளந்திருக்கும் வால் பகுதி, இனப்பெருக்க காலத்தில் கருப்பு உச்சந்தலை போன்றவற்றை கொண்டு இவற்றை அடையாளம் காணலாம்.

நன்னீர் நிலைகளில் உள்ள மண்/மணல் திட்டுக்களிலும் தீவுகளிலும் தரையில் கூடமைத்து இவை இனப்பெருக்கம் செய்கின்றன. தரையில் ஒரு சிறிய பகுதியை சுரண்டி அங்கு மூன்று முதல் நான்கு முட்டைகளை இட்டு குறைந்தபட்சம் 18 முதல் 19 நாட்கள் வரை அடைகாக்கின்றன. ஒரு மாதம் வரை உணவு ஊட்டி குஞ்சுகளை வளர்க்கின்றன.

அழிவின் விளிம்பில்

ஆற்று ஆலாவின் எண்ணிக்கை உலக அளவில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மட்டுமே உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆறு, குளம், ஏரி போன்ற நன்னீர் நிலைகளில் இப்பறவைகள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக உள்ள மண் மற்றும் மணல் திட்டுக்கள் / தீவுகள் சமகாலத்தில் மனித செயற்பாடுகள் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து அழிக்கப்பட்டு குறைந்து வருவது ஆற்று ஆலா பறவை இனம் அழிவின் விளிம்பை எட்டி உள்ளதற்கான காரணமாக பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கிறார்கள்.

பாதுகாக்கப்பட வேண்டிய பறவை இனமான ஆற்று ஆலா அதிக எண்ணிக்கையில் ஈரோடு மாவட்டம் எலத்தூர் குளத்திற்கு வந்து மீன்களை வேட்டையாடி உண்டு வருவது எலத்தூர் குளத்தின் உயிர்ப்பன்மையையும் சூழலியல் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

192 வகையான பறவைகள் வாழும் எலத்தூர் குளத்தை முறையாக பாதுகாத்திட வேண்டும் என பொதுமக்கள், எலத்தூர் பல்லுயிர் மேலாண்மை குழு மற்றும் சூழலியல் அமைப்பினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்