நேரமும் பொன்னும் ஒன்றல்ல | சக்ஸஸ் ஃபார்முலா - 28

By நஸீமா ரஸாக்

நான்கு மாதம் முன்பு சச்சுவோடு சங்கீத வகுப்புக்குப் போன ஞாபகம். அவள் ஆர்வத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் கண்டிப்பாக ஒரு நாள் கச்சேரி செய்வாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு மாதமாக அந்தச் சச்சுவுக்கும் இந்தச் சச்சுவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதவர் போல் இருக்கிறார்.

“சச்சு, ஏன் கொஞ்ச நாளா பாட்டு க்ளாஸ் போகல? நல்லாதானே கத்துக்கிட்டு இருந்த.”

“என்னத்த சொல்ல, வேலைல வாரம் முழுக்கப் போகுது. வீக் எண்ட்ல கூட மிச்சம் வேலையைத் தலைல சுமந்துகிட்டு இருக்கேன்.”

“இதெல்லாம் சப்பக்கட்டு நான் ஒத்துக்க மாட்டேன். நேரம் இல்லனு சொல்லாத உன் ஆர்வம் குறைஞ்சிடுச்சுனு சொல்லு.”

சச்சுவுக்குச் சட்டென்று மூக்கு சிவந்தது. “ஊருக்குப் போய் அம்மா, அப்பாவைப் பார்த்து ஒரு மாசம் ஆகுது. நேரம் இல்ல என்பதுதன உண்மை.”
”அதைச் சரி செய்யணும்னு உனக்குத் தோன்றியிருக்கா?”

நேரம் என்பது அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும் ஒரே வளம். உலகின் மிகப் பெரிய செல்வந்தர் முதல் சாதாரண மனிதர் வரை, அனைவருக்கும் ஒரு நாளில் 24 மணி நேரம்தான். ஆனால் சிலர் இந்த நேரத்தில் மலைகளை அசைக்கிறார்கள், மற்றவர்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். வேறுபாடு என்ன? நேர மேலாண்மைதான்.

நம் முன்னோர்கள், ’காலமே கனி’ என்றார்கள். அதாவது நேரமே வாய்ப்பு. நேரமே வளம். நேரமே வாழ்க்கை. நாம் நம் வாழ்நாளில் சராசரியாக 27,375 நாள்கள் வாழ்கிறோம். ஒவ்வொரு நாளும் 1,440 நிமிடங்கள். ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது.

இன்றைய நவீன உலகில், நேர மேலாண்மை என்பது வெறும் தேர்வு அல்ல. அது ஓர் அவசியம். டிஜிட்டல் யுகத்தில், நம்மைச் சுற்றி எண்ணற்ற கவனச்சிதறல்கள் - சமூக ஊடகங்கள், தொலைபேசி அறிவிப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையதளப் பொழுதுபோக்குகள் இருக்கின்றன. இவற்றுக்கிடையே நமது நேரத்தைச் சரியாக நிர்வகிப்பது என்பது ஒரு கலை. இந்தக் கலையைக் கற்றுக்கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.

மேலும், நேர மேலாண்மை என்பது வெறும் கடிகாரத்தைப் பார்த்து வாழ்வது அல்ல. அது நமது குறிக்கோள்கள், கனவுகள், முன்னுரிமைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றை அடைவதற்கான திட்டமிட்ட பயணம். ’நேரம் பொன் போன்றது’ என்பார்கள். உண்மையில், நேரம் பொன்னைவிட விலைமதிப்பற்றது. ஏனெனில், இழந்த பொன்னைத் திரும்பப் பெறலாம், இழந்த நேரத்தைத் திரும்பப் பெற முடியாது.

நேர மேலாண்மை என்பது கலை என்றால் அதைக் கற்றுக்கொள்ள வழிகள் இருக்குமல்லவா? அதிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து, சரிபார்த்து, சோதனை செய்து, பயன் அளித்த 10 வழிகள்:

1. எந்தச் செயலைச் செய்வதற்கு முன்பு அதன் அவசியத்தையும் அவசரத்தையும் புரிந்து கொள்ளுங்கள். அவசர அடிப்படையில் செய்ய வேண்டிய வேலைகளுக்குத் திட்டமிட ஆரம்பியுங்கள்.

2. ’காலை திட்டமிடல்’ என்பது மிக முக்கியம். அதாவது காலை எழுந்தவுடன் முதல் வேலையாக முடிக்க வேண்டிய வேலைகளின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். முக்கியமான வேலையை முதலில் ஆரம்பியுங்கள்.

3. ’மாலை மதிப்பீடு’ என்பது காலை திட்டமிடலின் மிச்சம். அதாவது முடிக்காத வேலையின் பட்டியல். அதில் மிக முக்கியமானதைத் தூக்கி மறு நாளின் முதல் பணியாகச் செய்ய வேண்டும்.

4. இவ்வளவு பார்த்துப் பார்த்துச் செய்தாலும் நேரத் திருடர்கள் நிறைந்த காலம் இது. இனி தப்பித்தாலும் மாட்டிக் கொள்வோம். மீண்டு வருவது எளிதல்ல. தேவையற்ற திட்டமிடாத சந்திப்புகள், கால வரையறை இன்றி அலைபேசியில் நேரம் கழிப்பது. திட்டமிடாமல் நேரம் போக்கினால், நேரம் இல்லை என்கிற வாக்குமூலம் தரத் தயாராவீர்கள்.

5. ’முதல் மணி நேரம் விதி’ என்று ஒன்று இருக்கிறது. அதாவது நாளின் முதல் மணி நேரத்தில் மிக முக்கியமான பணியைச் செய்ய முடிவெடுப்பது.

6. நடைமுறைக்கு ஒவ்வாத திட்டமிடல்களைத் தவிர்ப்பது நல்லது. எது சாத்தியம்? எது முக்கியம்? இந்தப் புரிதல் இருந்தால் போதும்.

7. எந்தச் செயலைச் செய்ய ஆரம்பித்தாலும், ’நான்கு முறை’ விதியை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ’திட்டமிடல்’, ’செயல்படுத்தல்’, ’சரிபார்த்தல்’, ‘முடித்தல்.’ இப்படிச் செய்வதால் மனம் கவனமாகச் செய்ய ஆயத்தமாகும்.

8. நேர மேலாண்மை என்பது வேலைகளில் மட்டுமல்லாமல், வீட்டின் பொறுப்புகளிலும் கொண்டு வர வேண்டும்.

9. அலுவலக வேலையே வாழ்க்கை என்று இல்லாமல் தனக்குப் பிடித்த கலையைக் கற்றுக் கொள்ள அல்லது கற்றுக் கொடுக்க என்று ஏதாவது ஒன்றுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அலுவலக வேலையைக் காரணம் காட்டி குடும்பத்தில் நேரம் இல்லாமையைக் கொண்டு வந்தால் அது வெற்றியை அல்ல வெற்றிடத்தை நோக்கியே உங்களைத் தள்ளிவிடும் என்பதில் கவனமாக இருங்கள்.

10. மன அழுத்தம் குறையச் சிறந்த வழி, ’இரண்டு நிமிட’ விதி . இரண்டு நிமிடத்தில் முடிக்க வேண்டிய முக்கிய வேலை என்று ஏதாவது இருந்தால் அதைத் தள்ளிப் போடாமல் உடனே செய்துவிடுங்கள்.

நேர மேலாண்மை என்பது ஒரு கலை. இதனைச் சரியாகக் கற்றுக்கொண்டால், வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெற முடியும். நேரத்தை மதித்து, திட்டமிட்டுச் செயல்படுவோம். நினைவில் கொள்ளுங்கள் - நேரத்தை நிர்வகிப்பது என்பது வாழ்க்கையை நிர்வகிப்பது. இன்றே தொடங்குங்கள், மாற்றத்தை உணருங்கள்.

(தொடரும்)

- கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார். | தொடர்புக்கு: writernaseeema@gmail.com

> முந்தைய அத்தியாயம்: வாழ்க்கையைச் சுவாரசியமாக்கும் ஷோஷின் விதி | சக்ஸஸ் ஃபார்முலா - 27

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்