ரிலையன்ஸ் - டிஸ்னி ஸ்டார் இணைப்பு யாருக்கு லாபம்?

By கா.சு.துரையரசு

ரிலையன்ஸ் குழுமத்தின் 47-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில், அதன் தலைவர் முகேஷ் அம்பானி மிகுந்த முகமலர்ச்சியோடு,  'ரிலையன்ஸ் குடும்பத்துக்கு டிஸ்னியை வரவேற்கிறோம்’ என்று சொன்னார். அப்போது அதிகாரிகளும் ஊழியர்களும் ஆரவாரமாக அதனை வரவேற்றனர். உடனே ஊடகங்களில் முதலிடம் பிடித்தது அந்த செய்தி. இதற்கு காரணம்? இருக்கிறது.

ரிலையன்ஸ் குழுமத்தின் ‘வயோகாம் 18’ மற்றும் வால்ட் டிஸ்னியின் இந்திய பிரிவான ‘டிஸ்னி ஸ்டார்' ஆகியவை இணைந்து புதிய நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளன. இந்த இணைப்பின் மதிப்பு ரூ.70,352 கோடி. புதிய நிறுவனத்தில் ரிலையன்ஸின் பங்கு 16.34% ஆகவும் வயோகாம் 18 நிறுவன பங்கு 46.82% ஆகவும் (இதுவும் ரிலையன்ஸ் குழும நிறுவனம்தான்) டிஸ்னியின் பங்கு 36.84% ஆகவும் இருக்கும். ஆக, பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருப்பதன் மூலம் புதிய நிறுவனம் ரிலையன்ஸின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE