ஒமேகா மியூசியம், ஸ்வாச் மியூசியம், ரோலெக்ஸ் மியூசியம் போன்ற பல கடிகார அருங்காட்சியகங்கள் சுவிட்சர்லாந்தில் உண்டு. என்றாலும் பலரும் எங்களுக்குப் பரிந்துரைத்தது ஜெனீவாவிலுள்ள ’பதேக் பிலிப்’ மியூசியத்தை.
உலகின் தலைசிறந்த கடிகாரக் காட்சியகங்களில் ஒன்று இது. கடந்த சில நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் கடிகாரங்களின் உருவாக்க வரலாற்றை இது காட்சிப்படுத்துகிறது. சுமார் 2,500 கைக்கடிகாரங்கள் மற்றும் பாக்கெட் கடிகாரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகை. ஐரோப்பிய வரலாற்றை, குறிப்பாகக் கடந்த கால சுவிட்சர்லாந்தை, நினைவுபடுத்துகின்றன இந்தக் கைக்கடிகாரங்கள்.
1839இல் கைக்கடிகாரங்களைத் தயாரிக்கத் தொடங்கியது பதேக் பிலிப். அப்போதிலிருந்து சிறிது சிறிதாக உருவாக்கப்பட்டது இந்த அருங்காட்சியகம். குறிப்பாகச் சொல்வதென்றால் பதேப் பிலிப் நிறுவனர்களில் ஒருவரான ’பிலிப் ஸ்டெர்ன்’ என்கிற ஒற்றை மனிதரின் முயற்சிகள்தான் இந்த அற்புதமான அருங்காட்சியகத்தை உருவாக்கியிருக்கிறது. இங்கு இருப்பது ஒரு குறிப்பிட்ட பிராண்ட் கடிகாரங்கள் அல்ல.
அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் கைக்கடிகாரங்களில் செதுக்குவது, எனாமல் பூசுவது, கற்களைப் பதிப்பது போன்ற வேலைகள் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதல் தளத்தில் தனிச் சிறப்புப் பெற்ற ’பதேக் பிலிப் கடிகாரங்கள்’ பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை எப்படி இயங்குகின்றன, மிகத் துல்லியமாக இயங்க எவ்வளவு பாகங்கள் அவற்றில் பொருத்தப் படுகின்றன என்பதெல்லாம் குறும்படங்களாகவும் காட்டப்படுகின்றன. மிக மிக நுட்பமான, மிகச் சிறிய பாகங்களை உருவாக்கவும் பொருத்தவும் எவ்வளவு உழைப்பு தேவைப்படும் என்பது சிலிர்க்க வைக்கிறது. ’நாடிலஸ்’ கைக்கடிகாரத்தின் தற்போதைய விலை சுமார் ஒன்றேகால் கோடி (இந்திய மதிப்பில்?).
இரண்டாவது தளத்தில் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை உருவான அற்புதக் கைக்கடிகாரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பலவற்றில் ஏசுநாதர் தொடர்பான நிகழ்ச்சிகள், கிறிஸ்தவத் தூதர்கள் போன்றவர்களின் ஓவியங்களும் காட்சியளித்தன.
விலங்குகள், பறவைகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்ட கடிகாரங்களும் இருந்தன. ஒவ்வொரு கடிகாரமும் ஒவ்வோர் அளவு, ஒவ்வொரு வடிவம். ஒரு காலத்தில் பெரும் செல்வந்தர்களின் செல்வக் குறியீடாக மட்டுமே கைக்கடிகாரம் இருந்து வந்திருக்கிறது என்பது உணர்த்தப்படுகிறது. ஒவ்வொரு பொருளின் கீழும் பிரெஞ்சு, ஆங்கிலத்தில் குறிப்புகள் அளித்திருப்பது மிக வசதியாக இருக்கிறது.
பாக்கெட் கடிகாரங்கள், கைக்கடிகாரங்கள் தயாரிப்புகளில் பொதிந்திருந்த படைப்பாற்றல் பிரமிக்க வைத்தது.
கடிகாரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகள் கலை நயத்தோடு உள்ளன. குறிப்பாக அங்குள்ள ஒளி அமைப்பு மிகச் சிறப்பு. இன்றுகூடத் துல்லியமாகவும் தரமாகவும் கடிகாரங்களைத் தயாரிப்பது, அவற்றை அதிக அளவில் ஏற்றுமதி செய்வது சுவிட்சர்லாந்துதான்.
அதற்கு அடுத்ததாக சுவிட்சர்லாந்து ஈடுபடுவது ரசாயனத் தொழில்களில். மூன்றாவதாக நறுமணப் பொருள்களின் தயாரிப்பில். வாசனை திரவியங்களில் மட்டுமல்ல, கசப்பான மருந்துகளில் அந்தக் கசப்பு தெரியாமல் இருப்பதற்காகச் சேர்க்கப்படும் பொருள்களைத் தயாரிப்பதிலும் முன்னணியில் இருக்கிறது சுவிட்சர்லாந்து. குறிப்பாக ஜெனீவா மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ளவர்களில் 1 சதவீதம் பேர்தான் விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நும்பியோ என்கிற ஆன்லைன் அமைப்பு சமீபத்தில் செய்த கணிப்பின்படி உலகிலேயே மிக அதிகமாக விலைவாசி கொண்டதாகத் திகழும் நகரம் ஜெனீவாதான். இங்கு பேசப்படும் முக்கிய மொழி பிரெஞ்சு. பிராட்டஸ்டாண்ட் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.
(பயணம் தொடரும்)
முந்தைய அத்தியாயம் : ஸ்விஸ் எனும் சொர்க்கம் 27: போர் கொடுமைகளின் சாட்சி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago