இதற்குத் தயங்க வேண்டாம்! | மனதின் ஓசை 1

By டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம்

அண்மைக் காலமாக, ஒரு மனிதனின் வெற்றி தோல்விக்கு அந்தத் தனிமனிதனே காரணம் என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது. இதனால் குழு செயல் பாட்டினைப் புறந்தள்ளி தனி நபர் முன்னேற வேண்டும் என்கிற அழுத்தம் அனைவருக்கும் பரவலாக உள்ளது.

இந்நிலையில் வெற்றியால் ஏற்படும் மகிழ்ச்சியையும் மனநிறை வையும் கையாளத் தெரிந்த ஒருவரால் தோல்வியைக் கையாள முடியாமல் போகிறது. தோல்வியின்போது ஏற்படும் ஒருவிதப் பதற்றமும் மன உளைச்சலும் ஒருவரைப் பின்னிழுக்கின்றன. தோல்விக்கான பல்வேறு காரணி களைப் புரிந்துகொண்டு, தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்வதும் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வும் ஒருவருக் குச் சவாலான காரியங்களாக மாறி விடுகின்றன.

தனித்தீவைப் போல… கரோனாவுக்குப் பிந்தைய காலக்கட்டத்தில், குறிப்பாகப் பதின் பருவத்தின ருக்குப் பிறரோடு பழகுவது, பேசுவது போன்றவற்றில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நேரத்தை உறிஞ்சும் திறன்பேசியிலேயே மூழ்கிக்கிடப்ப தாலும் கவனத்தைச் சிதறடிக்கும் இணையப் பயன்பாட்டாலும் எந்தவொரு விஷயத்தையும் குடும்பத்தின ரோடும், நண்பர்களோடும் அவர்கள் பகிர்வது குறைந்து விட்டது.

இதனால் ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் நண்பர் கூட்டத்தோடு இருந்தாலும் தனித் தீவைப் போலவே பெரும்பாலோர் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருப்பது இயல்பானதுதான் என்கிற தவறான மனப்பான்மையும் அதிகரித்துள்ளது. உரையாடலும், பகிர்தலும் குறைந்துவிட்டதால், பிறரிடம் உதவி கேட்கும் பழக்கம் அரிதாகி வருகிறது.

இதனால், வாழ்க்கைப் போராட்டங்கள் அதிகமாகும் போதும் சவால்களைச் சந்திக் கும்போதும் அவற்றைத் தனி ஆளாகச் சமாளிப்பதில் சிக்கல் எழுகிறது. இவ்வாறாக, சமூகப் பொருளாதாரச் சூழலும் தனி மனித சிக்கல்களும், பதின் பருவத்தினர் மட்டுமன்றி அனைத்து வயதினரயும் மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாக்கு கின்றன. கூடுதலாக, இன்றும் மனநலப் பிரச்சினைகளைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவும் உதவியை நாடவும் பலர் தயக்கம் காட்டுகின்றனர்.

மனநலம் மீதான ‘சமூகக் களங்க’த் தால் (Social stigma) ஒருவர் விவரம் அறிந்தவராகவே இருந்தாலும் மனத் தடையை நீக்கி உதவி கேட்க முடியாமல் மனப் போராட்டத்தில் சிக்கிக் கொள்கிறார். மனநலப் பிரச்சினைகள் பற்றியும் அதற்கான தீர்வைப் பற்றியும் போதுமான விழிப்புணர்வு இல்லாததும் இதற்கு வழிவகுக்கின்றன.

மனத்தடையை நீக்கும் இளம் தலைமுறை: காட்சி ஊடகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரையும் அதற்கான தீர்வு முறைகள் பற்றியும் உண்மைத் தன்மைக்கு நெருக்கமாகக் காட்சிப் படுத்துவதை விரல் விட்டு எண்ணி விடலாம். இதனால் மனநலம் பற்றிய தவறான பிம்பமே பள்ளி, கல்லூரி வயதுடைய மாணவர்களிடையே பரவலாக உள்ளது. மனநல ஆரோக்கியம் தொடர்பாகச் சமூக வலை தளங்களில் நிரம்பிக்கிடக்கும் போலியான தகவல் களைக் களைந்து அறிவியல்ரீதியான விளக்கங்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.

சமீபக் காலமாக, இளம் தலைமுறையினரிடையே, மனநலப் பாதிப்புகளுக் கான மருத்துவ உதவியை நாடுவது அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கிய மான விஷயமே. எனவே, பொது வெளியில் தொடர்ந்து மனநல ஆரோக்கியம் பற்றிப் பேசும் போதும் விவாதிக்கும்போதும் சரியான புரிதலோடு உளவியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும்.

மனநலப் பிரச்சினைகளுக்காக உதவி கேட்பதும், தீர்வு காண்பதும் ‘நார்மல்’ என்பதை அனைவரும் உணர்வது முக்கியம். போட்டி நிறைந்த இன்றைய சூழலில் பதின் பருவத்தினர், இளை ஞர்கள், கல்வி, விளையாட்டு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட வாழ்க்கைச் சவால்களைச் சமாளிப்பது எப்படி, அதையொட்டி எழக்கூடிய மன உளைச்சல்களைப் புரிந்துகொண்டு எப்படி அணுகலாம் என்பது போன்றவற்றை அடுத்தடுத்து உரையாடுவோம்!

(தொடர்ந்து பேசுவோம்)

- addlifetoyearz@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்