எதிர்காலத்தில் 25 மணி நேரம்!

By ம.சுசித்ரா

‘நே

ரமே போதல, ஒரு நாளைக்கு 24 மணி நேரத்துக்கும் அதிகமா இருந்தா நான் இன்னும் நிறையச் சாதிப்பேன்’…என்பது போன்று யோசிக்கும் நபரா நீங்கள்? உங்களுக்குப் புவியியல் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்திருக்கிறார்கள்.

‘எதிர்காலத்தில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறப்போகிறது’ என்பதுதான் அந்தச் செய்தி. 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் என்பது 18 மணிநேரம் 41 நிமிடங்களாக இருந்தது. அந்நிலையில் இருந்து தற்போது 24 மணி நேரத்துக்கு வந்தடைந்திருக்கிறோம்.

இதற்குக் காரணம் நிலவுச் சுற்றுப்பாதையின் அமைவிடத்துக்கும் பூமியின் சுழற்சிக்கும் இடையிலான தொடர்புதான் என்கிறார் அமெரிக்காவின் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் ஸ்டீவன் மேயர்.

பூமியின் சுழற்சி வேகத்தையும் அசைவையும் நிலவு உட்பட விண்வெளியில் சுழலும் பல கோள்களும் தீர்மானிக்கின்றன. இன்று சூரியக் குடும்பத்தில் ஒரு நுண்ணிய மாற்றம் நிகழ்ந்தால்கூட அதன் தாக்கம் கோடிக்கணக்கான ஆண்டுகள் தாண்டியும் எதிரொலிக்கும்.

இந்நிலையில், 9 கோடி ஆண்டு பழமைவாய்ந்த பாறை ஒன்றின் படிவங்களைக் கொண்டு சூரியக் குடும்பத்தில் நிலவும் குழப்பங்களை விளக்கக் கடந்த ஆண்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது பேராசிரியர் ஸ்டீவன் மேயர் தலைமையிலான ஒரு குழு. இந்த ஆய்வின் மூலம் தற்போது ஆண்டுக்கு 3.82 சென்டிமீட்டர் வேகத்தில் பூமியை விட்டு நிலவு விலகிச் சென்றுகொண்டிருப்பது கணிக்கப்பட்டிருக்கிறது.

இப்படித்தான் பல கோடி ஆண்டுகளாகப் பூமியை விட்டு விலகிச் சென்றுகொண்டிருக்கிறது நிலவு. அவ்வாறு பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிப்பதால் பூமியின் சுழற்சி வேகம் குறைந்துகொண்டே போகிறது. இதனால் பகல் பொழுது நீண்டுகொண்டே வருகிறது என்ற இந்த ஆய்வின் முடிவை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவின் ‘நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்’ இதழ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்