ஆங்கிலம் அறிவோமே 213: மகிழ்ச்சியோ...மகிழ்ச்சி...

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

ஒரு முழுச் சோம்பேறியை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கலாம்? Lazy fellow என்பதையும் தாண்டி ஏதாவது கூற முடியுமா?

------------------------------------------------

கீழே உள்ள பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா வார்த்தைகளும் சோம்பேறியைக் குறிப்பவை.

Slouch

Couch Potato

Lounge lizard

Slob

Deadbeat

இவை பேச்சுவழக்கில் உள்ளவை.

------------------------------------------------

Murphy Laws குறித்து இந்தப் பகுதியில் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். வாசகர் ஒருவர் தனது கடிதத்தில் இது குறித்து “You will never find an article until you replace it” என்று எழுதி இருக்கிறார். எனக்கு வேறு சில வாக்கியங்களும் நினைவுக்கு வருகின்றன.

1. When you dial a wrong number you never get a busy signal.

2. Any tool when dropped will roll into the least accessible corner of the workshop.

3. If everything is coming your way, you are in the wrong lane.

4. Never create a problem for which you do not have to answer.

சவால்களைச் சந்தோஷமாக ஏற்கும் வாசகர்களே, மேலே உள்ளவற்றில் முதல் பகுதியை மட்டும் கீழே தந்திருக்கிறேன். உங்கள் சிந்தனைக் குதிரையைத் தட்டிவிட்டு அவற்றின் இரண்டாவது பகுதியை வேறுமாதிரி மாற்றி அமையுங்கள்.

1. When you dial a wrong number

2. Any tool when dropped

3. If everything is coming your way

4. Never create a problem

உங்கள் வாக்கியங்கள் வித்தியாசமானவையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கட்டும். மூன்று நாட்களுக்குள் மின்னஞ்சலில் அனுப்பிவிடுங்கள். உங்கள் பெயர், ஊர் இரண்டையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.

------------------------------------------------

பயிலரங்கத்தின் தொடக்கத்தில் ‘icebreaker session’ என்ற ஒன்று இடம்பெறுகிறதே, அது என்ன என்பதை அறிய விரும்புகிறார் வாசகர் ஒருவர்.

சிலநேரம் கடல் நீர் பனியாக உறைந்துடும். அதையும் துளைத்துக்கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட கப்பலை ice-breaker என்பார்கள். ஆனால், வாசகர் குறிப்பிடும் வேறொரு அர்த்தத்தில் அந்த வார்த்தையை இப்போது அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

புதியவர்கள் கூடும் இடத்தில் ஒருவிதமான தயக்கமும் மெளனமும் நிலவுவது சகஜம். அப்போது ஒரு நகைச்சுவையோ வேடிக்கை விளையாட்டோ அவர்களுக்கிடையே உள்ள அசவுகரியத்தை நீக்கும். இதுபோன்ற செயலை ‘ice-breaker’ என்கிறார்கள்.

Ice தொடர்பான வேறு சில வார்த்தைகளையும் பார்த்துவிடலாமா?

ஒரு காலத்தில் பூமியின் பெரும்பகுதி பனிக்கட்டிகளால் சூழப்பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தை ice age என்பார்கள். நடுவில் தண்ணீர் அதைச் சுற்றிலும் பனிக்கட்டி - இப்படி இருக்கும் பகுதிகளை polynya என்பார்கள். ஆர்க்டிக் கடலின் பல பகுதிகளில் இதைக் காணலாம்.

Ice house என்பது பனிக்கட்டிகள் சேமித்து வைப்பதற்கான கட்டிடம்.

கடலின் கீழ் பனிப்பாளம் ஒரு மலைபோல இருந்து அதன் முனை மட்டும் கடலுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்தால் அதை iceberg என்பார்கள். கடலில் மிதக்கும் பெரிய அளவிலான பனிப்பாளம் என்றும் அதைக் கூறலாம். பனிமலையின் ஒரு பகுதி.

மெல்ல நகர்ந்து வரும் பிரம்மாண்டமான பனிப்பாளங்களை glacier என்பதுண்டு. மலையில் கீழே உருண்டு வரும் பனிப்பாளங்களையும் பாறைகளையும் avalanche (‘அவலாஞ்ச்’) என்பார்கள்.

“Cover one’s back” என்பதற்குப் பொருள் கேட்கும் வாசகருக்கான பதில் இது.

தாக்குதல் அல்லது எதிர்மறை விமர்சனம் எழ வாய்ப்பு உண்டு என்பதை முன்னதாகவே கணித்து அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதை இப்படிச் சொல்வார்கள்.

------------------------------------------------

TRP rating என்பதன் விரிவாக்கம் என்ன?

Television Rating Points என்பதன் சுருக்கம்தான் TRP. எனவே TRP rating என்றோ TRP points என்றோ கூறத் தேவையில்லை. இது தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளில் எவற்றைப் பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள் என்பதற்கான மதிப்பீட்டுப் புள்ளிகளின் கூட்டுத்தொகை. சில ஆயிரம் வீடுகளில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஒரு கருவி பொருத்தப்பட்டு அதன் மூலம் இது அறியப்படுகிறது. நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, விளம்பரங்களுக்கும் இது பொருந்தும்.

------------------------------------------------

‘Hurrah’ என்ற ஒரு வார்த்தையைக் கவனித்தேன். எதற்காக இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது?

வாசகரே, அந்த வார்த்தைக்கென்று தனி அர்த்தம் கிடையாது. அதிகப்படியான மகிழ்ச்சியை வெளிப்படுத்த இந்த வார்த்தை பயன்படுகிறது. “Hurrah! Our team has won”.

Hurrah என்பதற்கு எதிர்ச்சொல் alas எனலாம். பெரும் ஏமாற்றத்தையோ வருத்தத்தையோ வெளிப்படுத்த இந்த வார்த்தை பயன்படுகிறது. “Alas! Our team has lost”.

Hurrah என்பதை ‘ஹுரா’ என்று உச்சரிக்க வேண்டும்.

தொடக்கம் இப்படித்தான்

Marathon என்ற ஆங்கில வார்த்தைக்கு நீண்ட தூரம் என்று பொருளா ?

Marathon என்ற வார்த்தைக்குப் பொருள் அது அல்ல. கிரேக்க நாட்டில் இருந்த ஒரு குறுகலான பள்ளத்தாக்கு அது. கி.மு. 490-ல் அங்கு வசித்த குறைவான எண்ணிக்கை கொண்ட கிரேக்கப் படை வீரர்கள் பாரசீகப் படையை வென்றனர். அதேநேரம் கிரேக்கத் தளபதிக்கு ஒரு பயம். இந்த வெற்றியை அறியாத, கடற்கரைப் பகுதியில் வசித்த கிரேக்கப் படை பாரசீகப் படையிடம் சரணடைந்து விடுமோ என்று.

எனவே, தங்களது வெற்றிச் செய்தியை உடனடியாக அறிவிக்க விரும்பினார் கிரேக்கத் தளபதி. இதற்காக அதிவேகமாக ஓடக்கூடிய ஃபிடிபெடெஸ் என்பவரை அழைத்துப் பொறுப்பைக் கொடுத்தார். மராத்தனுக்கும், கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸுக்கும் இடையே 26 மைல் தூரம். இவ்வளவு தூரத்தையும் இடைவிடாமல் கடந்த அந்த ஓட்டப்பந்தய வீரர் “கொண்டாடுங்கள் - நாம் வென்றுவிட்டோம் (‘Rejoice – we conquer’)” என்று கூறிவிட்டுக் கீழே விழுந்தார், இறந்தார்.

நவீன ஒலிம்பிக் பந்தயங்கள் முதல் முறையாக 1896-ல் ஏதென்ஸில் (கிரீஸ் தலைநகர்) நடைபெற்றபோது 26 மைல் 385 கஜம் தூரம் கொண்ட ஓட்டப்பந்தயம் ஒன்றுக்கு Marathon என்று பெயரிடப்பட்டது. இந்தப் போட்டியில் அப்போது வென்றவர் கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பது சுவையான கூடுதல் விவரம்.

சிப்ஸ்

# He is comparatively poor என்பது சரியா?

இல்லை. யாரோடு அல்லது எந்த வகையினரோடு ஒப்பிடப்படுகிறார் என்பதையும் குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக, ‘He is the poorest of the two men’.

# CEOஎன்றால் முக்கியச் செயல் அதிகாரி. அதாவது Chief Executive Officer. இதைப் பன்மையில் குறிப்பிடும்போது CEOS என்று குறிப்பிட வேண்டுமா? அப்படியானால் இது வேறு எதற்கோ உரிய abbreviation போலத் தோன்றுகிறதே!

CEOs என்று குறிப்பிடுங்கள்.

# ‘Then the band played’ என்றால்?

அத்தோடு முடிந்துவிட்டது என்று அர்த்தம்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்