ஆங்கில​ம் அறிவோமே 218: ஏகப்பட்ட ‘மேக்அப்’ இருக்கு!

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

நீங்கள் ஒருமுறை சில தமிழ்த் திரைப்படப் பாடல்களின் முதல் வரியை ஆங்கிலத்தில் கொடுத்து மொழிபெயர்க்கச் சொல்லி இருந்தீர்கள். அதிலிருந்து எந்தத் தமிழ்ப் பாடலை முணுமுணுத்தாலும் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயல்கிறேன். ‘சுத்திச் சுத்தி வந்தீக’ என்ற பாடல் வ​ரியை எப்படி மொழிபெயர்க்கலாம்? ‘You came round me’ என்பது தவறாகப்படுகிறதே.

நண்பரே, ‘You came round me’ என்பதைவிட ‘you came around me’ என்றோ, ‘ you came around me in circles’ என்றோ கூறலாம். ஆங்கிலத்தில் gyrate என்று ஒரு வார்த்தை இருக்கிறது. இதற்கு வட்டவடிவில் அசைவது என்று பொருள். The dancers gyrated the floor.

-------------------

Cares என்றால் புரிகிறது அக்கறை காட்டுதல். Caress என்றால் என்ன அர்த்தம்?

இதமாகத் தடவிவிடுவது என்று அர்த்தம். அதில் கொஞ்சம் அன்பும் கலந்திருக்கும். She caressed his daughter’s forehead.

A gentle breeze caressed him என்று உருவகமாகவும் கூறலாம்.

சில நேரம் இப்படி ஒரே ஒரு எழுத்து சேர்வதாலோ, நீக்கப்படுவதாலோ அர்த்தமே மாறிவிடக் கூடும். இன்னொரு உதாரணம், needles, needless.

Can, cut, hop, scar, rob, mad, dam ஆகிய ஒவ்வொரு வார்த்தைக்குப் பிறகும் ‘e’ என்ற எழுத்து இறுதியில் சேர்க்கப்படும்போது அவை புதிய வார்த்தைகளாக மாறுவதைப் புரிந்துகொள்ள முடியும்.

-------------------

Make over என்பது make up over என்பதன் சுருக்கமா?

Makeover என்பது ஒரே வார்த்தை. ஒருவரை மேலும் அழகாக அல்லது கவர்ச்சிகரமாகத் தோற்றமளிக்கச் செய்வதற்காகச் செய்யப்படும் மாற்றங்களைத்தான் makeover என்பார்கள். ஒரு நபரை மட்டுமல்ல ஓர் இடத்தை அழகாகத் தோற்றமளிக்கச் செ​ய்யும் செயல்பாடுகளையும் makeover என்பார்கள்.

Make u​p என்பது ஒப்பனை மட்டுமல்ல. ஒருவரிடத்தில் முரண்பாடு ஏற்பட்டு சிக்கலாகும்போது எதிராளியை மன்னித்து மீண்டும் நட்பு பாராட்டுவதையும் make up என்பதுண்டு. ‘They shook hands and made up.’

Makeup என்பது ஒரே வார்த்தையாகப் பயன்படும்போது அது talcum powder, lipstick போன்ற அழகு சாதனப் பொருளைக் குறிக்கிறது.

-------------------

Singly - Singularly

Singly என்றாலும் singularly என்றாலும் ஒன்றுதானே?

இல்லை. Singly என்றால் ஒவ்வொன்றாக அல்லது ஒவ்வொருவராக. Doctors see their patients singly. The coach talked to the players singly and then in groups.

Singularly என்றால் தனித்துவம் மிக்க அல்லது விசித்திரமான என்று பொருள். He is a very decent man from singularly outstanding origins. She was very strange-looking and singularly dressed.

-------------------

Effacious என்பதன் பொருளைக் கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர். அது efficacious என்று இருக்க வாய்ப்பு உண்டு. இந்த வார்த்தைக்குப் பொருள் ‘தேவைப்படும் விளைவை உருவாக்குகிற’. Effective என்று சுருக்கமாகவும் கூறலாம். We want to know that what we do is not merely efficacious but right too.

பிரபல ஆங்கில எழுத்தாளரும் தத்துவவாதியுமான ஆல்டஸ் ஹக்ஸ்லி கூறிய “Written propaganda is less efficacious than the habits and prejudices of the readers” என்பதையும் படிக்கும்போது இதன் பொருள் மேலும் விளங்கும்.

-------------------

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் I red your mail என்று இருந்தது. Read என்பதன் இறந்த கால verb read-தான். ஆனால், அதை உச்சரிக்கும்போது மட்டும் ‘red’ என்பதுபோல உச்சரிக்க வேண்டும். எனவே “I read your mail yesterday” என்பதே சரி.

-------------------

“தொலைக்காட்சி மூலம் ஆங்கிலம் கற்றுக்கொள்வது அதிகப் பலனளிக்குமா அல்லது நாளிதழின் மூலம் ஆங்கிலம் கற்றுக்கொள்வது சிறந்த வழியா?”- இது ஒரு வாசகரின் கேள்வி.

அதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் அன்பரே! அதேநேரம் தொலைக்காட்சியையும், நாளிதழையும் ஒப்பிட்டு இரண்டு அறிஞர்கள் கூறிய அங்கதமான மேற்கோள்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

‘I find television very educational. Every time someone switches it on, I go into another room and read a good book’ – Marks Groucho.

‘Newspapers have degenerated. They may now be absolutely relied upon’ – Oscar Wilde.

-------------------

Ophthalmologist, Optometrist ஆகிய இருவரும் கண் டாக்டர்கள்தானே. அவர்கள் பணியில் வித்தியாசம் உண்டா என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

இந்த வார்த்தைகளுக்கான பொருள் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படலாம். பொதுவாகப் பார்த்தால் Ophthalmologist என்பவர் அடிப்படை மருத்துவம் படித்துவிட்டுக் கண் மருத்துவத்தில் சிறப்புக் கல்வி படித்திருப்பார். இவ​ரைத்தான் நாம் பொதுவாகக் கண் டாக்டர் என்கிறோம்.

Optometrist என்றால் கண்ணுக்கு மூக்குக் கண்ணாடி அவசியமா, அது என்ன பவரில் இருக்கலாம் என்பதைக் கணிப்பவர். Optometry என்பது கிரேக்க மொழியிலிருந்து வந்தது. Opto என்ற வார்த்தைக்குப் பார்ப்பது என்றும் meter என்ற வார்த்தைக்கு அளப்பது என்றும் பொருள்.

போட்டியில் கேட்டுவிட்டால்?

He has less knowledge but claims more. He is a --------

a) charlatan

b) egoist

c) cynosure

d) egotist

Egoist அல்லது egotist எனப்படுபவர் சுயநலவாதியாகவும் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பவராகவும் இருக்க வாய்ப்பு அதிகம்.

Cynosure என்றால் பலரது கவனத்தைக் கவரும் ஒருவர். He was the cynosure of all eyes என்றால் அனைவரது கவனமும் அவர்மீது இருக்கிறது என்று பொருள்.

ஆனால் இங்கு ‘குறைவான அறிவாற்றலும் பொது அறிவும் இருந்தும்கூடத் தனக்கு ஏதோ அதிகமாகத் தெரியும் என்பதாகக் காட்டிக் கொள்ளும் ஒருவருக்குப் பொருந்தும் வார்த்தைதான் கோடிட்ட இடத்தில் நிரப்பப்பட வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை charlatan என்பார்கள்.

எனவே, சரியான விடை He has less knowledge but claims more. He is a charlatan என்பதுதான்.

சிப்ஸ்

# Gazette என்பதன் பொருள் என்ன?

(அதிகாரபூர்வ) நாளிதழ்

# கணினித் துறையில் hacker என்பவர் யார்?

உரியவரின் அனுமதி இல்லாமலேயே அவரது கணினியில் உள்ள தகவல்களைத் தவறான நோக்கத்தில் பயன்படுத்துபவர்.

# Sail through என்றால்?

Succeed.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்