புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகரர் பவனி | தி.மலை தீபத் திருவிழா

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில் புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகரர் வெள்ளிக்கிழமை பவனி வந்து அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா 17 நாட்கள் நடைபெறும். காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த டிச.1-ம் தேதி விழா தொடங்கியது. மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும், 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் மாடவீதியில் வலம் வந்தனர். 63 நாயன்மார்கள், வெள்ளி தேரோட்டம் மற்றும் மகா தேரோட்டம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக 9-ம் நாள் உற்சவம் நேற்று நடைபெற்றது. காலையில் நடைபெற்ற உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகரர் ஆகியோர் மாட வீதியில் பவனி வந்து அருள் பாலித்தனர். பின்னர், இரவு நடைபெற்ற உற்சவத்தில் கைலாச வாகனம் மற்றும் காமதேனு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி வலம் வந்தனர். இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர், 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலையின் உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன், இதற்கான பணியில் ஈடுபடும் பக்தர்கள் கொண்டு சென்றனர்.

மகா தீப கொப்பரையில் சிவ, சிவ என எழுதப்பட்டும், ஆண் - பெண் சமம் என்பதை உணர்த்தும் அர்த்தநாரீஸ்வரர் படம் வரையப்பட்டிருந்தது. இதேபோல், மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 4,500 கிலோ நெய் மற்றும் திரி-க்காக ஆயிரத்து 500 மீட்டர் காடா துணி ஆகியவை அடுத்தடுத்து கொண்டு செல்லப்படவுள்ளன. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

மேலும்