டிஜிட்டல் டைரி 8: இன்ஸ்டகிராமில் நீங்கள் எப்படி? - அலசி ஆராயும் புது சேவை

By சைபர் சிம்மன்

சமூக ஊடகத்தில் உள்ளடக்கம் (content) முக்கியம் என்றாலும் பெரும்பாலானோருக்கு அதன் வீச்சிலும் அதனால் கிடைக்கும் செல்வாக்கிலும்தான் ஆர்வம் அதிகம். விளைவு, சமூக ஊடகப் பதிவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை அலசி ஆராயும் சேவைகளும் புதிதாக அறிமுகமாகின்றன. இத்தகைய ‘மெட்ரிக்ஸ்’ (metrics), ‘அனல்டிக்ஸ்’ (analytics) சேவைகளுக்கு மத்தியில், இன்ஸ்டகிராமில் ஒருவரது ஆளுமையை அலசி ஆராயும் சுவாரசியமான இரண்டு சேவைகள் அறிமுகமாகியுள்ளன.

ரோஸ்டகிராம் (https://roastagram.lol/) - ரோஸ்டகிராம் எனும் சேவை இன்ஸ்டகிராம் தளத்தில் ஒருவரது ஆளுமை என்ன என்பதை லேசான கேலி கலந்த தன்மையில் கண்டறிந்து சொல்கிறது. இதற்கு பயனர்கள் தங்களது இன்ஸ்டகிராம் முகவரியை ரோஸ்டகிராமில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், உங்களது இன்ஸ்டகிராம் கணக்கு பூட்டு போட்டதாக அல்லாமல் பொதுவாக இருக்க வேண்டியது அவசியம்.

முகவரியைச் சமர்ப்பித்த பிறகு ஓர் இன்ஸ்டகிராம் கணக்கின் பதிவுகள், ‘பயோ’ போன்றவற்றை ஆராய்ந்து இந்த இன்ஸ்டகிராம் கணக்கை வைத்திருப்பவர் எத்தகைய ஆளுமை என்கிற தகவல்களை ரோஸ்டகிராம் வழங்குகிறது. கூடவே சுவாரசியமான ‘பஞ்ச்’ வசனங்களையும் வெளியிடுகிறது. செயற்கை நுண்ணறிவின் (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் உதவியோடு இது இயங்குவதாகத் தெரிவித்துள்ளார் இந்தச் சேவையை உருவாக்கிய ஹரீஷ் மிட்டல்.

பயனரின் இன்ஸ்டகிராம் பதிவுகள் மட்டுமல்லாது அவரது பகிர்வுகளையும் அலசி ஆராய்வதால் மட்டுமே ஆளுமை குறித்த தகவல்களை ரோஸ்டகிராமால் அலசி எடுக்க முடிகிறது. ரோஸ்டகிராமில், பிரபலங்களின் ஆளுமைகளும் அலசி ஆராயப்படுகிறது. கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட், கிரிக்கெட் வீரர் தோணி வரை எண்ணற்ற பிரபலங்களின் இன்ஸ்டகிராம் ஆளுமையை அலசிப் பார்க்கலாம்.

மைஇன்ஸ்டாபர்சனாலிட்டி (https://myinstapersonality.com/) - மைஇன்ஸ்டாபர்சனாலிட்டி என்கிற இந்தத் தளத்தில் பயனரின் ஆளுமை குறித்த அலசலோடு அதே குணாதிசயம் கொண்ட வேறோர் ஆளுமையோடு பொருந்தக்கூடியவர், அதே குணாதிசயம் கொண்ட பிரபலம் போன்றவற்றின் பரிந்துரைகளை வழங்குகிறது. ஓயாலே பீட்டர் எனும் மென்பொருளாளர் இந்தச் சேவையை உருவாக்கியுள்ளார். இது போன்ற சேவைகள் ஒருவரது இன்ஸ்டகிராம் பயன்பாட்டை மேம்படுத்திக்கொள்ள உதவுமா எனத் தெரியவில்லை ஆனால், இந்த அலசல்கள் சுவாரசியமாகவும் பொழுதுபோக்காகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

‘எக்ஸ்’ பயனருக்கு... - இதைப் போல, ஏஐ துணையோடு ‘எக்ஸ்’ பயனர்களின் ஆளுமையை அலசி ஆராய்ந்து சொல்ல ’வேர்டு வேர் ஏஐ’ (https://twitter.wordware.ai/) சேவையைப் பயன்படுத்தலாம். இணையதளத்தில் இத்தகைய அலசல் சேவைகளுக்கு குறைவில்லை என்றாலும், உண்மையிலேயே சமூக ஊடகப் பயன்பாட்டை ஆய்வுக்குட்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் அதற்குச் சுயபரிசோதனை செய்து கொள்வதே நல்லது. இதற்கான வழிகாட்டுதலை நாடுபவர் ‘ரிசர்ச்கேட்’ தளத்தில் பகிரப்பட்ட இந்த ஆய்வுக்கட்டுரையைப் படித்துப் பார்க்கலாம் - https://shorturl.at/vnTZX

முந்தைய அத்தியாயம்: டிஜிட்டல் டைரி 7: மீட்டெடுக்கப்பட்ட முதல் தேடுபொறி ‘ஆர்ச்சி’

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்