சேதி தெரியுமா?

By தொகுப்பு: மிது

ஜூலை 20: உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நகரங்கள், மையங்கள் வாரியாகத் தேசிய தேர்வு முகவை வெளியிட்டது.

ஜூலை 22: பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக 81 வயதான அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

ஜூலை 23: புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டைப் புறக்கணித்துள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வர்
மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

நீட் தேர்வு முடிவை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஜூலை 24: அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் 2034இல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைறும் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது.

மரபணு மாற்றப்பட்ட கடுகு களப் பரிசோதனைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது.

ஜூலை 25: சுரங்கங்கள், கனிம நிலங்கள், குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலின் பெயர் கனதந்திர மண்டபம் என்றும் அசோக் ஹாலின் பெயர் அசோக் மண்டபம் என்றும் பெயர் மாற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார்.

ஜூலை 26: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. 206 நாடுகளைச் சேர்ந்த 10,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE