இன்றைய டிஜிட்டல் இணைய உலக பயனர்களுக்கு பல்வேறு வகையில் மோசடியாளர்கள் வலை விரிக்கின்றனர். அதில் ஒன்றுதான் ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’ (Digital Arrest Scam). நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 120 கோடி ரூபாயை இந்திய மக்கள் இதில் இழந்துள்ளனர் என்ற புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. இந்திய மக்களை மிரட்டும் ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’ என்றால் என்ன என்பது குறித்து சற்றே விரிவாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: இணையவழியில் அப்பாவி மக்களை தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள், தங்களை அரசு துறையின் அதிகாரிகள் போல அடையாளம் காட்டிக் கொள்வார்கள். சட்டத்துக்கு புறம்பான செயலில் ஈடுபட்டதாக சொல்லி பொய்யான குற்றச்சாட்டுகளை அவர்கள் வைப்பார்கள். அதை வைத்து மக்களுக்கு மிரட்டல் கொடுப்பார்கள். பின்னர் பணப் பயன் பெறுவார்கள்.
இது எப்படி நடக்கிறது? - டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் தங்களை சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சுங்கத் துறை அதிகாரிகள் போல அடையாளம் காட்டிக் கொள்வார்கள். மேலும், இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்களை தொலைபேசி அழைப்பு வழியே தொடர்பு கொள்வார்கள். பெரும்பாலும் இந்த அழைப்புகள் இணையவழியில் மேற்கொள்ளப்படும். பின்னர் வீடியோ அழைப்பில் இணையுமாறு சொல்வார்கள்.
பெரும்பாலும் நிதி முறைகேடு, வரி ஏய்ப்பு போன்ற குற்றச்சாட்டுகளை சொல்லி, தங்களிடம் கைது செய்வதற்கான வாரன்ட் இருப்பதாக மறுமுறையில் இருப்பவரை மோசடியாளர்கள் மிரட்டுவார்கள். அவர்கள் மோசடியாளர்கள் என்பதை கொஞ்சம் கூட அடையாளம் காண முடியாத வகையில் அவர்களது செயல்பாடு தொழில் முறை நேர்த்தியுடன் இருக்கும். இதன்மூலம் அவர்கள் அசல் அதிகாரிகள் என நம்பச் செய்வார்கள்.
» சென்னையில் 595 பூங்காக்கள் பராமரிப்பை தனியாரிடம் விட முடிவு - மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
» ஓடிடியில் ஹிட்டான ‘மெய்யழகன்’ ஈட்டிய லாபம் என்ன? - சூர்யா விவரிப்பு
இந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்க தாங்கள் உதவுவதாக சொல்வார்கள். வழக்கில் இருந்து பெயரை நீக்க, விசாரணையில் உறுதுணையாக இருப்பதாகச் சொல்லி குறிப்பிட்ட வங்கிக் கணக்கு அல்லது யுபிஐ மூலம் பணம் அனுப்புமாறு சொல்வார்கள். பணத்தை பெற்றதும் அவர்களை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாது. அதன் பிறகே தாங்கள் மோசடியாளரிடம் பணத்தை இழந்துள்ளோம் என்பதை பாதிக்கப்பட்டவர்கள் அறிவார்கள்.
தப்பிப்பது எப்படி? - பொதுவாகவே மோசடிகளில் இருந்து தப்பிக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இணையவழியில் இயங்குபவர்கள் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும். இதிலிருந்து தப்பிக்க சில சில டிப்ஸ்:
இந்த மோசடியால் பணத்தை இழந்தவர்கள் செய்ய வேண்டியது என்ன? - டிஜிட்டல் கைது மோசடியால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தவர்கள் செய்ய வேண்டியது குறித்து பார்ப்போம்.
பிரதமர் மோடி எச்சரிக்கை: பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக மக்களுடன் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 115-வது அத்தியாயம் அக்.28-ம் தேதி ஒலிபரப்பானது. இதில், பிரதமர் மோடி பேசியது: “சமீப காலமாக ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி அதிகரித்து வருகிறது. காவல் துறை, சிபிஐ, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல நடித்து, தனிப்பட்ட நபர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு போலியாக மிரட்டல் விடுப்பார்கள். இவ்வாறு செய்து, தனி மனிதர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி வைத்துக் கொண்டு, அவர்களை நம்பவைத்து மிரட்டி, கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த லட்சக்கணக்கான பணத்தை அபகரித்து விடுகின்றனர்.
செல்போனில் இதுபோன்ற அழைப்புகள் வந்தால் நீங்கள் அச்சத்தை தவிர்க்க வேண்டும். அந்த சூழலில், நீங்கள் மூன்று விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். நிதானமாக இருங்கள், சிந்தியுங்கள், செயல்படுங்கள் என்பதுதான் அது. எந்த ஒரு அரசு அமைப்பும் இதுபோல செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்காது. அதேபோல, காணொலி அழைப்பு வாயிலாக விசாரணை மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். செல்போன் அல்லது காணொலி வாயிலாகவே மிரட்டி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்வதற்கு சட்டத்தில் இடம் கிடையாது என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.
இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் கும்பல்களை பிடிக்க அனைத்து புலனாய்வு அமைப்புகளும், மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்காகவே தேசிய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என மக்களை வீணாக மிரட்டி பணம் பறிக்கும் மோசடி நபர்கள் குறித்து தேசிய சைபர் கிரைம் உதவிஎண்ணான ‘1930’-ஐ தொடர்பு கொண்டோ, cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ தகவல் தெரிவிக்க வேண்டும். இத்தகைய மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே, இதுபோன்ற மோசடிகளுக்கு உடந்தையாக இருந்த லட்சக்கணக்கான சிம்கார்டு, செல்போன், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சைபர் மோசடிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் மாணவர்களை ஈடுபடுத்துமாறு பள்ளி, கல்லூரிகளுக்கு வலியுறுத்துகிறேன். சமூகத்தில் கூட்டு முயற்சியால் மட்டுமே இதுபோன்ற சவால்களை நாம் சமாளிக்க முடியும்” என்று பிரதமர் மோடி பேசினார்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளின் மூலமாக ரூ.120 கோடியை இழந்த இந்தியர்கள்: இதுகுறித்து சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைமை நிர்வாகி (ஐ4சி) ராஜேஷ் குமார், “கடந்த 2023-ம் ஆண்டில் பல்வேறு இணையவழி மோசடிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 15 லட்சம் புகார்கள் பெறப்பட்டன. இந்த நிலையில், நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை முதல் நான்கு மாதங்களில் மட்டும் 7.4 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 2022-ல் 9.60 லட்சமாக இருந்தது. இது, 2021-ல் பதிவான புகார்களை காட்டிலும் 4.5 லட்சம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
நடப்பாண்டின் முதல் காலாண்டில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக மிரட்டி இந்தியர்களிடமிருந்து ரூ.120.3 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, இணையவழி வர்த்தகம் என்ற பெயரில் ரூ.1,420.48 கோடி சுருட்டப்பட்டுள்ளது. மேலும், முதலீட்டு மோசடியால் ரூ.222.58 கோடியையும், ரொமன்ஸ் மோசடியால் ரூ.13.23 கோடியையைும் இந்தியர்கள் பறிகொடுத்துள்ளனர். இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட 46 சதவீதம் பேர் மியான்மர், லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து தங்களது கைவரிசையை காட்டியுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago