சேதி தெரியுமா?

By தொகுப்பு: மிது

ஜூலை 27: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நிதி ஆயோக்கின் 9ஆவது நிர்வாகக் குழு கூட்டத்தைத் தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், கேரளம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணித்தனர்.

ஜூலை 28: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் 10 மீ.

ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாகர் வெண்கலம் வென்றதன் மூலம் இந்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் பெண் என்கிற சாதனையைப் படைத்தார்.

ஜூலை 28: சி.பி.ராதாகிருஷ்ணன் (மகாராஷ்டிரம்), லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா (அசாம்), குலாப் சந்த் கபாரியா (பஞ்சாப்), ஓம் பிரகாஷ் மாத்துர் (சிக்கிம்), சந்தோஷ்குமார் கங்வார் (ஜார்க்கண்ட்), ஜிஷ்ணு தேவ் வர்மா (தெலங்கானா), ஹரிபால் கிசான்ராவ் (ராஜஸ்தான்), ராமன் தேகா (சத்தீஸ்கர்), விஜயசங்கர் (மேகாலயம்), கைலாசநாதன் (புதுச்சேரி) ஆகியோரை ஆளுநர்களாக நியமித்துக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார்.

ஜூலை 28: தம்புல்லாவில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஜூலை 30: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஜூலை 30: பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்றது.

ஜூலை 31: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டார்.

ஆக.1: பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச
நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

ஆக.1: ராணுவ மருத்துவச் சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா பதவியேற்றார்.

ஆக.1: பாரிஸ் ஒலிம்பிக் 50 மீ. ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE