கடந்த 1980-க்கு முன்பு மற்றும் அதற்கடுத்த சில ஆண்டு கால கட்டங்களில், பானை, அடுப்பு என மண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்களின் பயன்பாடு பொதுமக்களிடம் அதிகளவில் இருந்தது. சாதம் சமைப்பதில் தொடங்கி, குழம்பு, ரசம் ஊற்றி வைக்கவும், தண்ணீர் சேகரித்து வைக்கவும், முக்கிய பொருட்களை போட்டு பாதுகாத்து வைக்கவும் மண்பாண்டங்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்தன.
குடிசை வீடு தொடங்கி மாடி வீடு வரையிலும் பல வித தேவைகளுக்காக மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர், காலப் போக்கில் பாதுகாப்பு இல்லாதது, எளிதில் உடைந்து விடும் தன்மை போன்ற வற்றாலும், கெட்டித் தன்மையுடன் அதிக காலம் உழைக்கும் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதாலும் 1980 களின் இறுதியில் இருந்து மண்பாண்டங்களின் பயன்பாடு மக்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கின.
கடந்த காலத்தை ஒப்பிடும் போது, தற்போதைய காலகட்டங்களில் அத்தியாவசியப் பயன்பாட்டுக்கு பானைஉள்ளிட்ட மண்பாண்டங்களை பயன்படுத்துபவர்களின் வீடுகளை விரல் விட்டு எண்ணி விடும் நிலை உள்ளது. மண் பாண்டங்களில் முக்கியமானது பானை. அதைத் தொடர்ந்து ஒரு கண் அடுப்பு, இரு கண் அடுப்பு, அகல் விளக்கு, பூந்தொட்டி, ஜாடி போன்ற பொருட்களை குறிப்பிடலாம். வெவ்வேறு வித அளவுகளில், தேவைக்கேற்ப இவற்றை தயாரித்து வருகின்றனர்.
தற்போதைய நவீன காலகட்டத்தில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை சமயங்களில் பொங்கல் சோறு வைக்கவும், கோயில்களில் திருவிழாக்களின் போது பூச்சட்டி வழிபாடு பயன்பாட்டுக்காகவும் தான் பானைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
» லடாக்கில் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவு: இந்திய ராணுவம்
» திருப்பூர் மாநகராட்சி உருவாகி 16 ஆண்டுகளாகியும் குப்பை கொட்ட பாறைக் குழியை தேடும் நிலை!
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மண்பாண்டங்கள் மற்றும் அதை சார்ந்த பொருட்களை தயாரிப்போர் இருந்து வந்தாலும், கோவை, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் தற்போதும் அதிகளவில் மண்பாண்டங்கள் தயாரிப்புகளில் ஈடுபடும் மக்கள் உள்ளனர். மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது, மேற்கண்ட மாவட்டங்களில் மண்பாண்டம் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் தயாரிப்பவர்களின் எண்ணிக்கையும், தயாரிக்கப்படும் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளது.
சரிந்த எண்ணிக்கை: ஆரம்ப காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் பல லட்சம் குடும்பத்தினர் பாரம்பரியமாக மண்பாண்டங்கள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், கால மாற்றத்தின் காரணமாக மாற்றுப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததால் பானை மற்றும் அதை சார்ந்த பொருட்கள் விற்பனை முடங்கியது.
உற்பத்தி செய்த பொருட்கள் தேக்கம், போதிய வரவேற்பின்மை, குடும்ப வறுமைச்சூழல், பொருளாதார பாதிப்பு போன்றவற்றால், வேறு வழியின்றி இத்தொழிலில் ஈடுபட்ட மக்கள் மாற்றுப் பணிக்கு செல்லத் தொடங்கினர். இதனால் தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் சில ஆயிரம் மட்டுமே மண்பானை மற்றும் அதை சார்ந்த பொருட்கள் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாக, கோடை காலங்களில் குளிர்ச்சியான நீர் தேவைக்காக மண் பானைகளை பயன்படுத்துவது மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதனால், குழாய்களை பொருத்தி, நவீன முறையில் மண்பானைகளை தயாரித்து தொழிலாளர்கள் பொதுமக்களிடம் விற்கின்றனர்.
ஒரு லட்சம் பேர்: கோவையைச் சேர்ந்த மண் பானை தயாரிப்பாளர்கள் கூறியதாவது: மண் பாண்டங்கள் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் தயாரிப்பு என்பது ஒரு கலை. ஒரு பானை செய்வதற்கு குறைந்த பட்சம் 6 மணி நேரம் ஆகும். களி மண், வண்டல் மண் கலவையை கலந்து, சல்லடையில் கல் இன்றி சலித்து, வடித்து திருவியில் மனைந்து பானை தயாரிக்கப்படும்.
பின்னர், தயாரித்த பானையை சூளையில் சில மணி நேரம் காய வைத்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஒரு லிட்டர், 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட சாப்பாட்டுப் பானை, தண்ணீர் தேக்கி வைக்கும் பானை, பருப்புப் பானை, மீன் குழம்பு பானை போன்றவை பானை வகைகளில் முக்கியமானதாகும்.
ஏறத்தாழ ரூ.150 முதல் ரூ.500 வரை வெவ்வேறு விலைகளில் பானையும், ரூ.200 முதல் ரூ.250 வரையிலான விலைகளில் ஒரு கண் அடுப்பும், ரூ.300 முதல் ரூ.350 வரையிலான விலைகளில் இரு கண் அடுப்புகளும் விற்கப்படுகின்றன. மேலும், ஜாடி, அலங்காரப் பூந்தொட்டி போன்றவையும் அதன் அளவுக்கு ஏற்ப தொகை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை சமயத்தில் அரசு சார்பில், ரேஷன் கடைகள் மூலமாக கார்டுதாரர்களுக்கு பொங்கல் செய்யதேவையான மூலப் பொருட்கள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்படுகின்றன. அதேபோல், ரேஷன் கடைகள் மூலம் கார்டுதாரர் களுக்கு தலா ஒரு மண்பானை, ஒரு மண் அடுப்பு ஆகியவற்றை அரசு இலவசமாக விநியோகிக்க வேண்டும்.
அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளின் வகுப்பறைகள் போன்றவற்றில் குடிநீரை தேக்கி வைக்க மண்பானைகளை வாங்கி வைக்க உத்தரவிட வேண்டும் என அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். சமையலுக்கு மண்பாண்டங்களை பயன்படுத்துவது அதிகரிக்கும் போது, உடலில் ஏற்படும் நோய் பாதிப்புகள் குறைந்து மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு செல்வது குறையும்.
மண்பாண்டங்கள் மூலம் செய்யும் உணவு வகைகள் சத்துள்ளதாகவும், எளிதில் கெடாத வகையிலும் இருக்கும். மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றவும், மண்பாண்டத் தொழில் மீண்டும் ஏற்றம் பெறவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago