சினிமா பேட்டை | ப்ரியமுடன் விஜய் -1: விஜய் தலையில் பாறாங்கல்!

By விக்ரமன்

திரை வானில் உச்சத்திலிருக்கும் நேரத்தில் அரசியல் ஆடுகளத்துக்கு வந்திருக்கிறார் விஜய். இச்சமயத்தில் அவரது 40 ஆண்டு காலத் திரைப் பயணத்தில் அவருக்கு அடுத்தடுத்த வெற்றிகளையும் அடுத்த கட்டப் பரிமாணங்களையும் கொடுத்த திரைப்படங்களின் இயக்குநர்கள் விஜயுடனான தங்கள் நினைவுகளை இப்பகுதியில் பிரியமுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தன்னுடைய அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் எழுத்து - இயக்கத்தில், விஜய் தொடர்ந்து நடித்தபடி வளர்ந்து வந்த காலம் அது. அதிலிருந்து அவரை வெளியே இழுத்துப் போட்டு அவருக்குக் கண்ணியம் மிகுந்த முதல் திருப்புமுனையை ’பூவே உனக்காக’ படத்தின் மூலம் கொடுத்தார் இயக்குநர் விக்ரமன். மதம் மாறி நடந்த ஒரு காதல் திருமணத்தால் இரண்டு உயிர் நண்பர்களின் குடும்பங்கள் பிரிந்துவிடுகின்றன. அடுத்த தலைமுறையில் அதேபோன்றதொரு திருமணத்தால் பிரிந்த குடும்பங்களை மீண்டும் இணைத்து வைக்கும் ஒரு துடிப்பான இளைஞனின் கதைதான் படம். படத்தின் முடிவில் ‘தோல்வி அடைறதுக்கு காதல் ஒன்னும் பரீட்சை இல்லீங்க.. அதுவொரு ஃபீலிங். அது ஒரு தடவை வந்துடுச்சின்னா மறுபடி மறுபடி அதை மாத்திக்கிட்டு இருக்க முடியாது’ என்று காதலை உயர்ந்த இடத்தில் வைத்துவிட்டு, அதுவரை அந்த வீடுகளின் பேரனாக நடித்த நாயகன் ‘வாக் அவே’ செய்வார். காதல் எனும் உணர்வைக் கௌரவம் செய்த இந்தப் படத்தில் மட்டுமல்ல; தன்னுடைய எல்லாப் படங்களிலும் நேர்மறை சிந்தனை கொண்டவர்களாகவும் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் இளைஞர்களைச் சித்தரிப்பதில் தனித்து தடம் பதித்தவர் விக்ரமன். அவர், ‘பூவே உனக்காக’ பட நினைவுகளை இங்கே பகிர்ந்திருக்கிறார்:


“அப்போ இந்தியா முழுக்க ‘ஹம் ஆப்கே ஹெய்ன் கௌன்’ இந்திப் படம் பெரிய ஹிட். சென்னை உட்லேண்ட்ஸ் தியேட்டரில் 100 நாள்களைத் தாண்டி ரெக்கார்ட் பிரேக்கா ஓடிக்கொண்டிருந்தது. அது மாதிரி, குடும்ப மாக மக்கள் வந்து பார்க்கணும் இளம் ரசிகர்களுக்கானதாக கதை இருக்கணும் அது மியூசிக்கலாவும் இருக்கணும் என்றுதான் ‘பூவே உனக்காக’ படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தேன். முடித்ததுமே அக்கதையில் நம்பியார் சார், நாகேஷ் சார், விஜயகுமாரி அம்மா, சுகுமாரி அம்மா, மலேசியா சார், ஜெய் கணேஷ் சார் ஆகியோரையெல்லாம் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பது என்று முடிவுசெய்து, கதையைக் கூறி அவர்களைச் சம்மதிக்க வைத்து விட்டேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்